அவுஸ்திரேலியாவின் நியுகாசிலில் ரக்பி லீக் ரசிகர்கள் மத்தியில் காரை செலுத்தி 3 சிறுவர்கள் உட்பட பத்துபேரை காயப்படுத்திய இலங்கையை பூர்வீகமாக கொண்ட 18 .இளைஞனை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட நபர் இந்திக பம்பரிக் சமரசிங்க என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
நியுகாஸில் அணியை வழியனுப்பிவைப்பதற்காக ஆயிரக்கணக்கான ரசிகர்கள் நியுகாஸில் லிங் திரண்டிருந்தவேளை .இந்த இளைஞன் செலுத்திய கார் கட்டுப்பாட்டை இழந்து ரசிகர்கள் மீது மோதியுள்ளது.
கார் மோதியதன் காரணமாக இரண்டு முதல் 67 வயதுடைய 10 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.ஐந்து வயது சிறுமியொருவர் கோமா நிலையில் மருத்துவமனையில் உயிருக்காக போராடுகின்றார்.
நியுசவுத்வேல் காவல்துறை ஆணையாளர் டேவிட் வாடெல் இது திட்டமிடப்பட்ட தாக்குதல் அல்ல,வாகனம் கட்டுப்பாட்டை இழந்ததே இதற்கு காரணம் என தெரிவித்துள்ளார்.
காரை செலுத்திய இளைஞனின் வாகன ஒட்டுநர் உரிமம் இரத்து செய்யப்பட்டுள்ள அதேவேளை நீதிமன்றம் அவருக்கு பிணை வழங்க மறுத்துள்ளது