அல்லைப்பிட்டியில் இயங்கிவந்த தபோவனம் என்னும் சிறுவர் ஆற்றல் மையம் இன்று தீக்கிரையானது.
மின்ஒழுக்கு அல்லது விசமிகளின் செயலோவென அச்சம்தெரிவிக்கப்படுகிது.
மிகவும் செழிப்புமிக்க சோலைவனமாக காட்சிதந்த தபோவனத்தின் பிரதான மண்டபம் எரிந்துள்ளது மிக கவலை தருவதாக தெரிவிக்கப்படுகிறது.
டாக்டர் தயா சோமசுந்தரம் என்பவரால் மாணவர்களின் நன்மைகருதி ஆரம்பிக்கப்பட்ட தபோவனம் பாலர் வகுப்பிலிருந்து ஆண்டு 11 வரையான மாணவர்கள் பயன்படுத்திவந்தனர்
இங்குள்ள பெறுமதிமிக்க நூல்களும் தளபாடங்களும் எரிந்துள்ளது குறிப்பிடத்தக்து.
தென்னை மாமரங்கள் வேறுமரங்கள் சூழ்ந்து சோலைவனமாக காட்சிந்த தபோவனம் இப்பரிதாபநிலைக்காளாகியுள்ளளது.
இந்த தீவிபத்து சம்பந்தமாக ஊர்காவற்றுறை காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்