திருச்சி
திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், முன்னாள் அமைச்சர் பி.கே.சேகர்பாபு மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளையும் கேள்விகளையும் முன்வைத்தார்.
அமைச்சர் ரமேஷ் முன்வைத்த முக்கிய விமர்சனங்கள்:
வேவு பார்ப்பது ஏன்?:
-
“எங்கள் மீது எந்தத் தவறும் கிடையாது, நாங்கள் மிகவும் வெளிப்படையாக இருக்கிறோம் என்றெல்லாம் கூறும் முன்னாள் அமைச்சர் சேகர்பாபு, இந்த ஆட்சியில் அறநிலையத்துறை சார்பில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை அதிகாரிகளை வைத்து வேவு பார்க்க வேண்டிய அவசியம் என்ன?”
சட்டமன்றத்தில் பேசுவது சரியா?:
-
“நாங்கள் எந்தெந்த கோவில்களில் ஆய்வு செய்கிறோம், என்னென்ன புதிய செயல்பாடுகளை மேற்கொள்கிறோம் என்பதையெல்லாம் ரகசியமாகத் தெரிந்துகொண்டு, அதைச் சட்டமன்றத்தில் பேசுவது தவறு கிடையாதா? தன் மீது எந்தத் தவறும் இல்லை என்றால், தற்போதைய அரசாங்க விஷயங்களை அவர் ஏன் முன்கூட்டியே தெரிந்துகொள்ள நினைக்க வேண்டும்?”
மடியில் கனம்; மனதில் பயம்:
-
“மடியில் கனம் இருந்தால்தான் இதுபோன்று அரசுத் துறைக்குள் நடப்பவற்றை வேவு பார்க்கும் வேலைகளைச் செய்யத் தோன்றும். அரசுத் துறைக்குள் என்ன நடக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள நினைக்கிறார்கள் என்றால், இவர்கள் கடந்த காலத்தில் எவ்வளவு தவறுகளைச் செய்திருப்பார்கள் என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.”
-
“தாங்கள் செய்த தவறுகளை இந்த ஆட்சியில் நாங்கள் கண்டுபிடித்துவிடுவோமோ என்ற மிகப்பெரிய பயம் அவர்களுக்கு இருக்கிறது. அந்தப் பயம்தான் எங்களது ஆட்சிக்குக் கிடைத்த முதல் மாபெரும் வெற்றி,” என்று அமைச்சர் ரமேஷ் காட்டமாகத் தெரிவித்தார்.
#MinisterRamesh #PKSekarbabu #HRCEDepartment #TrichyNews #DMKvsTVK #TamilNaduNews #TNPolitics #ChiefMinisterVijay #TVKGovernment #ViralNewsTN #TrendingTN #LatestNewsTN #TNNewsUpdates