நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா இராமநாதன் ஒரு ஜோக்கர் என்றும், அவரைப் பற்றிப் பேசுவதற்கு எதுவுமே இல்லை என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் தெரிவித்துள்ளார்.
கோப்பாய் காவல் நிலைய திறப்பு விழாவில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரனிடம், களுத்துறையில் நடைபெற்ற மஹிந்த ராஜபக்ஷவின் பாராட்டு விழாவில் நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா இராமநாதன் கலந்து கொண்டமை தொடர்பில் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்குப் பதிலளித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்:
“நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா, மஹிந்த தரப்பைச் சேர்ந்தவர் என நாம் ஆரம்பத்திலேயே தெரிவித்திருந்தோம். தற்போது அவர் வெளிப்படையாகவே மஹிந்த தரப்பின் நிகழ்வில் பங்கேற்றுள்ளார். அவர் ஒரு ஜோக்கர், அவரைப் பற்றி விரிவாகக் கதைப்பதற்கு எதுவும் இல்லை