அமெரிக்கா மற்றும் ஈரான் படைகளுக்கு இடையே தீவிரமடையும் ஏவுகணை தாக்குதலினால் பெரும் பதற்றம்

அமெரிக்கா மற்றும் ஈரான் படைகளுக்கு இடையேயான தற்காலிக போர்நிறுத்த ஒப்பந்தம் முறிந்ததை தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையேயான போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.

இன்று திங்கட்கிழமை தொடர்ச்சியாக ஒன்பதாவது நாளாக ஈரானிய நகரங்களைக் குறிவைத்து அமெரிக்கப் படைகள் ஏவுகணை தாக்குதல்களை நடத்தியுள்ளன.

இதற்கிடையே, உலகின் மிக முக்கிய கடல் வழித்தடமான ஹோர்முஸ் நீரிணையில் இரண்டு எண்ணெய் கப்பல்கள் வெடித்துச் சிதறி செயலிழந்துள்ளதாக ஈரான் அறிவித்துள்ளதால் உலக அளவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈரானின் முக்கிய நகரங்களான தப்ரிஸ், சாபஹார், கொனாரக், பந்தர் மார்ஷஹர் மற்றும் பந்தர் இமாம் கொமேனி ஆகிய பகுதிகளில் அதிகாலையில் அமெரிக்க ஏவுகணைகள் தாக்கியதாக ஈரானிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

வணிகக் கப்பல்கள் மீதான ஈரானின் தாக்குதல் திறனை அழிப்பதற்காகவே இந்த புதிய அலை தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக அமெரிக்க மத்திய கட்டளையகம் தெரிவித்துள்ளது.

சர்வதேச கடல் வழித்தடங்களை ஈரான் கட்டுப்படுத்த நினைக்கும் வரை அமெரிக்காவின் இந்த பதிலடி தொடரும் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இந்த மோதல்களின் எதிரொலியாக பஹ்ரைன் நாட்டில் வான்வழித்தாக்குதலுக்கான அபாய சங்குகள் ஒலிக்கப்பட்டன. மேலும், ஈரான் அனுப்பிய அச்சுறுத்தல் தரும் ட்ரோன்களை தங்கள் நாட்டு இராணுவம் இடைமறித்து அழித்துள்ளதாக குவைத் அறிவித்துள்ளது.

அமெரிக்காவின் தாக்குதலுக்கு பதிலடியாக, ஜோர்டானில் உள்ள அகாபா விமான நிலையம், குவைத்தில் உள்ள அல்-அதிரி முகாம், அலி அல் சலிம் விமான தளம் மற்றும் சிரியாவில் உள்ள அமெரிக்க இராணுவ முகாம்களை குறிவைத்து தங்களது புரட்சிகர காவல் படை பயங்கர பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசி தாக்கியதாக ஈரான் தெரிவித்துள்ளது.

மேலும், குவைத்தில் உள்ள முக்கிய குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் ஒன்றின் மீது ஈரான் நடத்திய தாக்குதலில் அங்கு கடுமையான தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

அமெரிக்க இராணுவத்தின் வழிகாட்டுதலின் படி ஆபத்தான தெற்கு கடல் வழித்தடத்தைப் பயன்படுத்த முயன்ற இரண்டு எண்ணெய் சுத்திகரிப்பு கப்பல்கள் வெடித்துச்சிதறி, நகர முடியாமல் கடலிலேயே முடங்கியுள்ளதாக ஈரானியப்படை தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு தொடரும் வரை இந்த ஹோர்முஸ் நீரிணை வழித்தடத்தில் ஒரு சொட்டு எண்ணெய் அல்லது எரிவாயு கூட பாதுகாப்பாகச் செல்ல முடியாது என்றும் ஈரான் எச்சரித்துள்ளது.

இந்த பதற்றமான சூழலால் ஹோர்முஸ் நீரிணை வழியாக செல்லும் கப்பல்களின் எண்ணிக்கை பாதியாக குறைந்துள்ளது.

இதனால் உலகச் சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை 2 சதவீதம் உயர்ந்து, ஒரு பேரல் 90 டொலருக்கும் அதிகமாக விற்பனையாகி வருகிறது.

ஈராக்கின் வடக்கு பகுதியில் உள்ள அமெரிக்க இராணுவ முகாமில், வீழ்த்தப்பட்ட ஈரானிய ட்ரோன் ஒன்றைச் செயலிழக்க வைக்கும் போது ஏற்பட்ட வெடிவிபத்தில் அமெரிக்க வீரர் ஒருவர் சனிக்கிழமை உயிரிழந்தார்.

இதன்மூலம் இந்த போர் தொடங்கியதில் இருந்து இதுவரை உயிரிழந்த அமெரிக்க இராணுவ வீரர்களின் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது.மேலும் 420 க்கும் மேற்பட்ட வீரர்கள் காயமடைந்துள்ளனர்.

கடந்த பெப்ரவரி 28 அன்று ஈரானின் அணுசக்தி மற்றும் ஏவுகணைத் திட்டங்களை முடக்குவதற்காக அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து தொடங்கிய இந்த போரில், ஈரான் மற்றும் லெபனானில் இதுவரை ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

images (19)

சாவகச்சேரி நகர சபையின் உப தவிசாளராக முத்துலிங்கம் கோகுல்ராஜ்தெரிவு!

July 28, 2026

சாவகச்சேரி நகர சபையின் உப தவிசாளராக முத்துலிங்கம் கோகுல்ராஜ் திருவுளச்சீட்டு மூலம் தெரிவு செய்யப்பட்டுள்ளார். சாவகச்சேரி நகர சபையின் உப

5

மேகதாது விவகாரம்: பிரதமர் மோடி உடனடியாக தலையிட வேண்டும் – முதலமைச்சர் விஜய் வலியுறுத்தல்!

July 28, 2026

சென்னை: காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை என்று நாடாளுமன்றத்தில் மத்திய அரசு அளித்த அதிரடி

photo-collage.png (4)

செம்மணி மனித புதைகுழி பேரவலத்திற்கு யார் காரணமென்பது விசாரணைகளின் இறுதியிலேயே தெரிய வரும் – நீதி அமைச்சர்

July 28, 2026

செம்மணி மனித புதைக்குழி விவகாரத்தில் உண்மையான குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு உரிய தண்டனை வழங்கப்படும் என நீதி மற்றும்

s

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் கொழும்பில் ஆர்ப்பாட்டம்

July 28, 2026

இலவசக் கல்வியைப் பாதுகாக்கவும், தனியார் பட்டப்படிப்பு மையங்களுக்கு எதிராகவும் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் மற்றும் துணை மருத்துவப் பட்டதாரிகள்

a35

கிளிநொச்சி மாவட்ட A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

July 28, 2026

கிளிநொச்சி மாவட்டத்தில் A35 பரந்தன் – முல்லைத்தீவு பிரதான வீதியில் 12 ஆவது கிலோமீற்றர் தூரத்தில் உள்ள முதலாவது பாலம்

1688202098-EARTHQUAKE-6

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

July 28, 2026

ஜப்பானின் கியூஷூ (Kyushu) தீவில் அமைந்துள்ள குமாமோட்டோ (Kumamoto) பகுதியை மையமாகக் கொண்டு இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது.

Nali

நீதிபதிகளின் ஓய்வு; சர்வஜன வாக்கெடுப்பு தேவையில்லை – அமைச்சரவை பேச்சாளர்

July 28, 2026

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்துவது தொடர்பான தீர்மானம் குறித்து சர்வஜன வாக்கெடுப்பிற்கு செல்ல வேண்டிய அவசியமில்லை என அமைச்சரவை ஊடகப்

Crick

கிரிக்கெட்டின் புதிய அரசியலமைப்பு வரைவு கையளிப்பு!

July 28, 2026

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் புதிய அரசியலமைப்பின் வரைவு, விளையாட்டுத்துறை அமைச்சரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் மறுசீரமைப்புக் குழு தெரிவித்துள்ளது. புதிய

cyb

கடத்தப்பட்டுக் கொல்லப்பட்ட சீன பிரஜையின் மரணம் தொடர்பில் மேலும் பல தகவல்கள்

July 28, 2026

துறைமுக நகரத்தில் (Port City) கடத்தப்பட்டுக் கொல்லப்பட்ட சீன பிரஜை, கணினி சார்ந்த மோசடிகளில் ஈடுபட்டு சட்டவிரோதமாகப் பணம் ஈட்டிய

exc

மதுவரித் திணைக்களத்தின் தீர்மானத்திற்கு நிறுவனங்கள் எதிர்ப்பு

July 28, 2026

மதுபான உற்பத்தி மற்றும் சேமிப்பின் போது ஏற்படும் மதுசார வீணடிப்புச் சதவீதத்தை 1.5% இல் இருந்து 0.1% ஆகக் குறைப்பதற்குப்

kapil-sibal-saurav-das-pti

நீட் போராட்ட மாணவர்களின் சட்ட உதவிக்காக ரூ.1 கோடி நிதியுதவி அளித்தார் கபில் சிபல்!

July 28, 2026

புதுடெல்லி: தேசிய அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய ‘நீட்’ தேர்வு வினாத்தாள் கசிவுக்கு எதிராகத் தொடர்ந்து அறவழியில் போராட்டம் நடத்திவிட்டு,

MediaFile

எம்.பிக்கு ஒன்றரை ஆண்டுகள் சிறைத்தண்டனை!

July 28, 2026

பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்றைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த குற்றச்சாட்டுகளில் குற்றவாளியாகக் காணப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட