அமெரிக்காவை கண்டிப்பதற்கு அரசு அச்சப்படுகிறது – எம்.பி. உதுமாலெப்பை

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேற்கொண்டுவரும் சட்டவிராேத நடவடிக்கைகளை ஐக்கிய நாடுகள் சபை கண் இருந்தும் குருடர் போன்று பார்த்துக்கொண்டிருக்கிறது. அதேபோன்று ஈரான் மீது தாக்குதல் நடத்தி அதன் ஆன்மிக தலைவரை கொலை செய்த அமெரிக்காவை கண்டிப்பதற்கு ஜனாதிபதி உள்ளி்ட்ட அரசாங்கம் அச்சப்படுவதையிட்டு முஸ்லிம் சமூகம் கவலையடைகிறது என ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் உதுமாலெப்பை தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை(5) இடம்பெற்ற மகளிர் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தால் சர்வதேச மகளிர் தினத்தையொட்டி கொண்டுவரப்பட்ட சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

அமெரிக்கா தனது இலக்குகளை அடைந்துகொள்வதற்காக ஜனநாயக நாடுகள் மீது தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது. அதனடிப்படையிலேயே ஈரான் மீதும் தாக்குதல் நடத்தி, அதன் ஆன்மிக தலைவரை கொலை செய்திருக்கிறது. அமெரிக்காவின் இந்த நடவடிக்கையை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். அமெரிக்கா இதற்கு முன்னர் ஈராக்கில் தலையிட்டு அந்நாட்டு ஜனாதிபதியை கைது செய்து இல்லாமல் செய்தார்கள். லிபியாவில் தலையிட்டு மொஹமட் கடாபியை இல்லாமல் செய்தார்கள். வெனிசுலாவில் அத்துமீறி தலையிட்டு, அந்நாட்டு ஜனாதிபதியை கைது செய்து, அமெரிக்காவில் வைத்திருக்கிறார்கள். இது எந்தவகையில் நியாயமாகும்.

அதேநேரம் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேற்கொண்டுவரும் சட்டவிராேத நடவடிக்கைகளை ஐக்கிய நாடுகள் சபையும் கண் இருந்தும் குருடர் போன்று பார்த்துக்கொண்டிருக்கிறது. ஈரான் மீது அமெரிக்கா இஸ்ரேல் இணைந்து நடத்திய தாக்குதல் காரணமாக இன்று மத்திய கிழக்கில் அமைத்தியற்ற ஒரு நிலைமை ஏற்பட்டுள்ளது. எமது நாட்டுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மத்திய கிழக்கில் பணிபுரிந்து வரும் 10 இலட்சத்துக்கும் அதிகமான எமது இலங்கையர்களின் தொழில் கேள்விக்குறியாகி இருக்கிறது.

ஆனால் இந்த விடயங்கள் தொடர்பில் கதைப்பதற்கு ஆளும் தரப்பினர் அச்சப்படுகின்றனர். அமெரிக்கா, இஸ்ரேல் தொடர்பில் கதைப்பதாக இருந்தால் இவர்களின் தொடை கடுங்குகிறது. இவர்கள் எதிர்க்கட்சியில் இருக்கும்போது, அமெரிக்கா, இஸ்ரேலுக்கும் எதிராக பல போராட்டங்களை நடத்தி வந்திருக்கின்றனர்.ஆனால் ஆட்சிக்கு வந்த பின்னர், ஈரான் நாட்டின் மீது தாக்குதல் நடத்தி, அதன் ஆன்மிக தலைவரை கொலைசெய்த அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் செயலை கண்டிப்பதற்கு அச்சப்படுவதையிட்டு, முஸ்லிம் சமூகம் கவலையடைகிறது.

அதனால் இந்த நாட்டில் வாழுகின்ற முஸ்லிம் மக்களின் உணர்வுகளை புரிந்து, அமெரிக்காவின் இந்த படுகொலையை அரசாங்கம் கண்டிக்கவேண்டும். குறிப்பாக ஈரானில் பாடசாலை ஒன்றின் மீது தாக்குதல் நடத்திய நூற்றுக்கும் அதிகமான மாணவர்கள் கொலை செய்திருக்கும் இந்த செயலைக்கூட ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்துக்கு கண்டனம் தெரிக்க முடியாத அளவுக்கு இவர்கள் அச்சப்படுகிறார்கள் எனறார்.

sa

நாட்டில் அவசரகாலச் சட்டம் அமுலில் உள்ள நிலையில் அடக்குமுறை நடந்திருந்தால் ஆதாரத்தை முன்வையுங்கள்!

March 7, 2026

நாட்டில் அவசரகாலச் சட்டம் அமுலில் உள்ள நிலையில், அதன் மூலம் ஏதேனும் அடக்குமுறைகள் இடம்பெற்றிருந்தால் அதனை ஆதாரங்களுடன் நிரூபிக்குமாறு பிரதமர்ஹரிணி

au

அவுஸ்திரேலியாவில் இலங்கைப் பெண் சடலமாக மீட்பு

March 7, 2026

அவுஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் உள்ள லொட்ரோப் பகுதியில், உள்ள வீட்டில் இலங்கைப் பெண் உட்பட தம்பதி சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்கள்

drone

நாடு முழுவதும் பொலிஸார் தீவிர கண்காணிப்பு

March 7, 2026

ட்ரோன்களை (Drone)பயன்படுத்தி நாட்டின் தேசிய பாதுகாப்பு தொடர்பான உணர்திறன் மிக்க தகவல்களைச் சேகரித்தல் மற்றும் பயங்கரவாதத் தாக்குதல்கள் நடத்தப்படுவதற்கான சாத்தியக்கூறுகளைத்

ba

பாகிஸ்தான் தொடரிலிருந்து பங்களாதேஷ் முக்கிய வீரர்கள் விலகல்?

March 7, 2026

பாகிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெறவுள்ள 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான 15 பேர் கொண்ட பங்களாதேஷ் அணியை அந்நாட்டு

crim

நாட்டு துப்பாக்கி வெடித்து இளைஞர் படுகாயம்; மல்லாவியில் சம்வம்

March 7, 2026

சட்டவிரோதமாக உடமையில் வைத்திருந்த நாட்டு துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் இளைஞர் ஒருவர் கடுமையாக காயமடைந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று (06.03.2026)

photo-collage.png (51)

இலங்கை விமானப்படையின் 75ஆம் ஆண்டு விழா

March 7, 2026

இலங்கை விமானப்படையின் 75 ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் நடைபெறும் கண்காட்சி மற்றும் வான் சாகச நிகழ்வுகள் நேற்று

us

இலங்கையில் உள்ள அமெரிக்க குடிமக்களுக்கு தூதரகத்தின் முக்கிய அறிவிப்பு

March 7, 2026

இலங்கையில் உள்ள அமெரிக்க குடிமக்களுக்கு இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கட்டுநாயக்க விமான நிலையம் வழக்கம்

jap

கொழும்புக்கு கொண்டு வரப்பட்டார் ஜப்பானிய கப்பலின் பணியாளர்

March 7, 2026

கொழும்புக்கு அப்பாலுள்ள மேற்கு கடற்பரப்பில் பயணித்துக்கொண்டிருந்த ஜப்பானிய கடல்சார் தற்காப்புப் படையினருக்குச் சொந்தமான “JMSDF ONAMI” கப்பலில், மருத்துவ சிகிச்சை

sr

சுற்றுலாத்துறை குறித்து பரப்பப்படும் போலிச் செய்திகள்!

March 7, 2026

வுஸ்திரேலியர்களுக்கு இலங்கை ஒரு அதிக அபாயகரமான சுற்றுலாத் தலமாக வகைப்படுத்தப்பட்டுள்ளதாக வெளியாகும் செய்திகளை கொழும்பிலுள்ள அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயம் நிராகரித்துள்ளது. இலங்கைக்கான

ali ka

ஈரான் ஆன்மீகத் தலைவர் அயத்துல்லா அலி கமேனியைப் படுகொலை செய்த பின்னணி

March 7, 2026

ஈரான் ஆன்மீகத் தலைவர் அயத்துல்லா அலி கமேனியைப் படுகொலை செய்வதற்கான திட்டத்தைத் தீட்டியபோது, இஸ்ரேல் எவ்வாறு தெஹ்ரானின் கண்காணிப்பு கெமெரா

kan naga

இடைநிறுத்தப்பட்டிருந்த காங்கேசன்துறை – நாகப்பட்டினம் பயணிகள் படகுச்சேவை மீண்டும் ஆரம்பம்

March 7, 2026

பருவகால மழை மற்றும் பராமரிப்புப் பணிகளுக்காக இடைநிறுத்தப்பட்டிருந்த காங்கேசன்துறை – நாகப்பட்டினத்திற்கு இடையேயான பயணிகள் படகுச் சேவையானது நேற்று மீண்டும்

i

ஈரான் யுத்தக் கப்பலுக்கு இந்தியா அடைக்கலம்?

March 7, 2026

ஈரானுக்குச் சொந்தமான ‘IRIS Lavan’ எனும் யுத்தக் கப்பலுக்கு அடைக்கலம் வழங்க இந்தியா தீர்மானித்துள்ளது. இதற்கமைய, 183 ஊழியர்களைக் கொண்ட