அமுலுக்கு வந்தது பல்கலைக்கழகங்கள் திருத்தச் சட்டம்

பல்கலைக்கழகங்கள் (திருத்தச்) சட்டமூலத்தில் சபாநயாகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன நேற்று(03) கையெழுத்திட்டு சான்றுரைப்படுத்தினார்.

இந்த சட்டமூலம் கடந்த ஜனவரி 23 ஆம் திகதி திருத்தங்களுடன் வாக்கெடுப்பு இன்றி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

இந்த சட்டமூலம் 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தைத் திருத்துவதற்கான சட்டமூலமொன்றாகும்.

இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் 2025 நவம்பர் 21 ஆம் திகதி வெளியிடப்பட்டதுடன், பிரதமர், கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரினால் 2025 டிசம்பர் 3 ஆம் திகதி முதலாவது மதிப்பீட்டுக்காக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

இந்தத் திருத்தம் மூலம் சிரேஷ்ட பேராசிரியர்கள், பேராசிரியர்கள், இணைப் பேராசிரியர்கள் மற்றும் சிரேஷ்ட விரிவுரையாளர்கள் (தரம் 1) ஆகியோரிடையிலிருந்து துறைத் தலைவரொருவரைத் தெரிவு செய்வதற்கு துறைச் சபையை இயலச் செய்வித்தல், துறைத் தலைவரின் பதவிக்காலம் முடிவடைய முன்னர் துறைத் தலைவர் ஒருவரை அவரது பதவியிலிருந்து அகற்றுவதற்கு பேரவையை இயலச் செய்வித்தல் மற்றும் துறையொன்றின் தலைவரொருவரின் பதவிக்காலம் தொடர்பில் மட்டுப்பாடுகளை அறிமுகம் செய்தல் என்பன எதிர்பார்க்கப்படுகின்றன.

அத்துடன், இதன்மூலம் கற்கைப் பகுதியொன்றின் தலைவரொருவரை நியமிக்கும் போது பேரவையினால் பின்பற்றப்பட வேண்டிய நடவடிக்கை முறையைக் குறித்துரைத்தல், கற்கைப் பகுதியொன்றின் தலைவரின் பதவிக்காலம் முடிவடைய முன்னர் கற்கைப் பகுதியின் தலைவரொருவரை அவரது பதவியிலிருந்து அகற்றுவதற்குப் பேரவையை இயலச் செய்வித்தல் மற்றும் கற்கைப் பகுதியொன்றின் தலைவரொருவரின் பதவிக்காலங்கள் தொடர்பில் சம்பந்தப்பட்ட மட்டுப்பாடுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

அதற்கமைய, பல்கலைக்கழகங்கள் (திருத்தச்) சட்டமூலம், 2026 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் (திருத்தச்) சட்டமாக நடைமுறைக்கு வந்துள்ளது.

sss

சியான்’ விக்ரம் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்

June 14, 2026

தமிழ் திரையலகின் பெருமிதமாக ஜொலிக்கும் சர்வதேச தரத்திலான நட்சத்திர நடிகர் சியான் விக்ரம் கதையின் நாயகனாக நடிக்கும் பெயரிடப்படாத திரைப்படத்தின்

ang

நவீன தொழில் நுட்பத்தில் தயாரான பாடலை வெளியிட்ட ‘அங்கீகாரம்’ படக் குழு

June 14, 2026

அறிமுக நாயகன் கே ஜே ஆர் நடிப்பில் தயாராகி உள்ள ‘அங்கீகாரம்’ எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘வெற்றி விழா ஆந்தம்’எனும்

sam

நடிகை சமந்தா நடிக்கும் ‘எங்கள் தங்கம்’

June 14, 2026

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகையாக திகழும் சமந்தா கதையின் நாயகியாக நடித்திருக்கும் ‘எங்கள் தங்கம்’ திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.

100

இயக்குநர் சசி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘நூறு சாமி’ திரைப்படம்

June 14, 2026

மூன்று தசாப்தங்களாக தொடர்ந்து தமிழ்த் திரையுலகில் கவனிக்கத்தக்க படைப்புகளை வழங்கி ரசிகர்களை தொடர்ந்து உச்சகட்ட மகிழ்ச்சியில் ஆழ்த்தும் இயக்குநர் சசி

sea

கடல் பகுதிகளுக்கு ‘சிவப்பு’ எச்சரிக்கை!

June 14, 2026

காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக கல்பிட்டி வரையான கடல் பகுதிகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் ‘சிவப்பு’ எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன்படி, காங்கேசன்துறையிலிருந்து மன்னார்

Legends_1

Behind me சர்வதேச ஊடக வலையமைப்பு வழங்கும் Legends & Icons Awards 2026!

June 14, 2026

உலகெங்கும் பரந்துவாழும் எமது ஈழத்தமிழ்ச் சமூகத்தை சேர்ந்த மருத்துவத்துறை, சட்டத்துறை, கற்பித்தற்துறை, கலைத்துறை, பாதுகாப்புத்துறை, தொழில் முனைவோர்… எனப் பரந்து

Shakthivel

இலங்கையில் இடம்பெற்ற இனஅழிப்பு மற்றும் மனித உரிமை மீறல்களின் கொடூர உண்மைகளை செம்மணி புதைகுழி வெளிச்சமிட்டுக் காட்டுகிறது – அருட்தந்தை மா. சத்திவேல்

June 14, 2026

செம்மணி சமூக புதைகுழி அகழ்வுப் பணிகளில் வெளிவரும் மனித எச்சங்களும், குழந்தைகளின் பாவனை பொருட்களும் இலங்கையில் இடம்பெற்ற இனஅழிப்பு மற்றும்

appu

குற்றவாளிகள் எவராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் – ஐக்கிய மக்கள் சக்தி

June 14, 2026

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலுடன் தொடர்புடைய குற்றவாளிகள் எவராக இருந்தாலும், அவர்கள் அனைவருக்கும் தகுந்த தண்டனை வழங்கப்படும் வரை ஐக்கிய

arju

நாமல் ராஜபக்ஷ ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட பின் நாங்கள் தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைக்குத் தீர்வு காண்போம் அர்ச்சுனா இராமநாதன்

June 14, 2026

நாமல் ராஜபக்ஷ தனது சிங்கள இனத்தின் மீது பற்றுக்கொண்டுள்ளார். ஆகவே அவர் ஏனைய இனங்களையும் ஆதரிப்பார். 2029 ஆம் ஆண்டு

photo-collage.png (1)

கனடாவில் ‘புற்றுநோய் விழிப்புணர்வு நடைபவனி 2026’

June 13, 2026

கனடாவில் புற்றுநோய் விழிப்புணர்வுக்கான நடைப்பயணமொன்றை Behind Me Media, JMFOA Canada மற்றும் Behind Me Foundation ஆகியவை இணைந்து

sr

வடக்கு மாகாண விளையாட்டுத்துறை தேவைகளை விரைவாக முன்வைக்க வேண்டும்!

June 13, 2026

விளையாட்டுக் கழகங்கள் மற்றும் பாடசாலைகளின் விளையாட்டுத்துறை வளர்ச்சிக்குத் தேவையான வசதிகளைச் செய்துகொடுக்க கோரிக்கைகளை விரைவாக முன்வைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு

s

முதலாவது பன்னாட்டு தமிழிசை மாநாடு யாழ்.பல்கலைக்கழகத்தில்…

June 13, 2026

முதலாவது பன்னாட்டு தமிழிசை ஆய்வு மாநாட்டின் இரண்டாவது நாள் நிகழ்வானது இன்றையதினம்(13) யாழ்ப்பாணம் பல்கலைக்கழக கைலாசபதி அரங்கில் நடைபெற்றது. இன்றைய