அபராதம் செலுத்த பணமின்றி சிறையில் வாடும் 3 ஆயிரம் கைதிகள்

தேசிய கணக்காய்வாளர் நாயகம் அலுவலகத்தின் சமீபத்திய அறிக்கை ஒன்றின்படி, 3,371 கைதிகள் பிணைத்தொகை செலுத்த முடியாமலும், விதிக்கப்பட்ட அபராதங்களைச் செலுத்த முடியாமலும் பல ஆண்டுகளாக சிறைகளில் வாடி வருகின்றமை தெரியவந்துள்ளது.

இந்த நிலைமை சிறைச்சாலைகளில் நிலவும் நெரிசலிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

திரட்டப்பட்ட தகவல்களின்படி, 28 சிறைகளில் 1,940 கைதிகள் அபராதம் செலுத்த முடியாததாலும், 21 சிறைச்சாலைகளில் 1,431 கைதிகள் பிணைத்தொகை செலுத்த முடியாததாலும் வாடி வருகின்றனர்.

விடுதலை பெறமுடியாத நிலையில், கடுமையான அழுத்தத்தில் இருப்பவர்களே சிறைச்சாலைப் போராட்டங்களில் முன்னணியில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பிணை வழங்கப்பட்ட பிறகு ஐந்து மாதங்களுக்கும் மேலாக சிறையில் இருக்கும் கைதிகளின் எண்ணிக்கை 325 ஆகும். கடந்த ஆண்டு நிலவரப்படி, இலங்கை முழுவதும் உள்ள 21 சிறைச்சாலைகளில் இந்த நிலை காணப்படுகிறது.

இவ்வாறாக எந்தக் காரணமும் இன்றி சிறையில் இருக்கும் மக்களின் உணவு மற்றும் பிற வசதிகளுக்காக அரசாங்கம் ஆண்டுதோறும் பெரும் தொகையைச் செலவழிக்க வேண்டியுள்ளது என்று சிறை அதிகாரிகள் கூறுகின்றனர்.

நிதி வசதியின்மை, பிணை நிபந்தனைகளை பூர்த்தி செய்ய இயலாமை மற்றும் பிணை வழங்க உறவினர்கள் இல்லாதது ஆகியவையே இதற்கான முக்கிய காரணங்கள் என கணக்காய்வாளர் நாயகம் திணைக்களத்தின் விசாரணைகள் உறுதிப்படுத்தியுள்ளன.

இது குறித்துக் கேட்டபோது, ​​இதுபோன்ற சூழ்நிலைகள் பதிவாகி வருவதாகவும்இ தீர்வுகளைக் கண்டறிய பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் சிறைச்சாலை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மேலும், இத்தகைய கைதிகளுக்கு விசேட கவனம் செலுத்தப்படும் என்றும் ஜனாதிபதியின் பொது மன்னிப்பு வழங்கப்படும்போது அவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Murder

பெல்லன்வில படுகொலை: பின்னணி அம்பலம்!

July 26, 2026

பெல்லன்வில உணவக உரிமையாளரைச் சுட்டுக்கொன்ற துப்பாக்கிச்சூடு நடத்தியவர் இராணுவத்திலிருந்து தப்பிச் சென்ற ஒருவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர் மின்னேரியா

fi

இதுவரை கொழும்பில் மாத்திரம் 258 தீ விபத்துக்கள்

July 26, 2026

ஜனவரி முதல் இதுவரையான காலப்பகுதியில் கொழும்பு உட்பட புறநகர் பகுதிகளில் மட்டும் 258 தீ விபத்து சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தீயணைப்புத்

jud_1

அதிக விலைக்கு அரிசி விற்பனை; 5 இலட்சம் அபராதம்

July 26, 2026

அரசாங்கத்தினால் நிர்ணயிக்கப்பட்டிருந்த அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு இறக்குமதி செய்யப்பட்ட கீரி பொன்னி அரிசியை விற்பனை செய்த

sri-lanka-tourism

138,730 சுற்றுலாப் பயணிகள் வருகை

July 26, 2026

ஜூலை மாதத்தின் முதல் 21 நாட்களில் இலங்கைக்கு 138,730 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை

chamara

தைரியம் இருந்தால் உடனடியாக மாகாண சபை தேர்தலை நடத்துங்கள்!

July 26, 2026

அரசாங்கத்துக்கு தைரியம் இருந்தால் உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்தி மக்களின் உண்மையான செல்வாக்கை பரிசீலித்து பார்க்க வேண்டும் என

death

யானை தாக்கியதில் செட்டிகுள குடும்பஸ்தர் பலி!

July 26, 2026

வவுனியா, செட்டிகுளம் பிரதேசத்திற்குட்பட்ட ஆனைவிழுந்தான் கிராமத்தில் நேற்று (25) மாலை இடம்பெற்ற வனவாசி யானையின் தாக்குதலில் நபர் ஒருவர் சம்பவ

tea

ஆசிரியர் வெற்றிடங்களுக்கு தனியார் பட்டதாரிகளை இணைக்க அரசாங்கம் முயற்சி?

July 26, 2026

கல்வித் துறையில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்குத் தனியார் நிறுவனங்களின் பட்டதாரிகளை இணைத்துக்கொள்ள அரசாங்கம் முயற்சித்து வருவதாக இலங்கை ஆசிரியர்

dds

யாத்திரிகர்களுக்கான இலவச இந்திய விசா முறைமை மீண்டும் அமுல்

July 26, 2026

இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு புனித பௌத்த யாத்திரை உட்பட ஆன்மீகக் குழுக்களாகப் பயணிக்கும் யாத்திரிகர்களுக்கான இலவச விசா வழங்கும் முறைமை மீண்டும்

45

ஹெபடைடிஸ் ஒழிப்பு சாதனையாளர்களின் பட்டியலில் இலங்கை பெண் வைத்தியர்

July 26, 2026

உலகளாவிய ஹெபடைடிஸ் ஒழிப்பு அமைப்பினால் வெளியிடப்பட்டுள்ள 2026 ஆம் ஆண்டிற்கான ஹெபடைடிஸ் ஒழிப்பு சாதனையாளர்கள் பட்டியலில், இலங்கையின் தேசிய பால்வினை

3

த.வெ.க ஆட்சியில் பேச்சுரிமை பறிக்கப்பட்டுள்ளது: முன்னாள் அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு!

July 26, 2026

நெல்லை: தமிழக முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் குறித்து அவதூறாகவும், மிரட்டல் விடுத்தும் பேசியதாக கூறி கைது செய்யப்பட்ட விளாத்திகுளம் தி.மு.க

2

தர்மேந்திர பிரதான் பதவி விலகல்: அறவழிப் போராட்டத்துக்கு கிடைத்த மகத்தான வெற்றி – திருமாவளவன்!

July 26, 2026

சென்னை: இந்திய மத்திய அரசு நீட் தேர்வை முற்றாக கைவிட வலியுறுத்தியும், தமிழ்நாடு அரசு நீட் விலக்கு சட்டத்தை இயற்றக்

hariny

இலங்கையில் கறுப்பு ஜூலை படுகொலைகளுக்குப் பொறுப்பானவர்கள் இன்று சிறைக்கைதிகளின் உரிமை பற்றிப் பேசுகின்றார்கள்

July 26, 2026

இலங்கையின் வரலாற்றில் ஜூலை மாதம் என்பது ஒரு கறுப்புப் புள்ளியாகவே அடையாளப்படுத்தப்பட்டுள்ளது, வரலாற்றுக் காலம் முதல் இந்த ஜூலை மாதம்தான்