சவூதி அரேபியச் சிறையில் வாடும் இலங்கை இளைஞன் சிவராசா அனோஜனை உடனடியாக விடுதலை செய்யக் கோரி, இந்து அமைப்புகளின் கூட்டமைப்பு சார்பில் கவனயீர்ப்பு நிகழ்வொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இப்போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள், சிவராசா அனோஜனின் புகைப்படம் தாங்கிய பதாகைகளையும் கோரிக்கை வாசகங்கள் அடங்கிய அட்டைகளையும் ஏந்தியவாறு தமது கோரிக்கைகளை வெளிப்படுத்தினர்.
இந்நிகழ்வின்போது ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த பேச்சாளர் ஒருவர், இரு நபர்களுக்கு இடையே ஏற்பட்ட தனிப்பட்ட கருத்து முரண்பாடு காரணமாகவே அனோஜனுக்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
எனவே, சிவராசா அனோஜனை விடுதலை செய்து, அவரது குடும்பத்தினர் அமைதியாக வாழச் சவூதி அரேபிய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டார்.
இதனிடையே, இக்கவனயீர்ப்பு நிகழ்வு நடைபெற்ற இடத்திற்கு முச்சக்கர வண்டியில் மதுபோதையில் வந்த நபர் ஒருவர், அங்கு செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த ஊடகவியலாளர்களை அச்சுறுத்தும் வகையில் நடந்துகொண்டதுடன் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்