“அனைத்து விவசாயிகளுக்கும் ரூ.75 ஆயிரம் பயிர் கடன் ரத்து!” – இந்திய கம்யூனிஸ்டு கட்சி வரவேற்பு!

சென்னை:

இந்திய கம்யூனிஸ்டு அறிக்கை:

அனைத்து விவசாயிகளுக்கும் ரூ.75 ஆயிரம் பயிர் கடன் ரத்து என்ற அறிவிப்புக்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சி வரவேற்பு தெரிவித்துள்ளது. இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு சார்பில் விடப்பட்டுள்ள அறிக்கையில், விவசாயிகள் பெற்ற பயிர் கடன்களை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். புதிய கடன்களை நிபந்தனையின்றி வழங்க வேண்டும். மாநிலம் முழுவதும் ஏற்பட்டுள்ள சாகுபடி பாதிப்பிற்கு உரிய நிவாரணமும், வேலை இழந்துள்ள விவசாய தொழிலாளர்களுக்கு உரிய நிவாரணமும் வழங்கிட வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

விவசாயிகள் போராட்டம்:

டெல்டா மாவட்டங்களில் சாகுபடிக்கு தேவையான நீரை தொடர்ந்து திறந்து விட வேண்டும். உச்ச நீதிமன்ற இறுதி தீர்ப்பின்படி காவிரி நீரை பெற தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கைகளை எடுத்திட வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக மறியல் போராட்டம் நேற்று நடைபெற்றது. இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர். இந்நிலையில் தமிழ்நாடு அரசு, அனைத்து விவசாயிகள் சங்கங்களின் தலைவர்களை இன்று பேச்சுவார்த்தைக்கு அழைத்து பேசியது.

பயிர் கடன் ரத்து:

இதில் எட்டு அமைச்சர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். பேச்சுவார்த்தையில் சிறு, குறு மற்றும் பெரிய விவசாயிகள் உட்பட அனைத்து விவசாயிகளுக்கும் ரூ.75 ஆயிரம் பயிர் கடன் ரத்து செய்யப்படும் என அரசுத்தரப்பில் ஏற்றுக்கொள்ளப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் இந்த அறிவிப்பை இந்திய கம்யூனிஸ்டு கட்சி வரவேற்கிறது.

இதர கோரிக்கைகள்:

விவசாயிகளின் இதர கோரிக்கைகளையும் நிறைவேற்ற வேண்டுமென இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறது என்று தெரிவித்துள்ளது.

#CPI #CropLoan #Farmers #TNPolitics #BmNews #TamilNews #BreakingNews #LatestNews #TamilNewsLive

harry meghan

பிள்ளைகளின் பாதுகாப்பே முக்கியம்” – தந்தை மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து ஹரியின் மனைவி மேகன் கருத்து!

October 23, 2026

பிலிப்பைன்ஸிலுள்ள தனது தந்தையின் முன்னாள் வீட்டில் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகப் படங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்திகள் குறித்துத் தாம் شدید

trump june 26

கனடாவுடனான வர்த்தக ஒப்பந்தம் விரைவில் சாத்தியம்: ஆனால் அனைத்து அதிகாரங்களும் எம்மிடமே உள்ளன – டொனால்ட் டிரம்ப்!

October 23, 2026

. அமெரிக்காவிற்கும் கனடாவிற்கும் இடையிலான வர்த்தக ஒப்பந்தம் எட்டப்படும் நிலை நெருங்கியுள்ள போதிலும், பேச்சுவார்த்தைகளில் அனைத்து அதிகாரங்களும் (Cards) அமெரிக்காவின்

karthika

“கோமாளிகளிடம் ஆட்சி அதிகாரம் இல்லாமல் போராளிகளிடம் கிடைக்க வேண்டும்!” – சிறையிலிருந்து விடுதலையான கார்த்திகா ஆவேசம்!

October 23, 2026

கோவை: வாழ்நாள் பெருமை: தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல் வழக்கில் கைதாகி பிணையில் விடுதலையான நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை

sanga

இலங்கையின் வரலாற்றுச் சாதனை: குமார் சங்கக்கார பாராட்டு!

October 23, 2026

பவன், தசுன், ஜனித் மற்றும் அவிஷ்க ஆகியோரின் சிறப்பான ஆட்டத்திறனால் இலங்கை அணி பெற்றுக்கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெரிதும்

09a2de010060025c4d4664fd0e465b141779615687917113_original

“மன்னிப்பு கோர முடியாது!” – எடப்பாடி பழனிசாமி குறித்த கருத்தில் அமைச்சர் நிர்மல் குமார் திட்டவட்டம்!

October 23, 2026

சென்னை: அதிமுக நோட்டீஸ்: அதிமுகவின் சொத்துகளை அபகரிப்பதாகவும், கட்சியை லெட்டர் பேட் கட்சியாகவும் மாற்றி விட்டதாகவும் எடப்பாடி பழனிசாமியை தவெக

sh

ஷமோண்டா கால்நடை வைரஸ் மனிதனைத் தாக்கியது!

October 23, 2026

கால்நடைகளைப் பாதிக்கும் ஷமோண்டா (Shamonda) வைரஸ் மனிதர் ஒருவர் உடலில் கண்டறியப்பட்டுள்ளதாகவும், அந்த நபர் கடந்த மாதத் தொடக்கத்தில் உயிரிழந்துள்ளதாகவும்

1200-675-26812339-thumbnail-16x9-nil

“முதல்வரின் மேஜையில் உள்ள 3 ஊழல் கோப்புகள் விரைவில் வெளியாகும்!” – அமைச்சர் மரிய வில்சன் தகவல்!

October 23, 2026

திருநெல்வேலி: ஊழல் கோப்புகள்: தமிழக முதல்வரின் மேஜையில் உள்ள ஊழல் குற்றச்சாட்டு தொடர்பான 3 கோப்புகள் விரைவில் வெளியாகும் என்றார்

SL

ரோஹிங்கிய அகதிகளுக்கான தேவைகள் குறித்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு பரிந்துரை!

October 23, 2026

முல்லைத்தீவு விமானப்படை முகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ள 119 ரோஹிங்கிய அகதிகள் உயிர்வாழ்வதற்கு அவசியமான அடிப்படை வசதிகள் வழங்கப்பட்டிருப்பினும், பிறப்புப்பதிவு, சுகாதார மற்றும்

ssr-2026-10-23-13-06-09

“வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி குறித்த அனைத்துக் கட்சி கூட்டம்!” – தவெக, திமுக கூட்டணிக் கட்சிகள் வெளிநடப்பு!

October 23, 2026

சென்னை: வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி: தமிழகத்தில் 1.1.2027 தேதியை தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு, வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை

410face0-f2c9-11f0-a422-4ba8a094a8fa.png

“அனைத்து விவசாயிகளுக்கும் ரூ.75 ஆயிரம் பயிர் கடன் ரத்து!” – இந்திய கம்யூனிஸ்டு கட்சி வரவேற்பு!

October 23, 2026

சென்னை: இந்திய கம்யூனிஸ்டு அறிக்கை: அனைத்து விவசாயிகளுக்கும் ரூ.75 ஆயிரம் பயிர் கடன் ரத்து என்ற அறிவிப்புக்கு இந்திய கம்யூனிஸ்டு

maalai-malar_2026-10-23_jevnc2ug_karthika

“நாம் தமிழர் கட்சி நிர்வாகி கார்த்திகாவுக்கு ஜாமீன்!” – தாராபுரம் நீதிமன்றம் உத்தரவு!

October 23, 2026

தாராபுரம்: தேர்தலும் வழக்குகளும்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் (தனி) சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் கடந்த 6-ந் தேதி நடைபெற்றது. இதில்

chemmany15

செம்மணி மனிதப் புதைகுழி குறித்த தொல்பொருள் அறிக்கை: தமிழ் அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு, சுயாதீன விசாரணைக்கு கோரிக்கை

October 23, 2026

யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகள் குறித்து பெரும் சர்ச்சை வெடித்துள்ளது. அங்கு தோண்டி எடுக்கப்பட்ட