அதிகார பரவலாக்கத்தை மேற்கொள்ளத் தவறியமையே கறுப்பு ஜூலை கலவரத்துக்கு காரணம் – அஜித் பி பெரேரா

அரசாங்கம் மாகாண சபை தேர்தலை ஒரு வருடகாலத்துக்குள் நடத்துவதாக வாக்களித்துள்ளபோதும் தற்போது பாராளுமன்ற  குழு அமைத்து, அதனை திட்டமிட்டு பிற்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது. அதனால் இந்த பாராளுமன்றக் குழுவில் நாங்கள் தொடர்ந்து இருப்பதா என்ற தீர்மானத்தை எடுக்கவேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. அதேநேரம் அதிகார பரவலாக்கத்தை மேற்கொள்ளத் தவறியமையே கறுப்பு ஜூலை கலவரத்துக்கு காரணமாகும் என எதிர்க்கட்சி உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (23) இடம்பெற்ற கறுப்பு ஜூலை கலவரம் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

அனுரகுமார திஸநாயக்க, ஜனாதிபதி தேர்தலுக்காக முன்வைத்த கொள்கை பிரகடனத்தில் தெரிவித்த வாக்குறுதிகளை அடிப்படையாகக்கொண்டே மக்கள் அநுரகுமார திசாநாயக்கவுக்கு வாக்களித்தார்கள். ஆனால் அந்த கொள்கை பிரகடனத்தில் நாட்டை கட்டியெழுப்புவதற்கு எடுக்கப்போவதாக தெரிவித்த விடயங்களில் முக்கியமாக, புதிய அரசியலமைப்பு ஒன்றை கொண்டுவருவதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அரசாங்கம் ஆட்சிக்கு வந்து 2 வருடங்கள் ஆகும் நிலையில் புதிய அரசியலமைப்பு தொடர்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

அன்று  அதிகார பரவலாக்கம் மேற்கொள்ளத் தவறியமையே ஜூலை கலவரத்துக்கு காரணமாக அமைந்தது.  அதனால் நாங்கள் அனைவரும்  பாதிக்கப்பட்டோம். அதிகார பரவலாக்கலை மேற்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பிரதான அம்சம்தான் அரசியலமைப்பு திருத்தம். அந்த வாக்குறுதியை நிறைவேற்ற அரசாங்கம் இன்னும் செய்யத் தவறியிருக்கிறது.

அதேபோன்று  திகதி குறிப்பிடப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும்  மாகாணசபை தேர்தலை ஒரு வருடகாலத்துக்குள் நடத்துவதாக அரசாங்கத்தின் கொள்கை பிரகடனத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. நடத்தினார்களா?  ஆனால் மாகாண சபை தேர்தலை விரைவாக நடத்துமாறு நாங்கள் தெரிவிக்கும்போது, பாராளுமன்ற குழு அமைத்து, மாகாண சபை தேர்தலை தொடர்ந்து காலம் கடத்தி வருகிறது. தேர்தலை நடத்தாமல் இருக்கும் நோக்கில் திட்டமிட்டு இதனை இழுத்தடிப்பு செய்து வருகிறது. அதனால் இந்த பாராளுமன்ற குழுவில் நாங்கள் தொடர்ந்து இருக்கிறதா என்ற திீர்மானத்தை எடுக்கவேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது.

அதேபோன்று வடக்கு கிழக்கு உள்ளிட்ட நாட்டில் இடம்பெற்ற கொலைகள் தொடர்பில் ஆணைக்குழு அமைத்து விசாரணை மேற்கொள்வதாக கொள்கை பிரகடனத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இதுவரை இதுதொடர்பில் எந்தவொரு விசாரணை ஆணைக்குழுவும் அமைக்கப்படவில்லை. இனங்களுக்கிடையில் மோதல்களை தவிர்ப்பதற்கு அனைத்து மத குழுவொன்றை அமைப்பதாக தெரிவித்தார்கள். ஆனால் அதுதொடர்பில் எந்த நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை.

அத்துடன் நாட்டில் சிறைச்சாலைகளில் அரசியல் கைதிகள் என யாரும் இல்லை என்றும் அவர்களை விடுவிக்க எந்த நடைமுறையும் இல்லை என்றும் நீதி அமைச்சர் இந்த சபையில் தெரிவித்தார். ஆனால் அரசியல் கைதிகளை விடுவித்து, அவர்களை சமூகத்துடன் இணைப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக கொள்கை பிரகடனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இன்று  அரசியல் கைதிகள் என யாரும் இல்லை என தெரிவித்து வருகிறார்கள். அதனால் தேசத்தை கட்டியெழுப்புவதாக அரசாங்கம் தனது கொள்கை பிரகடனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள எந்த விடயத்தையும் இதுவரை செய்யவில்லை என்றார்.

Rev.ASirisumana-263x263

யுத்த காலத்தில் நாட்டின் இறையாண்மையைப் பாதுகாக்க காவி உடையும் பிக்குகளின் தியாகமும் முக்கிய பங்கு வகித்தது – அகலகட சிறிசுமண தேரர்

July 27, 2026

தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்ட காலத்தில் நாட்டின் இறையாண்மை மற்றும் பாதுகாப்பை நிலைநிறுத்துவதில் பௌத்த பிக்குகளும், காவி உடையும்

5

காமன்வெல்த் போட்டியில் சாதித்த தமிழ்நாட்டை சேர்ந்த ராஜா முத்துப்பாண்டி!

July 27, 2026

ஹைதராபாத்: கிளாஸ்கோவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் விளையாட்டு தொடரில் பளுதூக்கும் போட்டியில் இந்தியாவை சேர்ந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த ராஜா முத்துப்பாண்டி

missing per fa

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சர்வதேச மாநாடு: யாழ்ப்பாணத்தில் ஓகஸ்ட் 30இல் நடத்த ஏற்பாடு!

July 27, 2026

இலங்கையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச தினமான வரும் ஓகஸ்ட் 30ஆம் திகதியன்று யாழ்ப்பாணத்தில் பிரமாண்ட சர்வதேச மாநாடு ஒன்றை

jaffna court

யாழ். பல்கலைக்கழக பேராசிரியர் ரகுராம் அவதூறு வழக்கு: “சட்டத்தை ஆயுதமாக பயன்படுத்த முடியாது” – எதிர்மனுதாரர்கள் சார்பில் மூத்த சட்டத்தரணி கடும் வாதம்!

July 27, 2026

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்னாள் கலைப்பீடாதிபதி பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரகுராம் தொடர்ந்த அவதூறு வழக்கில், “குற்றவாளிகளோ அல்லது சந்தேகநபர்களோ சட்டத்தை ஆயுதமாகப்

Screenshot

காங்கேசன்துறை எரிபொருள் களஞ்சியத்திற்கு அருகே திடீர் தீ பரவல் – பெரும் அனர்த்தம் தவிர்ப்பு; பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து மீண்டும் கேள்வி!

July 27, 2026

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை (KKS) எரிபொருள் களஞ்சிய வளாகத்திற்கு அண்மையில் உள்ள வெற்றுக்காணியில் இன்று திடீரென ஏற்பட்ட தீ பரவல், கடற்படையினரும்

san

நிதி மோசடி; சாந்த பண்டாரவின் புதல்வர் உள்ளிட்ட சந்தேக நபர்களுக்கு பிணை

July 27, 2026

தி மோசடிச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் சாந்த பண்டாரவின் புதல்வரான அனுத ஜனாதித்

deh

கல்கிசை மயான துப்பாக்கிச் சூடு – துப்பாக்கிதாரியும் கைது

July 27, 2026

தெஹிவளை – கல்கிசை மயானத்தில் இருந்த ஒருவரை இலக்கு வைத்து துப்பாக்கி சூடு நடத்திய சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கிதாரி கைது

dd

நுவரெலியா பிரதான வீதியில் கைவிடப்பட்ட கட்டிடம்

July 27, 2026

தலவாக்கலை – நுவரெலியா பிரதான வீதியில் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட “ஹெல பொஜூன்” தேசிய உணவகம் ஒன்று, தற்போது மீண்டும்

sc'

மூங்கிலாறில் ஏழு மாதங்களாக ஆசிரியர் இல்லை

July 27, 2026

முல்லைத்தீவு, முல்லை கல்வி வலயத்தின் கீழ் உள்ள புதுக்குடியிருப்பு மூங்கிலாறு தெற்கு ஆரம்ப பாடசாலையில் தரம் 3 மாணவர்களுக்கான ஆசிரியர்

figd

தமிழக கடற்றொழிலாளர்களின் அத்துமீறல்களை கட்டுப்படுத்தக் கோரி யாழில் போராட்டம்

July 27, 2026

தமிழக கடற்தொழிலாளர்களின் அத்துமீறல்களை கண்டித்தும், அதனை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க கோரியும் நயினாதீவு கடற்தொழிலாளர்கள் கூட்டுறவு சங்கங்களின் ஏற்பாட்டில்

acci main

மனைவியின் பட்டமளிப்பு நிகழ்விற்காக சென்ற கணவன் – சகோதரன் பலி

July 27, 2026

மகியங்கனை பிரதேசத்தில் மனைவியின் பட்டமளிப்பு நிகழ்வில் கலந்து கொள்வதற்காக மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த கணவர் உட்பட இருவர் விபத்தில்

den

 81 ஆயிரத்தைக் கடந்த டெங்கு நோயாளர்கள்  

July 27, 2026

இலங்கையில் நாளாந்தம் டெங்கு பரவல் வெகுவாக அதிகரித்துச் செல்கின்றது. நாட்டில் இவ்வருடம் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை