அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தினார்: பிரித்தானிய மன்னரின் சகோதரர் கைது!

அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியதாக எழுந்த சந்தேகத்தின் பேரில் பிரித்தானிய மன்னர் சார்ள்ஸின் சகோதரரான முன்னாள் இளவரசர் அண்ட்ரூ மவுண்ட் பேட்டன் வின்ட்சர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று (19) தமது 66-வது பிறந்தநாளைக் அவர் கொண்டாடும் நிலையில், அவரது கைது இடம்பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

நோர்போக் பகுதியைச் சேர்ந்த 60 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என தேம்ஸ் வேலி பொலிஸார் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உத்தியோகபூர்வமாக பெயர் குறிப்பிடப்படாவிட்டாலும், அது முன்னாள் இளவரசர் அண்ட்ரூ தான் என்பதை சர்வதேச ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

இதனைத் தொடர்ந்து, பெர்க்சையர் மற்றும் நோர்போக் பகுதிகளில் உள்ள அவரது இல்லங்களில் பொலிஸார் தீவிர சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நோர்போக்கில் உள்ள ‘சாண்ட்ரிங்ஹாம்’ எஸ்டேட்டிற்கு பொலிஸார் செல்லும் காட்சிகளும் வௌியாகியுள்ளன.

மறைந்த பாலியல் குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டீனுடன் முன்னாள் இளவரசர் அண்ட்ரூ கொண்டிருந்த தொடர்புகள் குறித்து நீண்டகாலமாக விசாரணைகள் நடந்து வந்தன.

2010 ஆம் ஆண்டு பிரித்தானியாவின் வர்த்தகத் தூதராக அண்ட்ரூ பணியாற்றியபோது, அரசாங்கத்தின் மிக ரகசியமான வர்த்தகத் தகவல்களை எப்ஸ்டீனுடன் பகிர்ந்து கொண்டதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அண்மையில் அமெரிக்க நீதித்துறை வெளியிட்ட ‘எப்ஸ்டீன் ஆவணங்கள்’ மூலம் கிடைத்த தகவல்களின் அடிப்படையிலேயே தற்போது இந்த விசாரணை தீவிரமடைந்துள்ளது.

கடந்த ஆண்டு மன்னர் சார்ள்ஸ் தனது சகோதரர் அண்ட்ரூவிடமிருந்து ‘இளவரசர்’ மற்றும் ‘டியூக் ஆஃப் யார்க்’ ஆகிய கௌரவப் பட்டங்களை உத்தியோகபூர்வமாக பறித்தார்.

இதனால் அவர் தற்போது ஒரு சாதாரண குடிமகனாகவே சட்ட ரீதியாக எதிர்கொள்ளப்படுகிறார்.

தனது தரப்பு நியாயமாக, அண்ட்ரூ அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் தொடர்ந்து மறுத்து வருகிறார். தற்போது அவர் எங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்ற விபரம் பாதுகாப்பு காரணங்களுக்காக வெளியிடப்படவில்லை.

arr

ஏழாலையில் 800 லிட்டர் டீசலுடன் இருவர் கைது!

March 4, 2026

800 லிட்டர் டீசலை பதுக்கி வைத்திருந்த இருவர் இன்று (04) அதிகாலை சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏழாலையைச் சேர்ந்த

fi

களுத்துறை மாவட்ட செயலகத்திற்கு முன்னால் உள்ள மின்மாற்றி ஒன்றில் தீ விபத்து

March 4, 2026

களுத்துறை மாவட்ட செயலகத்திற்கு முன்னால் உள்ள மின்மாற்றி ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இத்தீ சுமார் 20 நிமிடங்கள் நீடித்ததுடன்,

nurai

நிலக்கரி இறக்குமதி தொடர்பான விசாரணை அறிக்கை கையளிப்பு

March 4, 2026

நுரைச்சோலை லக்விஜய நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்திற்காக ஒன்பது நிலக்கரி கப்பல்கள் இறக்குமதி செய்யப்பட்டது தொடர்பான விசாரணைகள் குறித்த தனது

gol

தங்கத்தின் விலை சடுதியாக வீழ்ச்சி

March 4, 2026

உலக சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்ததை அடுத்து, இலங்கையில் தங்கத்தின் விலை 13,000 ரூபாவால் குறைந்துள்ளதாக தங்க சந்தை தரவுகள்

Galle

காலி கடற்பரப்பில் விபத்துக்குள்ளான ஈரானிய கப்பல்!

March 4, 2026

ரானிய கடற்படை கப்பலில் இருந்து மீட்கப்பட்ட 32 பேர் காலி கராபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. காலி

saji

10 இலட்சம் இலங்கையர்களின் பாதுகாப்பு தொடர்பில் தீவிர ஆலோசனை

March 4, 2026

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தீவிரமடைந்துள்ள போர்ச் சூழல் காரணமாக இலங்கைக்கு ஏற்படவுள்ள சவால்கள் குறித்து ஆராயும் நோக்கில், எதிர்க்கட்சித் தலைவர்

arres

வெற்றிலைக்கேணி பகுதியில் இருவர் கைது

March 4, 2026

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் மாட்டுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது நடவடிக்கை நேற்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

tr

அமெரிக்க கடற்படை ஹார்முஸ் நீரிணை வழியாக செல்லும் – ட்ரம்ப்

March 4, 2026

“தேவைப்பட்டால், அமெரிக்க கடற்படை ஹார்முஸ் நீரிணை வழியாக டேங்கர்களை விரைவில் அழைத்துச் செல்லும்” என்று டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஈரானுடனான

kasa'

காசல்ரி நீர்ப்போசன பிரதேசத்தில் நீரூற்றுக்கள் அற்றுப்போகும் அபாயம்?

March 4, 2026

காசல்ரி நீர்போசன பிரதேசத்தில் நீரூற்றுக்கள் அற்றுப்போகும் அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். நீர் மின் உத்தி செய்யும்

20

இருபதுக்கு – 20 உலகக் கிண்ணம்: இன்று முதலாவது அரையிறுதிப் போட்டி

March 4, 2026

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டியானது கொல்கத்தாவில் இன்றிரவு 7

iraa

ஈரானில் உயிரிழந்த மாணவிகளின் இறுதிச்சடங்கை ஒளிபரப்பிய அரச தொலைக்காட்சி!

March 4, 2026

ஈரானின் தெற்கு பகுதியில் உள்ள ஒரு பாடசாலை மீது சனிக்கிழமை நடைபெற்ற தாக்குதலில் உயிரிழந்த மாணவிகளின் இறுதிச்சடங்கு ஈரானிய அரசுத்

vimal

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை தாக்குதலின் பிரதான சூத்திரதாரி சஹ்ரானின் சட்டத்தரணியே இன்று நாட்டின் நீதி அமைச்சர்

March 4, 2026

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாக கருதப்படும் சஹ்ரான் ஹாஷிமின் வழக்கில் முன்னிலையான சட்டத்தரணியே இன்று இந்த நாட்டின்