அக்குரேகொட இரட்டைக் கொலைக்கு உதவிய மேலும் இருவர் கைது!

தலங்கமை – அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவியைச் சுட்டுக் கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் இரு சந்தேகநபர்களை மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.

கடந்த பெப்ரவரி 13ஆம் திகதி அக்குரெகொட பகுதியில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் இனந்தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இந்த கொலைச் சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விரிவான விசாரணைகளை தொடர்ந்து, ஏற்கனவே துப்பாக்கிதாரிகள் இருவர் உட்பட 6 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.

அதேநேரம், நேற்று வெள்ளிக்கிழமை (06) முன்னெடுக்கப்பட்ட விசேட நடவடிக்கையின் போது, குற்றவாளிகளுக்கு உதவிய மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் 39 மற்றும் 53 வயதுடையவர்கள் எனவும், இப்பாகமுவ மற்றும் மாகொல பகுதிகளை சேர்ந்தவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில் ஒருவர், தற்போது வெளிநாட்டில் தலைமறைவாக இருக்கும் பாதாள உலகக் குழு உறுப்பினர் வழங்கிய பணத்தில் கொள்வனவு செய்யப்பட்ட பஸ் ஒன்றின் மூலம் கொலையாளி ஒருவரை மொனராகலை பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

இதன்போது, குறித்த பஸ் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்பு பிரிவினர் மற்றும் ஹோமாகமை குற்றத்தடுப்பு பிரிவினர் இணைந்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

பிரேத அறையில் யுவதியின் சடலம் மீது பாலியல் வல்லுறவு: டிக்கோயா வைத்தியசாலையில் சர்ச்சை

March 7, 2026

ஹட்டன் – டிக்கோயா ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் யுவதியின் சடலத்தை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவத்தில், மூன்று

Brom

பிராம்டனில் வெள்ள அபாயம் அதிகரிக்கலாம் – நகராட்சி எச்சரிக்கை

March 7, 2026

பிராம்டன், ஒன்டாரியோ பகுதிகளில் பகல் நேர வெப்பநிலைகள் உயரத் தொடங்கியுள்ளதால், உருகும் பனி மற்றும் ஆற்றில் உள்ள பனிக்கட்டிகள் மழையுடன்

dau

மிசிசாகாவில் பாடசாலை மாணவர்களுக்கான கிரிக்கெட் போட்டி

March 7, 2026

026 பிரிமியர்ஸ் கப் பாடசாலை மாணவர்களுக்கான கிரிக்கெட் போட்டியில் நேற்று மிசிசாகாவில் நடைபெற்றது.மேற்படி கிரிக்கெட் போட்டியில் மாணவர்கள், பயிற்சியாளர்கள் மற்றும்

veh

வாகன இறக்குமதிக்கு விதிக்கப்படும் வரிகள் குறித்து…

March 7, 2026

வரி திருத்தங்களின் ஒட்டுமொத்த விளைவாக, வாகன இறக்குமதிக்கான மொத்த சுங்க வரி கட்டமைப்பில் எந்த மாற்றமும் இருக்காது என வாகன

ir

இலங்கைக் கடற்பரப்பில் வெடித்து சிதறிய கப்பவிவ் உயிரிழந்தவர்களின் பிரேத பரிசோதனை முடிவுகள்

March 7, 2026

இலங்கையின் தெற்கு கடல் எல்லைக்கு அருகே ஈரானின் ஐஆர்ஐஎஸ் தேனா என்ற ஈரானின் போர்க்கப்பல், அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலால் தாக்கி

kin

சட்டவிரோத மணல் அகழ்வு : 15 படகுகள் பறிமுதல்

March 7, 2026

​கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உப்பாறு பகுதியில் சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வில் ஈடுபட்ட இருவர், 15 மணல் ஏற்றிய படகுகளுடன்

du

டுபாய் சர்வதேச விமான நிலையத்திற்கருகில் வெடிப்பு

March 7, 2026

டுபாய் சர்வதேச விமான நிலையத்திற்கு மேலே இன்று (7) காலை வெடிப்பு சம்பவம் ஏற்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து வான்பரப்பில் புகைமூட்டம் காணப்பட்டதாகவும்

gu

ஜா-எலவில் துப்பாக்கிச் சூடு!

March 7, 2026

ன்று (07) அதிகாலை ஜா-எல பகுதியில் பட்டுவத்தே சாமரவின் மனைவியின் வீட்டின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு தொடர்பில் மேலும்

is

இலங்கையர்களுக்கு அவசர எச்சரிக்கை

March 7, 2026

நிலவும் மோதல் நிலைமை காரணமாக, இஸ்ரேலின் வடக்கு பிராந்தியத்தில் பணிபுரியும் இலங்கையர்கள் தமது பாதுகாப்பு குறித்து மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு

1688202098-EARTHQUAKE-6

ஈரானில் நிலநடுக்கம்

March 7, 2026

ஈரானின் பண்டார் அப்பாஸ் (Bandar Abbas) பகுதிக்கு மேற்கே இன்று (07) காலை ரிக்டர் அளவுகோலில் 4.1 ஆகப் பதிவான

war

கடற்​படை​யின் ட்ரோன் ஏவும் கப்​பல் உட்பட ஈரானின் 30 போர்க் கப்பல்களை தகர்த்தது அமெரிக்கா

March 7, 2026

ஈ​ரான் கடற்​படை​யின் ட்ரோன் ஏவும் கப்​பல் உட்பட 30 இற்கும் மேற்​பட்ட கப்​பல்​களை தகர்த்​த​தாக​வும், கடந்த 72 மணி நேரத்​தில்

mur

முதியவர் அடித்துக் கொலை: ஒருவர் கைது!

March 7, 2026

மின்னேரியா – ரொட்டவெவ பகுதியில், தனது சகோதரியைக் காப்பாற்றச் சென்ற முதியவர் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம்