ஹமாஸ் அமைப்பினர் சரியான நடவடிக்கைகளில் ஈடுபடாவிட்டால் அவர்களின் முடிவு மோசமாகவும், கொடூரமாகவும் இருக்கும்,” என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார்.
மேற்காசிய நாடான இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினர் இடையே, கடந்த இரு ஆண்டுகளாக போர் நீடித்து வருகிறது. இந்தப் போரை முடிவுக்கு கொண்டு வர உலக நாடுகள் முயற்சித்தன. குறிப்பாக, அமெரிக்க அதிபர் டிரம்ப் தலையிட்டு, 20 அம்ச திட்டத்தை வலியுறுத்தியதை அடுத்து, சில நாட்களுக்கு முன் போர் நிறுத்த உடன்படிக்கை ஏற்பட்டது.
போர் நிறுத்தம் அமலில் உள்ள நிலையில், காசாவில் ஹமாஸ் மற்றும் உள்ளூர் அமைப்பினர் இடையே மோதல் வெடித்துள்ளது. போரின் போது, இஸ்ரேலுக்கு ஆதரவாக உள்ளூர் அமைப்பினர் செயல்பட்டதாக கூறி, எட்டு பேருக்கு ஹமாஸ் தரப்பில் துாக்கு தண்டனை சமீபத்தில் நிறைவேற்றப்பட்டது.
அங்கிருந்த இஸ்ரேல் ராணுவத்தினர் மீது ஹமாஸ் குண்டு வீசியதாக கூறப்படுகிறது. இதையடுதது, ‘காசா மக்களை கொல்வதை நிறுத்தாவிட்டால், ஹமாஸ் அமைப்பினரை அழிப்பதைத் தவிர வேறு வழியில்லை’ என, டிரம்ப் எச்சரித்து இருந்தார்.