ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் இலஞ்ச வழக்கு: போலிப் பிணையாளர்கள் கைது

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு எயார்பஸ் விமானங்களைக் கொள்வனவு செய்தபோது இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அந்த நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவுக்கு பிணையாளர்களாக வந்த இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த இரு சந்தேக நபர்களும் வாழைத்தோட்டம் பொலிஸாரால் நேற்று பிற்பகல் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இதன்போது குறித்த சந்தேகநபர்களை எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதுக்கடை நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் உள்ள சாஞ்சி ஆராச்சிவத்த பகுதியில் வசிக்கும் மொஹமட் ரிஸ்வான் மற்றும் மொஹமட் இர்ஷான் ஆகிய இரு சந்தேக நபர்களுமே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதன்போது வாழைத்தோட்டம் பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவிக்கையில், இந்த இரு சந்தேக நபர்களும் விளக்கமறியலில் உள்ள கபில சந்திரசேனவை அறியாதவர்கள் என்றும், தலா 15,000 ரூபாய் பணத்தைப் பெற்றுக்கொண்டு பிணையாளர்களாக முன்னிலையாகியுள்ளதாகவும் குறிப்பிட்டனர்.

பிணை பெறுவதற்காக வந்த இந்த சந்தேக நபர்கள் தொடர்பில் சந்தேகத்திற்கிடமான நிலை ஏற்பட்டதையடுத்து, நீதிமன்ற ஊழியர்கள் செய்த முறைப்பாட்டின் பிரகாரமே இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர்களுக்கு முறையான தொழில் அல்லது வருமான வழி இல்லை என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதன்படி, சந்தேகநபர்களை மேலதிக விசாரணைகளுக்காக விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்ட கொழும்பு மேலதிக நீதவான் லஹிரு சில்வா, பிணைக்காக இவர்கள் கிராம உத்தியோகத்தர் சான்றிதழ்களைப் பெற்றுக்கொண்டமை குறித்து விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறும் உத்தரவிட்டார்.

E7OQZHSI4BFLXIQ6AVSVBLR2IE

பெர்லின் பிரைட் (Berlin Pride) நிகழ்வில் நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதலைத் தொடர்ந்து மொன்றியல் ஃபியர்டே (Fierté Montreal) பாதுகாப்பு பலப்படுத்தப்படுகிறது

July 28, 2026

கடந்த வார இறுதியில் பெர்லின் பிரைட் நிகழ்வில் ஒரு நபர் கொல்லப்பட்டுப் பல காயமடைந்த தாக்குதலைத் தொடர்ந்து, மொன்றியல் ஃபியர்டே

IHRULYUKZJG3VPPAZFZSRKMH2M

சிறுவர்களை காரில் வைத்துக்கொண்டு அதிவேகமாக காரைச் செலுத்திய ஓட்டுநருக்கு வழக்கு பதிவு

July 28, 2026

திங்கட்கிழமை காலை 10 ஆவது வீதியில் (10th Line) மணிக்கு 50 கி.மீ வேகம் அனுமதிக்கப்பட்ட பகுதியில், மணிக்கு 93

savak

சாவகச்சேரி நகர சபையின் விசேட கூட்டம்

July 28, 2026

யாழ்ப்பாணம் – சாவகச்சேரி நகர சபையின் உப தவிசாளர் பதவியிலிருந்தும் நகர சபை உறுப்புரிமையில் இருந்தும் ஞானப்பிரகாசம் கிஷோரை நீக்கி

arjun

அர்ச்சுனா இராமநாதனுக்குப் பிணை

July 28, 2026

கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, நேற்று (27) ஒரு சட்டத்தரணி

ne

நீர்கொழும்பு சிறை கலவரம்;சந்தேக நபர்களாக நால்வர்!

July 28, 2026

அண்மையில் நடைபெற்ற நீர்கொழும்பு சிறைச்சாலைக் கலவரம் தொடர்பில் நான்கு பேர் சந்தேக நபர்களாக பெயரிடப்பட்டுள்ளனர். கடந்த 5ஆம் மற்றும் 6ஆம்

ner

அரச சேவையில் தேசிய நேர்மை வாரம்!

July 28, 2026

அரச சேவையில் நேர்மை, பொறுப்புணர்வு மற்றும் வெளிப்படைத்தன்மையை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்படும் “நேர்மைக் கலாசாரம் – கிளீன் ஸ்ரீலங்கா”

photo-collage.png (3)

ஓகஸ்ட் 30; சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் குறித்த விசேட சந்திப்பு

July 28, 2026

எதிர்வரும் ஓகஸ்ட் 30 ஆம் திகதி சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு, யாழ்ப்பாணம் தந்தை செல்வா அரங்கில்

sea

அவசர வானிலை எச்சரிக்கை!

July 28, 2026

பொத்துவிலிலிருந்து ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளும் கல்பிட்டியிலிருந்து மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளும் அவ்வப்போது

sa

நாட்டை அரசாங்கம் அதலபாதாளத்திற்கு அழைத்துச் சென்று கொண்டிருக்கின்றது…

July 28, 2026

தற்போது இயலாமையால் பாதிக்கப்பட்டுள்ள செயல்திறனற்ற ஜனாதிபதியும், பிரதமரும் மற்றும் வேலை செய்யத் தெரியாத அரசாங்கமும் நமது நாட்டை நாளுக்கு நாள்

spo

மெய்வல்லுநர் தெரிவுக்குழு இராஜினாமா!

July 28, 2026

இலங்கை மெய்வல்லுநர் போட்டிகளுக்கான தெரிவுக்குழு உறுப்பினர்கள் பதவி விலகியுள்ளனர். பல்வேறு காரணங்களை முன்னிறுத்தி, அவர்கள் தமது பதவிகளில் இருந்து விலகியுள்ளதாக

YQIVVADQMVALHP6FFWJKTJMBMI

அமெரிக்க தூதரகத்தில் துப்பாக்கிச் சூடு – சந்தேகநபர் பயணித்த வாகனம் 140 கி.மீ வேகத்தைத் தொட்டதால் பொலிஸார் துரத்துவதைக் கைவிட்டனர்

July 28, 2026

திங்கட்கிழமை அதிகாலை அமெரிக்க தூதரகத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தைத் தொடர்ந்து, சந்தேகநபரின் வாகனத்தைப் பொலிஸார் டான் வேலி பார்க்வேயில்

Arrest

தனியார் வகுப்பு நிலைய உரிமையாளர் போதைப்பொருளுடன் கைது

July 28, 2026

ஹொரணை நகரிலுள்ள பிரபல தனியார் வகுப்பு நிலையமொன்றின் உரிமையாளர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைது செய்யப்பட்டவர் ஹொரணை,