அகில இலங்கை மக்கள் எழுச்சி கட்சியின் நிறுவனருக்கு எதிராக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் த. சத்தியமூர்த்தி யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
யாழ்.போதனா வைத்தியசாலைக்குள் கடந்த செவ்வாய்க்கிழமை விநியோகிக்கப்பட்டு தினசரி பத்திரிகைகளுக்குள், அகில இலங்கை மக்கள் எழுச்சி கட்சியின் பெயரில் வெளியிடப்பட்ட துண்டுபிரசுரங்களும் இணைத்து விநியோகிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு யாழ். நகர பகுதியில் இத்துண்டுபிரசுரம் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
குறித்த துண்டு பிரசுரத்தில் கூறப்பட்டுள்ள கருத்தொன்று தனது நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக வைத்தியர் சத்தியமூர்த்தி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.