வேலைவாய்ப்பு மோசடி செய்த தம்பதி கைது!

வெளிநாடு தொழில் பெற்றுத்தருவதாக குறிப்பிட்டு நாட்டின் பல்வேறு பிரதேசங்ககளை சேர்ந்தவர்களிடம் இருந்து ஒருகோடி 80 லட்சம் ரூபாவுக்கும் அதிக பணம் மோசடி செய்த கணவன் மனைவி தம்பதிகள் சீதுவ பிரதேசத்தில் இருந்து இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட விசாரணை பிரிவு அதிகாரிகளால் புதன்கிழமை (11) கைது செய்யப்பட்டுள்ளனர்.

ரைன்போ னெக்கஸ் என்ற பெயரில் பணியகத்தினால் அனுமதிக்கப்பட்ட அனுமதிப்பத்திரம் இல்லாமல் மோசடியாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனம் ஒன்றை மேற்கொண்டு சென்று, பெண் ஒருவரிடமிருந்து 40 இலட்சம் ரூபா மோசடி செய்துள்ளதாக பணியகத்துக்கு கிடைக்கப்பெற்ற 12 முறைப்பாடுகளுக்கமைய, பணியகத்தின் விசேட விசாரணை பிரிவு அதிகாரிகளால் குறித்த சந்தேக நபரை கைது செய்வதற்காக விசேட விசாரணை ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது விசாரணை அதிகாரிகள் குறித்த பெண்ணை கைதுசெய்வதற்காக ஒரு வருட காலத்துக்குள் பல தடவைகள் முயற்சித்தபோதும் குறித்த பெண், விசாரணை அதிகாரிகளிடமிருந்து மறைந்து வந்துள்ளார்.

இந்த நிலையில் குறித்த பெண். சீதுவ பிரதேசத்தில் இருப்பதாக கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றுக்கமைய, பணியகத்தின் பொலிஸ் பிரிவு விசேட விசாரணை அதிகாரிகள் அவவை கைது செய்வதற்காக விசாரணை மேற்கொண்டதன் பிரகாரம் சீதுவ பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது இந்த மோசடி நடவடிக்கைக்கு உதவியாக இருந்த பெண்ணின் கணவனும் கைதுசெய்யப்பட்டதுடன் குறித்த இடத்தில் இருந்து, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதான 200 ஒப்பந்தங்கள், மருத்துவ நிலையங்களுக்கு அனுப்பும் கடிதங்கள், கதிர் இயக்க 300 அறிக்கைகள் மற்றும் அதிகளவிலான பிரசார பத்திரங்கள் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.

மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின்போது சீதுவ பிரதேசத்தில் வாடகை அடிப்படையில் பெற்றுக்கொள்ளப்பட்ட வீடொன்றில் இந்த வியாபார நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாகவும் குறித்த பெண் ஒருகோடி 80 லட்சம் ரூபா மோசடி செய்துள்ளமையும் வெளிப்பட்டுள்ளது. கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் இன்று புதின்கிழமை நீர்கொழும்பு நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பணியகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுளளது.

saji

10 இலட்சம் இலங்கையர்களின் பாதுகாப்பு தொடர்பில் தீவிர ஆலோசனை

March 4, 2026

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தீவிரமடைந்துள்ள போர்ச் சூழல் காரணமாக இலங்கைக்கு ஏற்படவுள்ள சவால்கள் குறித்து ஆராயும் நோக்கில், எதிர்க்கட்சித் தலைவர்

arres

வெற்றிலைக்கேணி பகுதியில் இருவர் கைது

March 4, 2026

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் மாட்டுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது நடவடிக்கை நேற்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

tr

அமெரிக்க கடற்படை ஹார்முஸ் நீரிணை வழியாக செல்லும் – ட்ரம்ப்

March 4, 2026

“தேவைப்பட்டால், அமெரிக்க கடற்படை ஹார்முஸ் நீரிணை வழியாக டேங்கர்களை விரைவில் அழைத்துச் செல்லும்” என்று டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஈரானுடனான

kasa'

காசல்ரி நீர்ப்போசன பிரதேசத்தில் நீரூற்றுக்கள் அற்றுப்போகும் அபாயம்?

March 4, 2026

காசல்ரி நீர்போசன பிரதேசத்தில் நீரூற்றுக்கள் அற்றுப்போகும் அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். நீர் மின் உத்தி செய்யும்

20

இருபதுக்கு – 20 உலகக் கிண்ணம்: இன்று முதலாவது அரையிறுதிப் போட்டி

March 4, 2026

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டியானது கொல்கத்தாவில் இன்றிரவு 7

iraa

ஈரானில் உயிரிழந்த மாணவிகளின் இறுதிச்சடங்கை ஒளிபரப்பிய அரச தொலைக்காட்சி!

March 4, 2026

ஈரானின் தெற்கு பகுதியில் உள்ள ஒரு பாடசாலை மீது சனிக்கிழமை நடைபெற்ற தாக்குதலில் உயிரிழந்த மாணவிகளின் இறுதிச்சடங்கு ஈரானிய அரசுத்

vimal

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை தாக்குதலின் பிரதான சூத்திரதாரி சஹ்ரானின் சட்டத்தரணியே இன்று நாட்டின் நீதி அமைச்சர்

March 4, 2026

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாக கருதப்படும் சஹ்ரான் ஹாஷிமின் வழக்கில் முன்னிலையான சட்டத்தரணியே இன்று இந்த நாட்டின்

ku

கூர்மையான ஆயுதத்தால் மனைவியைக் கொலை செய்த கணவன்

March 4, 2026

கேகாலை, அரநாயக்க பிரதேச வைத்தியசாலையில் பணியாற்றி வந்த பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். 35 வயதுடைய ருவினி மதுஷிகா என்ற

Pee

மனிதக் கடத்தல்; பீல் பிராந்திய காவல்துறையினரால் விழிப்புணர்வுக் கருத்தரங்கு

March 4, 2026

கனடாவின் பீல் பிராந்திய காவல்துறையினரால் மனிதக் கடத்தல் தொடர்பான விழிப்புணர்வுக் கருத்தரங்கு நடைபெற்றுள்ளது. கடத்தலில் இருந்து உயிர் தப்பியவர்களுக்கு ஆதரவு,

h

மிசிசாகாவைச் சேர்ந்த பெண்ணொருவரின் கொலை தொடர்பாக பீல் பிராந்திய காவல் துறை முக்கிய அறிவிப்பு

March 4, 2026

கனடா மிசிசாகாவைச் சேர்ந்த பெண்ணொருவரின் கொலை தொடர்பாக பீல் பிராந்திய காவல் துறை கொலை மற்றும் காணாமல் போனோர் பிரிவு

leb

வான்வழித் தாக்குதல்கள் காரணமாக லெபனானிலிருந்து 58,000 பேர் வரை இடம்பெயர்வு

March 4, 2026

லெபனான் முழுவதும் இஸ்ரேலிய இராணுவம் முன்னெடுத்து வரும் வான்வழித் தாக்குதல்கள் காரணமாக அந்நாட்டின் மனிதாபிமான நிலைமை பாரிய சரிவைச் சந்தித்துள்ளது.

dro

அமெரிக்கத் தூதரகத்தின் மத்திய புலனாய்வு முகவரக மையம் ஒன்றின் மீது ட்ரோன் தாக்குதல்

March 4, 2026

சவுதி அரேபியாவிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் மத்திய புலனாய்வு முகவரக (CIA) மையம் ஒன்றின் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.