பிரெஞ்சுக் கிண்ணத் தொடரிலிருந்து நடப்புச் சம்பியன்களான பரிஸ் ஸா ஜெர்மைன் வெளியேற்றப்பட்டுள்ளது.
தமது மைதானத்தில் செவ்வாய்க்கிழமை (13) நடைபெற்ற விலகல் முறையிலான இத்தொடரின் இறுதி 32 அணிகளுக்கான சுற்றுப் போட்டியில் பரிஸ் கால்பந்தாட்டக் கழகத்தை எதிர்கொண்ட பரிஸ் ஸா ஜெர்மைன் 0-1 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தே தொடரிலிருந்து வெளியேறியது.
பரிஸ் சார்பாகப் பெறப்பட்ட கோலை ஜொனதன் இகொனே பெற்றிருந்தார்.