மத்திய கிழக்கு நாடுகளுக்கு தொழில்களுக்காக செல்லத் தயாராக இருந்த சுமார் 3,000 இலங்கைர்கள் போர் நிலைமை காரணமாக செல்ல முடியாமல் இருப்பதாக தெரிவிக்கப்படுகிது.
போர் சூழல் தணிந்த பின் அவர்களை தொழில்களுக்காக வெளிநாடுகளுக்கு அனுப்ப தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் கோசல விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
விசா மற்றும் விமான டிக்கெட் முன்பதிவு செய்வதற்கான தேவையான நடவடிக்கைகளை பணியகம் மேற்கொள்ளும் என்றும் அடுத்த இரண்டு முதல் மூன்று வாரங்களுக்குள் நிலைமை சீராகும் பட்சத்தில் இவர்கள் தொழில்களுக்காக வெளிநாடு செல்ல வாய்ப்பு கிடைக்கும் என்றும் அவர் கூறினார்.
மேலும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மத்திய கிழக்கு நாடுகளுக்கு தொழிலாளர்களை அனுப்புதல் மற்றும் அவர்களுக்கு பயிற்சி அளித்தல் ஆகிய செயல்களை தொடர்ந்து மேற்கொண்டு வருவதாகவும் அவற்றில் எந்த தடையும் இல்லை என்றும் அவர் வலியுறுத்தினார்.
இந்நேரத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சவுதி அரேபியா. குவைத், ஓமான், பஹ்ரைன், கட்டார் மற்றும் இஸ்ரேல் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளில் சுமார் 10 இலட்சம் இலங்கையர்கள் வேலை செய்து வருகின்றனர்.