இலங்கைப் பல்கலைக்கழகங்கள் மற்றும் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுக்கிடையில் கல்வி ஒத்துழைப்புக்களை நோக்காகக் கொண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.
2025.11.03 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு இன்று செவ்வாய்க்கிழமை (4 நவம்பர் 2025) ஊடக அமைச்சில் இடம்பெற்றது.
இதன் போதே இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இலங்கைப் பல்கலைக்கழகங்களை உலகத் தரப்படுத்தல் சுட்டிகளுக்கு மேம்படுத்தல் மற்றும் சர்வதேசமயப்படுத்துவதற்காக வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுடன் உயர்கல்வி ஒத்துழைப்புக்களை ஏற்படுத்தும் நோக்கில் கீழ்வரும் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொள்ளும் நோக்கில் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சராக பிரதமர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
பேராதனைப் பல்கலைக்கழகம் மற்றும் சீனக் குடியரசின், சீன விஞ்ஞானக் கல்வி நிறுவகத்தின் கீழுள்ள புவியியல் மற்றும் புவி இயற்பியல் (Institute of Geology and Geophysics) இற்குமிடையில் 05 வருடங்களுக்கு செல்லுபடியாகும் புரிந்துணர்வு ஒப்பந்தம் வழங்கியுள்ளது.
களனிப் பல்கலைக்கழகம் மற்றும் இந்தியாவின் பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்கும் இடையிலான 05 வருடங்களுக்கு செல்லுபடியாகும் புரிந்துணர்வு ஒப்பந்தம் வழங்கியுள்ளது.
மொரட்டுவ பல்கலைக்கழகம் மற்றும் ஜப்பானின் யொகோஹோமா தேசிய பல்கலைக்கழகத்தின் பல்புலமை விஞ்ஞான நிறுவகம் (Institute of Multidisciplinary Sciences) இற்குமிடையில் 05 வருடங்களுக்கு செல்லுபடியாகும் புரிந்துணர்வு ஒப்பந்தம் வழங்கியுள்ளது
மொரட்டுவ பல்கலைக்கழகம் மற்றும் ஜப்பானின் டொகுயாமா பல்கலைக்கழகத்தின் தேசிய தொழிநுட்ப நிறுவகம் (National Institute of Technology) இற்குமிடையில் 05 வருடங்களுக்கு செல்லுபடியாகும் புரிந்துணர்வு ஒப்பந்தம் வழங்கியுள்ளது.