பேரிடர் மீட்பு நடவடிக்கைகளின் போது உச்சபட்ச தியாகத்தை செய்த இலங்கை விமானப்படை விமானி விங் கமாண்டர் நிர்மல் சியபலபிட்டியவுக்கு மரணத்திற்குப் பின் பட்டம் வழங்குவதாக கொழும்பு பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
சர்வதேச உறவுகள் திட்டத்தில் முதுகலைப் பட்டம் பெற்ற அவர், தனது இறுதி தருணம் வரை தைரியத்துடனும் அர்ப்பணிப்புடனும் தேசத்திற்கு சேவை செய்தார்.
அவரது சேவை மற்றும் கல்வி அர்ப்பணிப்பைக் கௌரவிக்கும் வகையில், பல்கலைக்கழகம் அவரது பட்டத்தை மிக உயர்ந்த கௌரவங்களுடன் வழங்கும் என கொழும்பு பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
வென்னப்புவ, லுனுவில பகுதியில் நிவாரண பொருட்களை கொண்டு செல்லும் பணியின் போது உலங்குவானூர்தி விபத்தில் விமானி சியபலபிட்டிய உயிரிழந்தார்.
விபத்தின் போது, விமானத்தில் இரண்டு விமானிகள் உட்பட ஐந்து விமானப்படை வீரர்கள் இருந்தனர், மேலும் உள்ளூர்வாசிகள் மற்றும் பொலிஸாரினால் அவர்கள் விரைவாக மீட்கப்பட்டு மாரவில மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இருப்பினும், தலைமை விமானி, 41 வயதான விங் கமாண்டர் நிர்மல் சியம்பலாபிட்டிய, விபத்தில் கொல்லப்பட்ட நிலையில் நாட்டு மக்களுக்கான அவரின் உயரிய தியாகத்தை கௌரவிக்கும் வகையில், இந்த பட்டம் வழங்கப்படவுள்ளது.