விசாரணைக்கு உட்படுத்தப்படும் யாழ்.பல்கலைக்கழக மாணவர்களுக்கு சட்டத்தரணி மணிவண்ணன் ஆதரவு

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் கறுப்புக்கொடி ஏற்றப்பட்ட சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு உட்படுத்தப்படும் மாணவர்களுக்குத் தமது முழுமையான ஆதரவை வழங்குவதாகவும், அவர்களுடன் இணைந்து தொடர்ந்தும் பயணிக்கப்போவதாகவும் தமிழ் மக்கள் கூட்டணியின் உப செயலாளரும், சட்டத்தரணியுமான விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

கடந்த சுதந்திர தினத்தன்று பல்கலைக்கழக வளாகத்தில் தேசியக் கொடி இறக்கப்பட்டு, கறுப்புக் கொடி ஏற்றப்பட்டமை குறித்து யாழ். மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினர் இன்று வியாழக்கிழமை மூன்று மாணவர்களிடம் சுமார் 5 மணித்தியாலங்கள் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

இதன்போது மாணவர்களுக்கான சட்டப் பிரதிநிதித்துவத்தை சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் வழங்கியிருந்தார்.இந்த விசாரணைகளின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அவர் குறிப்பிட்டதாவது,

தமிழ் மக்களின் உணர்வுகளையும் உரிமைகளையும் வெளிப்படுத்தும் விதமாகவே பல்கலைக்கழக மாணவர்கள் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். இது அவர்களின் உணர்வுபூர்வமான மற்றும் நியாயமான ஒரு விடயமாகும்.

மாணவர்களின் இத்தகைய நடவடிக்கைகளுக்கு எதிராக பொலிஸார் முன்னெடுக்கும் சட்ட நடவடிக்கைகளுக்கு எதிராக நாம் துணை நிற்போம் என்றார்.

இன்றைய விசாரணையின் போது மாணவர்களிடம் பெறப்பட்ட வாக்குமூலங்கள் அனைத்தும் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்படும் எனவும், அங்கிருந்து கிடைக்கும் ஆலோசனைகளின் அடிப்படையிலேயே அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் பொலிஸார் தமக்குத் தெரிவித்ததாக சட்டத்தரணி மணிவண்ணன் மேலும் குறிப்பிட்டார்.

இதேவேளை, மாணவர்களைப் பொலிஸ் விசாரணைக்கு அழைத்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இன்று விரிவுரைகளைப் புறக்கணித்து பல்கலைக்கழக முன்றலில் பாரிய எதிர்ப்புப் போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர்.

மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்திற்கொண்டு அவர்களுக்குத் தேவையான அனைத்து சட்ட ஆலோசனைகளையும் தொடர்ந்து வழங்கவுள்ளதாக சட்டத்தரணி மணிவண்ணன் உறுதியளித்துள்ளார்.

par

அரசாங்கத் துறையில் சைபர் பாதுகாப்பு குறித்த அறிவை மேம்படுத்தும் பயிற்சி !

March 20, 2026

அரசாங்கத் துறையில் சைபர் பாதுகாப்பு குறித்த அறிவை மேம்படுத்தும் நோக்கில், பாராளுமன்ற ஊழியர்களுக்கான விசேட பயிற்சித் திட்டம் ஒன்றை இலங்கை

fuel_1

எரிபொருள் விநியோகப்பணிகள் தொடர்ச்சியாக நடைபெறும்

March 20, 2026

நாளை மற்றும் நாளை மறுதினம் விநியோகஸ்தர்களுக்கு எரிபொருள் விநியோகிக்கும் பணிகள் தொடர்ச்சியாக நடைபெறும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

joh

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் உள்ளிட்ட ஐவருக்கு மீண்டும் விளக்கமறியல்

March 20, 2026

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, அவரது இரு புதல்வர்கள் உள்ளிட்ட 5 சந்தேகநபர்களைத் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு வத்தளை நீதவான்

sathosa

100 பொருட்களுக்கு விசேட விலைக்கழிவு

March 20, 2026

எதிர்வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு 100 வகையான பொருட்களுக்கு ‘சதொச’ விற்பனை நிலையங்கள் ஊடாக விலைக்கழிவு வழங்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர்

Diese

வர்த்தக நிலையம் ஒன்றில் 720 லீற்றர் டீசலுடன் இருவர் கைது

March 20, 2026

ஹங்வெல்ல, எம்புல்கம சந்தியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 720 லீற்றர் டீசலுடன் இரு சந்தேக

Man

முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவுக்கு எதிரான ஊழல் விசாரணை நிறைவு

March 20, 2026

முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டு தொடர்பான விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாக இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு இன்று

acc

விபத்தில் மத போதகர் உயிரிழப்பு

March 20, 2026

ஹங்வெல்ல வனஹாகொட பகுதியில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பஸ்ஸுடன் முச்சக்கரவண்டி ஒன்று நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், முச்சக்கரவண்டியின்

MAnivabnna

விசாரணைக்கு உட்படுத்தப்படும் யாழ்.பல்கலைக்கழக மாணவர்களுக்கு சட்டத்தரணி மணிவண்ணன் ஆதரவு

March 20, 2026

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் கறுப்புக்கொடி ஏற்றப்பட்ட சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு உட்படுத்தப்படும் மாணவர்களுக்குத் தமது முழுமையான ஆதரவை வழங்குவதாகவும், அவர்களுடன் இணைந்து

anur

அமெரிக்காவின் கோரிக்கையை இலங்கை நிராகரித்தது – ஜனாதிபதி

March 20, 2026

அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் விடுத்த இராணுவ ரீதியான கோரிக்கைகளை நிராகரிப்பதன் மூலம், இலங்கை தனது வெளியுறவுக் கொள்கையில்

bah

போர்ச் சூழல் காரண​மாக பஹ்ரைனில் 18 நாட்களாக தவித்த 192 இந்தியர்கள் மீட்பு

March 20, 2026

இஸ்​ரேல், அமெரிக்​கா, ஈரான் இடையே நிலவி வரும், கடுமை​யான போர் சூழல் காரண​மாக, பஹ்ரைனில் 18 நாட்​களுக்கு மேல், தவித்​துக்

manna

மன்னார் அபிவிருத்திக்கு ரூ.10 கோடி ஒதுக்கீடு

March 20, 2026

மன்னார் நகர சபையின் நிரந்தரச் சேமிப்புக் கணக்கிலிருந்து 100 மில்லியன் ரூபாய் (10 கோடி) நிதி ஒதுக்கீட்டில், மன்னார் வைத்தியசாலையில்

ira

குவைத் எண்ணெய் நிலையத்தின் மீது ஈரான் தாக்குதல்

March 20, 2026

தாக்குதல்களை நிறுத்துமாறு ஈரானுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கைகளையும் மீறி, குவைத்தின் அரச எண்ணெய் நிறுவனத்தின் மீது ட்ரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.