வவுனியா மாநகரசபைக்கு எதிரான இடைக்கால தடை உத்தரவு நீடிப்பு

வவுனியா மாநகரசபைக்கு எதிரான இடைக்கால தடை உத்தரவு மேல் முறையீட்டு நீதிமன்றத்தால் எதிர்வரும் ஜனவரி 23 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

வவுனியா மாநகரசபையின் முதல்வர், பிரதி முதல்வர் ஆகியோர் அந்த பதவிகளை வகிப்பதற்கு இடைக்கால தடை உத்தரவை விதித்து கொழும்பு மேல் முறையீட்டு நீதிமன்றம் கடந்த ஒக்டோபர் மாதம் 21 ஆம் திகதி தடை உத்தரவிட்டிருந்தது.

குறித்த வழக்கு நேற்று (08.12.2025) மீண்டும் மூன்றாவது முறையாக மேல் முறையீட்டு நீதிமன்றத்தால் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, பிரதிவாதிகள் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் உள்ளிட்ட சட்டத்தரணிகள் வழக்கு பிரதி மேயருக்கு எதிராக உள்ளமையால் சபை நடவடிக்கைகளை நடத்துவதற்கு அனுமதி கோரினர்.

இதற்கு மனுதாரர் தரப்பு ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் தலைமையிலான சட்டத்தரணிகள் ஆட்சேபம் தெரிவித்தனர்.

குறித்த விடயம் தொடர்பில் நீண்ட விவாதம் இடம்பெற்ற நிலையில் இவற்றை ஆராய்ந்த மேல் முறையீட்டு நீதிமன்றம் மனு மீதான விசாரணைகள் முடிவடையும் வரை முதல்வர் பிரதி முதல்வர் ஆகியோர் அந்த பதவிகளை வகிப்பதற்கு வழங்கப்ட்ட இடைக்கால தடை உத்தரவினை எதிர்வரும் ஜனவரி 23 ஆம் திகதி வரை நீடித்து உத்தரவிட்டுள்ளது.

வவுனியா மாநகரசபை உறுப்பினர்களான க.பிரேமதாஸ் மற்றும் சு.விஜயகுமார் ஆகியோரால் தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பத்திற்கே இவ் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வழக்கின் பிரதிவாதிகளாக ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டமைப்பை சேர்ந்த மாநகர முதல்வர் சு.காண்டீபன், ஜனநாயக தேசிய கூட்டணியைச் சேர்ந்த பிரதி முதல்வர் ப.கார்த்தீபன் ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

குறித்த மனுவில் வவுனியா மாநகர சபையின் முதல்வர் பிரதி முதல்வர் தெரிவின் போது பிரதிவாதிகள் சட்டத்திற்கு முரணான வகையில் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், பிரதி முதல்வர் ப.கார்த்தீபன் மாநகரசபை எல்லைக்குள் வசிக்காத ஒருவராக உள்ளார் எனவும் குறித்த இருவரும் அப் பதவிகளில் இருப்பதற்கு தகுதியற்றவர்கள் என்ற அடிப்படையில் அவர்களின் பதவிகளை செல்லுபடியற்றதாக அறிவுக்குமாறு கோரி இவ் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

chand

எதிரணிகளிடம் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா கோரிக்கை

December 11, 2025

“இயற்கைப் பேரனர்த்தத்தை வைத்து அரசியல் செய்வதில் சில எதிர்க்கட்சிகள் மும்முரமாக உள்ளன. இப்படியான நடவடிக்கையைக் கைவிடுமாறு எதிர்க்கட்சிகளிடம் கேட்டுக்கொள்கின்றேன்” என்று

ha

தீவிரவாதம் மற்றும் வன்முறையைக் கட்டுப்படுத்த கனடா அரசு நடவடிக்கை

December 11, 2025

இணையத்தின் மூலம் இளைஞர்கள் தீவிரவாத நோக்கத்தில் ஈர்க்கப்படுவதை தடுக்க, நான்கு புதிய அமைப்புகள் குற்றச்சாட்டுச் சட்டத்தின் (Criminal Code) தீவிரவாத

ka

வழமைக்குத் திரும்பியது கண்டி – நுவரெலிய வீதி

December 11, 2025

கடும் மழையுடன் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்த கண்டி – நுவரெலியா வீதி உட்பட 4 வீதிகள் வழமைக்கு

thri

100 மில்லியன் ரூபா வழங்கிய திரிபோஷ நிறுவனம்

December 11, 2025

லங்கா திரிபோஷ நிறுவனத்தின் இலாப ஈவாக 100 மில்லியன் ரூபா நிதி நேற்று (10) திறைசேரிக்கு வழங்கப்பட்டுள்ளது. திரிபோஷ நிறுவனத்தின்

utha

‘கனடா உதயன் பல்சுவைக் கலைவிழா 2025’

December 11, 2025

‘கனடா உதயன் பல்சுவைக் கலைவிழா 2025’ எதிர்வரும் 13.12.2025 சனிக்கிழமை நடைபெறவுள்ளது. 1120 Tapscott Road, Unit 3 தமிழிசைக்

dre

யாழ் சாரதி அதிவேக வீதியில் குப்பை வீசியமைக்காகக் கைது!

December 11, 2025

கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக வீதியில் குப்பைகளைக் கொட்டிய ஒருவரை, அதிவேக வீதிப் பொலிஸ் பிரிவின் சீதுவ துணைப் பரிபாலன

rai

இன்றும் பலத்த மழை

December 11, 2025

வடக்கு, வட-மத்திய, கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் இடைக்கிடையே மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என

dee

யுனஸ்கோவின் கலாசார பாரம்பரிய பட்டியலில் தீபாவளி பண்டிகையும்!

December 11, 2025

இந்துக்களின் மிக முக்கிய பண்டிகைகளில் ஒன்றான தீபாவளி, யுனஸ்கோவின் அருவமான கலாசார பாரம்பரிய பட்டியலில் நேற்று (10) இணைக்கப்பட்டுள்ளது. டெல்லி

neela

விவசாய நிலங்கள் மணலால் மூடப்பட்டுள்ளன

December 11, 2025

டித்வா புயல் மற்றும் மழை வெள்ளம் என்பவற்றால் திருகோணமலை நீலாபொல பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் மணலால் முழுமையாக மூடப்பட்டு

vali

சர்வதேச மனித உரிமைகள் தினம்; வடக்கு கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் போராட்டம்

December 10, 2025

சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் வவுனியாவில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. வவுனியா

uthaya

நிதிக் கணிப்பீட்டில் யாழ். மாவட்டத்தில் ஊழல் – உதய கம்மன்பில

December 10, 2025

‘டித்வா’ பேரிடரில் அழிவடைந்த வீடுகளுக்காக வழங்கப்படவுள்ள நிதி கணிப்பீட்டில் யாழ்ப்பாண மாவட்டத்தில் ஊழல் நடந்துள்ளதாக பிவித்துறு ஹெல உறுமய

Education

பாடசாலைகளுக்கான கல்விச் செயற்பாடுகள் குறித்து கல்வி அமைச்சினால் விசேட சுற்று நிரூபம்

December 10, 2025

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான கற்றல் செயற்பாடுகளை ஆரம்பித்தல் மற்றும் தவணைப் பரீட்சைகள் தொடர்பில் கல்வி