“வளமான நாட்டின் அபிமானம் – அவளே நாட்டின் முன்னோடி” – பிரதமர்

பெண்களின் அரசியல், பொருளாதார மற்றும் சமூக உரிமைகள் சட்டப் புத்தகங்களுக்குள் மட்டும் முடங்கிவிடாமல், அவை ஒவ்வொரு பெண்ணும் நிஜ வாழ்க்கையில் அனுபவிக்கக்கூடிய யதார்த்தமாக மாற்றப்பட வேண்டும் என்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

“வளமான நாட்டின் அபிமானம் – அவளே நாட்டின் முன்னோடி” எனும் தொனிப்பொருளில் மாத்தறை, ருஹுணு பல்கலைக்கழகத்தில் நேற்று (08.03.2026) நடைபெற்ற சர்வதேச மகளிர் தினத் தேசிய விழாவில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு பிரதமர் மேலும் உரையாற்றுகையில்; “இன்று பெண்கள் அனுபவிக்கும் கல்வி மற்றும் அரசியல் உரிமைகள் உள்ளிட்ட சகல சுதந்திரங்களும், வரலாறு நெடுகிலும் பெண்கள் முன்னெடுத்த பாரிய போராட்டங்களின் விளைவுகளாகும். இந்த நாளை வெறும் பூங்கொத்துக்களுடன் மட்டும் சுருக்கிவிட முடியாது. அந்த உரிமைகளைப் பாதுகாத்து, பெண்களின் வாழ்க்கையை தற்போதைய நிலையை விட உயர் இடத்திற்குக் கொண்டு செல்வதே அரசின் உன்னத நோக்கமாகும்.

பெண் தொழில்முயற்சியாளர்களின் தயாரிப்புகள் அந்தந்தப் பிரதேசங்களுக்குள் மட்டும் முடங்கிவிடக்கூடாது. அவர்களைத் தேசிய பொருளாதாரத்தின் நேரடிப் பங்காளிகளாக மாற்றும் பின்னணியை அரசு உருவாக்கி வருகின்றது. அதேபோல், பெண்கள் ஊதியம் பெற்றோ அல்லது பெறாமலோ மேற்கொள்ளும் அர்ப்பணிப்பை மதிப்பீடு செய்ய “தேசிய பராமரிப்புக் கொள்கை” ஒன்றை அறிமுகப்படுத்தும் யோசனையை நாடாளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியம் முன்வைத்துள்ளது.

உலகில் நிலவும் பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில், மனிதநேயத்துக்காகவும் அமைதிக்காகவும் முன்னிற்க வேண்டிய பெரும் பொறுப்பு பெண்களுக்கு உள்ளது. எனவே, கருணையுடன் ஒன்றிணைந்து அமைதிக்காகக் குரல் எழுப்புமாறு இந்நாட்டுப் பெண்களிடம் கேட்டுக்கொள்கின்றேன்.” – என்றார்.

இவ்விழாவில் உரையாற்றிய மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ், “நாட்டின் டொலர் கையிருப்பை அதிகரிப்பதற்காக வெளிநாடுகளில் பணிபுரியும் பெண்கள் சிந்திய கண்ணீர் மற்றும் வியர்வைக்குச் சரியான மதிப்பினை வழங்கும் யுகம் தற்போது உதயமாகியுள்ளது. பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் மற்றும் வன்முறைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்காக அனைத்து அமைச்சுக்களையும் ஒருங்கிணைத்த விரிவான கட்டமைப்பு விரைவில் நடைமுறைப்படுத்தப்படும்.” – என்றார்.

இந்தத் தேசிய விழாவின் ஓர் அங்கமாக, நாடு முழுவதிலுமிருந்து தெரிவு செய்யப்பட்ட 25 சிறந்த பெண் தொழில் முயற்சி வெற்றியாளர்களுக்குப் பிரதமரால் கௌரவ விருதுகள் வழங்கி வைக்கப்பட்டன. இந்நிகழ்வில் அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி, பிரதி அமைச்சர் வைத்தியர் நாமல் சுதர்சன, தென் மாகாண ஆளுநர், வெளிநாட்டுத் தூதுவர்கள் மற்றும் பெருந்திரளான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

puputhu

ஆகஸ்ட் மாதம் முதல் மின்வெட்டு ஏற்படும் அபாயம் – முன்னிலை சோசலிசக் கட்சி எச்சரிக்கை

March 9, 2026

நாட்டில் கடந்த பத்து நாட்களாக நிலக்கரி ஏற்றிய கப்பல்கள் எதுவும் வருகை தராத காரணத்தினால் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதல்

ni

புதிய தவிசாளராக றியாஸ் ஆதம் தெரிவு!

March 9, 2026

நிந்தவூர் பிரதேச சபையை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கைப்பற்றியதுடன் புதிய தவிசாளராக சட்டத்தரணி றியாஸ் ஆதம் தெரிவானார். அம்பாறை

en

வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணி விபத்தில் உயிரிழப்பு

March 9, 2026

இன்று (09) மாலை வாத்துவ ரயில் நிலையத்திற்கும் பின்வத்தை ரயில் நிலையத்திற்கும் இடையில் அமைந்துள்ள ரயில் பாலத்தின் மீது, இரண்டு

fire

கடும் வறட்சி; பற்றி எரியும் காடு

March 9, 2026

மத்திய மலைநாட்டில் நிலவும் கடும் வறட்சியான வானிலையைத் தொடர்ந்து, ஹட்டன் – டிக்கோயா பிரதான வீதியின் அளுத்கம பகுதியில் நேற்று

ha

“வளமான நாட்டின் அபிமானம் – அவளே நாட்டின் முன்னோடி” – பிரதமர்

March 9, 2026

பெண்களின் அரசியல், பொருளாதார மற்றும் சமூக உரிமைகள் சட்டப் புத்தகங்களுக்குள் மட்டும் முடங்கிவிடாமல், அவை ஒவ்வொரு பெண்ணும் நிஜ வாழ்க்கையில்

arrest

பல  காலமாக போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட பெண் கைது 

March 9, 2026

ஹட்டன் பகுதியில் பல வருடங்களாக போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த பெண் ஒருவர், ஹட்டன் பொலிஸ் பிரிவின் விசேட விசாரணைப்

wil

விமலுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

March 9, 2026

ஐக்கிய நாடுகளின் முன்னாள் மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கைக்கு விஜயம் செய்தபோது, வீதிகளை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் வழக்கை

keri

கேரி கிர்ஸ்டன் இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமனம்

March 9, 2026

இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக, தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வீரரும் புகழ்பெற்ற பயிற்சியாளருமான கேரி கிர்ஸ்டன்

thekk

வன்னியில் தேக்குமரக் குற்றிகளை கடத்திய சாரதி கைது

March 9, 2026

வன்னி பகுதியில் இருந்து தேக்குமரக் குற்றிகளை சட்டவிரோதமாக ஏற்றிவந்த லொறி ஒன்றை சாவகச்சேரி பொலிஸார் கைப்பற்றியுள்ளனர் புத்தூர் சந்தி பகுதியில்

pu

ஈரானின் புதிய உச்ச தலைவருக்கு ரஷ்ய ஜனாதிபதி புடின் வாழ்த்து

March 9, 2026

ஈரானின் புதிய உச்ச தலைவராக நியமிக்கப்பட்டுள்ள முஜ்தபா காமேனிக்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளதாக வெளிநாட்டு

sa vas

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கைது

March 9, 2026

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளார். சுமார் 243.8 மில்லியன் ரூபாய் பெறுமதியான சொத்துக்களை

ta

தண்ணீர் தொட்டி விழுந்ததில் ஐந்து மாணவர்கள் காயம்

March 9, 2026

பத்தேகமவில் உள்ள பாடசாலையொன்றில் இன்று (9) மதியம் தண்ணீர் தொட்டி விழுந்ததில் ஐந்து மாணவர்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பத்தேகம