வடக்கு மற்றும் வடமத்திய மாகாணத்திற்கு போதைப்பொருள் தம்புள்ளையில் இருந்தே கைமாற்றப்படுவதாக மாத்தளை மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தெரிவித்தார்.
மாத்தளை மாவட்டத்தில் போதைப்பொருள் சுற்றிவளைப்பில் ஈடுபட்ட பொலிஸாருக்கு சன்மானம் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து பேசிய அவர்,
“வெளிநாட்டில் இருந்து போதைப்பொருள் விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபடுபவர் தொடர்பில் தகவல் கிடைத்துள்ளது. கடந்த காலங்களில் தம்புள்ளையில் மட்டும் மேற்கொண்ட சோதனைகளில் பிடிப்பட்ட போதைப்பொருட்கள் தொடர்பில் ஆரம்பிக்கப்பட்ட விசாரணைகளில் இது தெரியவந்துள்ளது.
இவை தம்புள்ளை, சிகிரியா, கலேவெல போன்ற பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அதனால் இந்த வலையமைப்பை உடைக்க வேண்டும்.