வடக்கு கடற்றொழிலாளர்கள் தமது போராட்டத்திற்கு ஆதரவு வழங்குமாறு அழைப்பு

இந்திய கடற்றொழிலாளர்களின் எல்லை தாண்டி வடக்கு கடற்பரப்பில் மேற்கொள்ளும் கடற்றொழில் மற்றும் உள்ளூரில் தடைசெய்யப்பட்ட கடற்றொழில் முறைகளையும் தடுத்து நிறுத்த நீரியல்வளத் திணைக்களம், ஜனாதிபதி ஆகியோர் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நாளை இடம்பெறவுள்ள கடற்றொழிலாளர்களின் போராட்டத்திற்கும் ஆதரவு தருமாறும், கடற்றொழிலாளர்கள் அனைவரையும் பங்கேற்குமாறும் வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசம் வலியுறுத்தியுள்ளது.

வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத் தலைவர் தம்பிராசா சந்திரதாஸ் இன்று(11) நண்பகல் யாழ். வடமராட்சி ஊடக இல்லத்தில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போது இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.

கடந்த ஒரு மாதகாலமாக இந்திய கடற்றொழிலாளர்களது இழுவைப் படகுகள் எல்லை தாண்டி வடமராட்சி கிழக்குத் தொடக்கம் மன்னார் வரை சட்டவிரோத தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

அத்துடன் உள்நாட்டிலும் இழுவைப் படகை பயன்படுத்தி கடற்றொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், சட்டவிரோத நடவடிக்கைகளும் தொடர்சியாக இடம்பெற்று வருகிறது.

மேற்குறித்த சட்டவிரோத நடவடிக்கைகளை உடன் தடுத்து நிறுத்துமாறு கோரி நாளை யாழ்ப்பாணம் நீரியல் வளத் திணைக்களத்தின் முன்பாக ஆர்ப்பாட்டம் ஆரம்பமாகி பேரணியாக யாழ். மாவட்டச் செயலகத்தை சென்றடைந்து மாவட்டச் செயலக செயற்பாடுகளை முடக்கப் போவதாக யாழ். மாவட்ட கடற்றொழிலாளர்கள் சம்மேளனம் நேற்று முன்தினம் அறிவித்திருந்தது.

குறித்த போராட்டத்திற்கு வலுச் சேர்க்கும் வகையில் வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத் தலைவர் தம்பிராசா சந்திரதாஸ் குறித்த போராட்டத்திற்கு தமது ஆதரவைத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பாதிக்கப்பட்ட சிலாபம் மாவட்ட மருத்துவமனையை சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் விசேட ஆய்வு

December 13, 2025

பாதிக்கப்பட்ட சிலாபம் மாவட்ட மருத்துவமனையின் தற்போதைய நிலைமையை ஆராய்வதற்காக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ

யாழ் சிறையின் நிவாரண உதவி

December 13, 2025

டித்வா புயலினால் ஏற்பட்ட அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக யாழ்ப்பாணம் சிறைச்சாலை பல்வேறு நிவாரண உதவிகளை வழங்கியுள்ளது. இந்த உதவி பொருட்கள்

நேபாளம் அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி வெற்றி

December 13, 2025

டுபாயில் இடம்பெற்று வரும் 19 வயதிற்கு உட்பட்ட ஆசிய இளையோர் கிண்ண ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இன்றைய நேபாளம் அணிக்கு

2025 ஆம் ஆண்டின் அரச வரி வருமானம் 4000 பில்லியன்

December 13, 2025

2025 ஆம் ஆண்டின் முதல் 10 மாதங்களுக்குள் அரசாங்கத்தின் மொத்த வரி வருமானம் 4,033 பில்லியன் ரூபாய் என நிதி

சமூக ஊடகங்கள் மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட போதைப்பொருள் விருந்து: 26 பேர் தெல்தெனியவில் கைது

December 13, 2025

சமூக ஊடகங்கள் மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு விருந்து நிகழ்வில் பொலிஸார் நடத்திய சோதனையைத் தொடர்ந்து, நான்கு பெண்கள் உட்பட

Parl

18ஆம் திகதி பாராளுமன்றம் கூடுகிறது

December 13, 2025

18 ஆம் திகதி வியாழக்கிழமை காலை 9.30 மணிக்கு பாராளுமன்றத்தைக் கூட்டுவதற்கான வர்த்தமானி அறிவிப்பை சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்ன

Arrest_1

போதைப்பொருள் சுற்றிவளைப்பில் பலர் கைது

December 13, 2025

ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய, நாடு முழுவதும் போதைப்பொருளை தடுக்கும் “முழு நாடுமே ஒன்றாக” தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், பொலிஸ்மா அதிபரின் அறிவுறுத்தலுடன்,

பகிடிவதை தொடர்பில் கைது செய்யப்பட்ட 19 மாணவர்களுக்கு பிணை!

December 13, 2025

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் பகிடிவதை குற்றச்சாட்டில் கைதான 19 மாணவர்களையும் தலா ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான சரீர பிணையில் விடுவிக்க

பல பிரதேசங்களுக்கு அரசாங்கத்தால் எந்தவித நிவாரணங்களும் கிடைக்கவில்லை?

December 13, 2025

அண்மையில் இடம்பெற்ற இயற்கை பேரழிவையடுத்து, உரிய நிவாரணங்களை வழங்குமாறு, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அறிவுறுத்தல் வழங்கியிருந்தார். எனினும், பாதிக்கப்பட்ட பல

மதுபான அனுமதிப்பத்திரக் கட்டணங்கள் அதிகரிப்பு

December 13, 2025

அனைத்து வகையான மதுபான அனுமதிப்பத்திரக் கட்டணங்களையும் நேற்று (12) முதல் அமுலுக்கு வரும் வகையில் 100 வீதத்தால் அதிகரிப்பதற்கு அரசாங்கம்

கொழும்பு புனித பேதுருவானவர் கல்லூரி “Colours Night 2025”

December 13, 2025

கொழும்பு 04, புனித பேதுருவானவர் கல்லூரியின் (St. Peters college) விளையாட்டு வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாக, ‘Colours Night

அமைதி நோபல் பரிசு வென்ற நர்கெஸ் முகமதி கைது

December 13, 2025

2023 ஆம் ஆண்டுக்கான அமைதி நோபல் பரிசை வென்ற மனித உரிமைப் போராளி நர்கெஸ் முகமதியை, ஈரானிய பாதுகாப்புப் படையினர்