வடக்கில் பாதிப்புற்றோருக்கு நிவாரண உதவிகளை தமிழக உறவுகள் நேரடியாக கொண்டு வர வேண்டும்

“தமிழகத் தொப்புள் கொடி உறவுகள், வடக்கில் பேரிடரால் பாதிப்புற்றோருக்கு அனர்த்த நிவாரண உதவிப் பொருள்களை நேரடியாக எடுத்து வருவதற்கான அனுமதியை வழங்க அரசாங்கம் முன் வர வேண்டும் என ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “இலங்கையில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தப் பேரிடரில் பாதித்த மக்களுக்கு தொப்புள்கொடி உறவுகள் பல நேரடியாக இங்கு வந்து உதவத் தயார் நிலையில் உள்ளனர் என்று எமக்குத் தகவல்கள் கிட்டுகின்றன.

இருந்தபோதும் அதற்கான ஏற்பாடுகளில் பெரும் நெருக்கடி காணப்படுகின்றது.

எனவே இந்தப் பொருள்களை நேரடியாக யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் பகுதிகளுக்குக் கடல் வழியாகவும், பலாலி விமான நிலையத்துக்கு வான் வழியாகவும் எடுத்து வந்து பாதிப்புற்றோருக்கு அவர்களே நேரடியாக வியோகிப்பதற்கான அனுமதியையும் வழங்க அரசாங்கம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பேரிடர் குழுவில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்கள் அரசாங்கத்துக்கு இதற்கான பரிந்துரையை வழங்கி இந்திய ட்ரோலர் படகுகளில் பொருள்களை ஏற்றிவர அனுமதி வழங்கினால் பல உதவிகளை வழங்க விருப்பம் கொண்டுள்ள எமது தமிழக உறவுகள் அதனை உடனடியாகச் செய்வார்கள்.

மன்னாரில் சோதனை நடவடிக்கைகள், சுங்க நடவடிக்கைகளில் இடையூறு இருப்பதாகக் கருதினால் காங்கேசன்துறை துறைமுகத்தில் அனைத்து வசதிகளும் ஏற்கனவே இருப்பதனால் அனுமதியை வழங்குவதில் எந்தத் தடையும் இருக்க முடியாது எனக் கருதுகின்றோம்.

ஏனெனில் அன்பளிப்பாக வழங்க முன் வருவோர், அந்த நிவாரணப் பொருள்களின் விலையை விட போக்குவரத்துச் செலவே அதிகமாக ஏற்படும் எனச் சுட்டிக்காட்டுகின்றனர்.

இதனைக் கருத்தில் கொண்டும் காங்கேசன்துறை துறைமுகத்தின் வசதி கருதியும் ட்ரோலர் படகுகளிலும் விசேட விமானங்களிலும் பொருள்களை எடுத்து வந்து விநியோகிக்க அனுமதியை அரசாங்கம் உடனடியாக வழங்க வேண்டும்.

அவ்வாறு வழங்கினால் தமிழக உறவுகளுடன் தொடர்புகொண்டு இன்னும் அதிக உதவிகளை எம்மால் பெற்றுத்தர முடியும் எனத் தெரிவித்துள்ளார்.

vali

சர்வதேச மனித உரிமைகள் தினம்; வடக்கு கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் போராட்டம்

December 10, 2025

சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் வவுனியாவில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. வவுனியா

uthaya

நிதிக் கணிப்பீட்டில் யாழ். மாவட்டத்தில் ஊழல் – உதய கம்மன்பில

December 10, 2025

‘டித்வா’ பேரிடரில் அழிவடைந்த வீடுகளுக்காக வழங்கப்படவுள்ள நிதி கணிப்பீட்டில் யாழ்ப்பாண மாவட்டத்தில் ஊழல் நடந்துள்ளதாக பிவித்துறு ஹெல உறுமய

Education

பாடசாலைகளுக்கான கல்விச் செயற்பாடுகள் குறித்து கல்வி அமைச்சினால் விசேட சுற்று நிரூபம்

December 10, 2025

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான கற்றல் செயற்பாடுகளை ஆரம்பித்தல் மற்றும் தவணைப் பரீட்சைகள் தொடர்பில் கல்வி

rai.

புகையிரத சேவைகளை மீள ஆரம்பிப்பது அறிவிப்பு

December 10, 2025

இயற்கை அனர்த்தங்களினால் புகையிரத திணைக்கள சொத்துகளுக்கு 300 மில்லியன் டொலர் வரையில் சேதம் ஏற்பட்டுள்ளது. வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்துக்கான

Varunaga

பாதிக்கப்பட்ட மக்களுக்கான தொடர் பணியில் முப்படையினரும் அரச நிறுவனங்களும்

December 10, 2025

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பணிகள் மற்றும் சேதமடைந்த உட்கட்டமைப்பை மீட்டெடுப்பதற்காக முப்படையினரும் அரச நிறுவனங்களும் தொடர்ந்து செயற்பட்டு

va

ஜனாதிபதியை சந்திக்க வட மாகாண கடற்றொழிலாளர்கள் முயற்சி!

December 10, 2025

கடற்தொழிலாளர்களின் பிரச்சினை குறித்தும் அந்த பிரச்சினைக்குத் தீர்வு காண்பது தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை சந்தித்துக் கலந்துரையாடுவது குறித்ததுமான மனு

cum

மீண்டும் வருகிறார் கம்மின்ஸ்

December 10, 2025

ஆஸ்திரேலியா சென்றுள்ள இங்கிலாந்து அணி, ஐந்து போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் இரு போட்டியில் வென்ற

mats

‘மத்ஸ்யா 6000’; முதல் மனித ஆழ்கடல் பயணம்

December 10, 2025

முதல் மனித ஆழ்கடல் பயணம் மத்ஸ்யா 6000 திட்டத்தில் முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது என இந்திய மத்திய அமைச்சர் ஜிதேந்திர

par

மொய்ஸே கீன் பார்சிலோனா செல்கிறார்?

December 10, 2025

இத்தாலிய சீரி ஏ கழகமான பியொரென்டினாவின் முன்களவீரரான மொய்ஸே கீனைக் கைச்சாத்திடுவதில் ஸ்பானிய லா லிகா கழகமான பார்சிலோனா ஆர்வம்

new

நியூயார்க் டைம்ஸ்; பிரபலங்கள் பட்டியலில் ஷாருக் கான்

December 10, 2025

நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டு உள்ள 2025ம் ஆண்டின் உலகின் ஸ்டைலிஷ் பிரபலங்கள் பட்டியலில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் இடம் பிடித்துள்ளார்.

mes

பிரதமர் மோடியை சந்திக்க உள்ள மெஸ்ஸி!

December 10, 2025

அர்ஜென்டினா கால்பந்து அணி கேப்டன் மெஸ்ஸி 38. இவரது தலைமையிலான அர்ஜென்டினா அணி, 2022ல் ‘பிபா’ உலக கோப்பை வென்றது.

Para

பாரா சைக்கிளிங் கோப்பையில் இந்தியாவுக்கு 11 பதக்கம்

December 10, 2025

பாரா சைக்கிளிங் கோப்பை தொடரில் இந்தியாவுக்கு 11 பதக்கங்கள் கிடைத்தன. லிசா 4 பதக்கம் கைப்பற்றினார். தாய்லாந்தில் பாரா சைக்கிளிங்