தானும், ராஜ் நிடிமொருவும் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை சமந்தா இன்ஸ்டாகிராமில் வெளியிடவே அவர் தன் காதலை உறுதி செய்துவிட்டார் என்று பேசப்படுகிறது. ராஜை தான் காதலிக்கிறேன் என்று சமந்தா இதுவரை வெளிப்படையாக தெரிவிக்கவில்லை.
சமந்தா, ராஜ்: ராஜ் நிடிமொரு, டி.கே. இயக்கத்தில் இரண்டு வெப்தொடர்களில் நடித்திருக்கிறார் சமந்தா. அவர்கள் இயக்கத்தில் மூன்றாவதாக ரக்த் பிரம்மாண்ட் வெப்தொடரில் நடிக்கிறார். வெப்தொடர்களில் நடித்தபோது ராஜ் நிடிமொரு மற்றும் சமந்தா இடையே உருவான நட்பு காதலாக மாறிவிட்டதாக மாதக் கணக்கில் பேசப்படுகிறது.
சமந்தா தற்போது எந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டாலும் ராஜ் நிடிமொருவை உடன் அழைத்துச் செல்கிறார். வெளிநாடுகளுக்கு சென்றாலும் ராஜுடன் தான் செல்கிறார். அவ்வாறு பயணம் செய்யும்போது ராஜுடன் சேர்ந்து புகைப்படங்களை எடுத்தை அதை சமூக வலைதளத்தில் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார் சமந்தா.
இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் ராஜ் நிடிமொருவுடன் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் எடுத்த புகைப்படங்களை அவர் இன்ஸ்டாகிராமில் போஸ்ட் செய்தார். அதில் ஒரு புகைப்படத்தில் ராஜும், சமந்தாவும் மிகவும் நெருக்கமாக சிரித்தபடி போஸ் கொடுத்திருக்கிறார்கள். அதை பார்த்த சினிமா ரசிகர்களோ ராஜ் தான் என் காதலர் என்பதை அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவே இப்படியொரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் சமந்தா. விரைவில் அவரே அறிவிப்பு வெளியிடுவார் என்கிறார்கள்.