ராஜபக்ஷ குமாரர்களை குறித்து குற்றங்களைச் சாட்டியவர்களுடன் அநுர அரசு இணைந்து இரகசியமாகச் செயற்படுகின்றது? – சம்பிக்க ரணவக்க

கடந்த காலங்களில் ராஜபக்ச குமாரர்களின் நெருங்கிய உறவினர்களுக்குச் சொந்தமானவை என தற்போதைய அநுர அரசாங்கத்தினால் விமர்சிக்கப்பட்ட அதே நிறுவனங்களுடனேயே இன்றும் நிலக்கரி கொள்வனவுக்கான இரகசிய ஒப்பந்தங்கள் முன்னெடுக்கப்படுவதாக ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவர் பாட்டளி நிறுவனங்களிடமே சம்பிக்க ரணவக்க குற்றம் சுமத்தியுள்ளார்.

சர்வஜன அதிகாரம் கட்சியின் காரியாலயத்தில் நேற்று திங்கட்கிழமை (23) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் அங்கு மேலும் கூறுகையில்;

கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் நிலக்கரி இறக்குமதியில் ஈடுபட்ட பிளாக் சேண்ட் எனும் நிறுவனமே தற்போது பொடென்ஷியா எனப் பெயர் மாற்றம் பெற்றுள்ளது. முன்னைய ஆட்சியாளர்களின் பிள்ளைகளுக்குச் சொந்தமான ஊழல் நிறைந்த நிறுவனம் என விமர்சித்த இதே பொடென்ஷியா நிறுவனத்திடமே தற்போதைய அரசாங்கம் 15 நிலக்கரி கப்பல்களைக் கொள்வனவு செய்துள்ளது.

அமைச்சர் ரஷ்யாவிற்குச் சென்று அந்த நிறுவனத்தின் தாய் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதன் பின்னர் வந்த 5 கப்பல்களில் 3 கப்பல்கள் இரத்து செய்யப்பட்டு 2 மாத்திரமே எடுக்கப்பட்டன. இதில் என்ன ஒப்பந்தம் நடந்தது என்பது எமக்குத் தெரியாது. ஆனால் இது திட்டமிட்ட ஊழல் என்பது தெளிவாகத் தெரிகிறது.

இந்தக் கொள்வனவு முறைகேடுகளால் இலங்கை மின்சார சபைக்கு பாரிய நட்டம் ஏற்பட்டுள்ளது. 8 ஆவது கப்பல் வரை ஏற்பட்ட நட்டம் 7.67 பில்லியன் ரூபாவாகும். தற்போது வந்துள்ள 9 ஆவது கப்பலினால் மாத்திரம் சுமார் ஒரு பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு கப்பலிலிருந்தும் சராசரியாக 90 கோடி ரூபா நட்டம் ஏற்படுகிறது. உலகச் சந்தையில் நிலக்கரி விலை ஒரு மெட்ரிக் தொன் 400 டொலரிலிருந்து 80 டொலர் வரை குறைந்திருந்தாலும் அதன் பயனை மக்களுக்கு வழங்காமல் இலாபத்தை விநியோகஸ்தர்களுக்கே அரசாங்கம் தாரை வார்த்துள்ளது.

பழைய திருடர்களைப் பிடிப்போம் எனக் கூறிக்கொண்டு ஆட்சிக்கு வந்த அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான இந்த அரசாங்கம் இன்று அதே குமாரர்களின் நிறுவனங்களிடமே நிலக்கரியைப் பெறுகிறது. இந்தியாவிஸில் பணமோசடி குற்றச்சாட்டுக்கு உள்ளான ஒருவரின் நிறுவனத்திடமே இறுதியாக நிலக்கரி வாங்கப்பட்டுள்ளது.

2010 மற்றும் 2015 காலப்பகுதியில் நான் அமைச்சராக இருந்தபோது மின்சார சபையை இலாபமீட்டும் நிறுவனமாக மாற்றிக் காட்டினேன். 2012 இல் தரம் குறைந்த நிலக்கரியைக் கொண்டுவந்த 5 கப்பல்களுக்கான கொடுப்பனவை நான் நிராகரித்ததுடன் நிலக்கரி நிறுவனத் தலைவரை 24 மணித்தியாலங்களுக்குள் பதவியிலிருந்து நீக்கினேன். அத்தகைய உறுதியான தலைமைத்துவம் இந்த அரசாங்கத்திடம் இல்லை.

மத்திய சுற்றாடல் அதிகார சபையோ அல்லது வடமேல் மாகாண சுற்றாடல் அதிகார சபையோ இந்த நிலக்கரியால் ஏற்படும் பாதிப்புகளைக் கண்டுகொள்வதில்லை. இந்த நட்டத்தை ஏப்ரல் முதலாம் திகதி முதல் மின்சாரக் கட்டண உயர்வு ஊடாக மக்கள் மீது சுமத்த அரசாங்கம் முயன்றால் நாட்டின் 75 இலட்சம் மின் நுகர்வோரையும் திரட்டி நாம் வீதியில் இறங்குவோம் என்றார்.

saji

10 இலட்சம் இலங்கையர்களின் பாதுகாப்பு தொடர்பில் தீவிர ஆலோசனை

March 4, 2026

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தீவிரமடைந்துள்ள போர்ச் சூழல் காரணமாக இலங்கைக்கு ஏற்படவுள்ள சவால்கள் குறித்து ஆராயும் நோக்கில், எதிர்க்கட்சித் தலைவர்

arres

வெற்றிலைக்கேணி பகுதியில் இருவர் கைது

March 4, 2026

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் மாட்டுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது நடவடிக்கை நேற்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

tr

அமெரிக்க கடற்படை ஹார்முஸ் நீரிணை வழியாக செல்லும் – ட்ரம்ப்

March 4, 2026

“தேவைப்பட்டால், அமெரிக்க கடற்படை ஹார்முஸ் நீரிணை வழியாக டேங்கர்களை விரைவில் அழைத்துச் செல்லும்” என்று டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஈரானுடனான

kasa'

காசல்ரி நீர்ப்போசன பிரதேசத்தில் நீரூற்றுக்கள் அற்றுப்போகும் அபாயம்?

March 4, 2026

காசல்ரி நீர்போசன பிரதேசத்தில் நீரூற்றுக்கள் அற்றுப்போகும் அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். நீர் மின் உத்தி செய்யும்

20

இருபதுக்கு – 20 உலகக் கிண்ணம்: இன்று முதலாவது அரையிறுதிப் போட்டி

March 4, 2026

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டியானது கொல்கத்தாவில் இன்றிரவு 7

iraa

ஈரானில் உயிரிழந்த மாணவிகளின் இறுதிச்சடங்கை ஒளிபரப்பிய அரச தொலைக்காட்சி!

March 4, 2026

ஈரானின் தெற்கு பகுதியில் உள்ள ஒரு பாடசாலை மீது சனிக்கிழமை நடைபெற்ற தாக்குதலில் உயிரிழந்த மாணவிகளின் இறுதிச்சடங்கு ஈரானிய அரசுத்

vimal

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை தாக்குதலின் பிரதான சூத்திரதாரி சஹ்ரானின் சட்டத்தரணியே இன்று நாட்டின் நீதி அமைச்சர்

March 4, 2026

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாக கருதப்படும் சஹ்ரான் ஹாஷிமின் வழக்கில் முன்னிலையான சட்டத்தரணியே இன்று இந்த நாட்டின்

ku

கூர்மையான ஆயுதத்தால் மனைவியைக் கொலை செய்த கணவன்

March 4, 2026

கேகாலை, அரநாயக்க பிரதேச வைத்தியசாலையில் பணியாற்றி வந்த பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். 35 வயதுடைய ருவினி மதுஷிகா என்ற

Pee

மனிதக் கடத்தல்; பீல் பிராந்திய காவல்துறையினரால் விழிப்புணர்வுக் கருத்தரங்கு

March 4, 2026

கனடாவின் பீல் பிராந்திய காவல்துறையினரால் மனிதக் கடத்தல் தொடர்பான விழிப்புணர்வுக் கருத்தரங்கு நடைபெற்றுள்ளது. கடத்தலில் இருந்து உயிர் தப்பியவர்களுக்கு ஆதரவு,

h

மிசிசாகாவைச் சேர்ந்த பெண்ணொருவரின் கொலை தொடர்பாக பீல் பிராந்திய காவல் துறை முக்கிய அறிவிப்பு

March 4, 2026

கனடா மிசிசாகாவைச் சேர்ந்த பெண்ணொருவரின் கொலை தொடர்பாக பீல் பிராந்திய காவல் துறை கொலை மற்றும் காணாமல் போனோர் பிரிவு

leb

வான்வழித் தாக்குதல்கள் காரணமாக லெபனானிலிருந்து 58,000 பேர் வரை இடம்பெயர்வு

March 4, 2026

லெபனான் முழுவதும் இஸ்ரேலிய இராணுவம் முன்னெடுத்து வரும் வான்வழித் தாக்குதல்கள் காரணமாக அந்நாட்டின் மனிதாபிமான நிலைமை பாரிய சரிவைச் சந்தித்துள்ளது.

dro

அமெரிக்கத் தூதரகத்தின் மத்திய புலனாய்வு முகவரக மையம் ஒன்றின் மீது ட்ரோன் தாக்குதல்

March 4, 2026

சவுதி அரேபியாவிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் மத்திய புலனாய்வு முகவரக (CIA) மையம் ஒன்றின் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.