யுத்தத்தை வெற்றிகொண்ட இராணுவத்தினரை புலனாய்வுத்துறையை காட்டிக்கொடுக்கும் நடவடிக்கையே சலே கைது

பிரிவினைவாதிகளை மகிழ்ச்சிப்படுத்தவே சுரேஷ் சலேயை அரசாங்கம் கைது செய்திருக்கிறது. இது யுத்தத்தை வெற்றிகொண்ட இராணுவத்தினரை புலனாய்வுத்துறையை காட்டிக்கொடுக்கும் நடவடிக்கையாகும் என சிறிலங்கா பொதுஜன பெரமுன முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சம்பத் அத்துகோரல தெரிவித்தார்.

சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சி காரியாலயத்தில் வெள்ளிக்கிழமை (27) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரிகளை கண்டுபிடித்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு குறுகிய காலத்தில் நீதியை நிலைநாட்டுவதாக தெரிவித்து ஆட்சிக்கு வந்த அஅரசாங்கத்துக்கு அரசாங்கத்துக்கு 16 மாதங்கள் கடந்தும் அதனை செய்துகொள்ள முடியாமல் போனது. கடந்த ஏப்ரல் மாதம் பிரதான சூத்திரதாரியை வெளிப்படுத்துவதாகவே ஜனாதிபதி தெரிவித்திருந்தார். அதனை செய்துகொள்ள முடியாமல் போனதால், தற்போது இந்த ஏப்ரல் மாதமாகும்போது, இதுதொடர்பில் ஏதனையாவது மேற்கொள்ள வேண்டும் என்பதற்காக தற்போது உளவுத்துறையின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலேயை கைது செய்திருக்கிறார்கள்.

சுரேஷ் சலேயை கைது செய்துள்ளதன் மூலம் ஜனாதிபதி பிரிவினைவாதிகளையும், கத்தோலிக்க மக்களையும் தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களையும் மகிழ்ச்சிப்படுத்தி இருக்கிறார். பிரிவினைவாதிகளை மகிழ்ச்சிப்படுத்தும் விடயத்தை ஜனாதிபதி தொடர்ந்து மேற்கொண்டுவருகிறார். யாழ்ப்பாணாத்துக்கு சென்றும் அதனையே மேற்கொண்டிருந்தார்.

அதேபோன்று தற்போது நிலக்கரி மோசடி தொடர்பில் அரசாங்கத்துக்கு எதிராக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டை மறைப்பதற்கும் ராஜபக்ஷ் அரசாங்கத்துக்கு ஆதரவாக மக்கள் தற்போது ஒன்றுசேர்வதை தடுப்பதற்காகவுமே இந்த கைது இடம்பெற்றிருக்கிறது. மக்களுக்கு அளித்த வாக்குறுதியை ஜனாதிபதிக்கு நிறைவேற்றிக்கொள்ள முடியாமல் போயிருப்பதால், இந்த தாக்குதல் தொடர்பில் விசாரிக்கப்பட வேண்டிய ஷானி அபேசேகர, ரவி செனவிரத்ன ஆகியோரை பயன்படுத்தியே சலே கைது செய்யப்பட்டிருக்கிறார். ஆனால் இவர்கள் இரண்டு பேருக்கும் எதிராக வழக்கு தொடுக்குமாறு ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சாரா ஜெஸ்மின் தப்பிச்செல்லும்போது கிழக்கு மாகாண கட்டளை தளபதியாக இருந்தவர் தற்பாேதைய பிரதி பாதுகாப்பு அமைச்சர் அருண ஜயசேகர. அதனால் அருண ஜயசேகர, ஷானி அபேசேகர,ரவி செனவிரத்ன மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் தேசியப்பட்டியல் உறுப்பினரான இப்ராஹிமுடைய மகன்களே குண்டுதாரிகளாக இருந்தனர். ஆகியோரை வைத்துக்கொண்டே இந்த கைது இடம்பெற்றுள்ளது. சலேயை கைது செய்துள்ளதன் மூலம் ஜனாதிபதி தனது அரச புலனாய்வு துறையை பலவீனப்படுத்தி இருக்கிறது. எந்தவொரு நாட்டினதும் அரச தலைவர் தனது அரச புலனாய்வு துறையை பலவீனப்படுத்த முயற்சிப்பதில்லை.

ஆனால் இந்த ஜனாதிபதியும் அரசாங்கமும் பிரிவினைவாதிகளை மகிழ்ச்சிப்படுத்துவதற்காக தனது அரசை, புலனாய்வுத்துறை பலவீனப்படுத்தி வருகிறார்கள். இந்த கைதானது யுத்தத்தை வெற்றிகொள்ள உயிர் தியாகம் செய்தவர்களின் தாய் தந்தையர்கள் மற்றும் உறவினர்களின் உள்ளம் புண்படும் செயலாகும். யுத்தத்தை வெற்றிகொண்ட இராணுவத்தினரை, புலனாய்வுத்துறையை காட்டிக்கொடுக்கும் நடவடிக்கையாகும் என்றார்.

sol

கனேடிய சோலார் நிறுவனங்களால் கிராமப்புற ஆபிரிக்காவுக்கு மின்சாரம்

March 3, 2026

கனேடிய சோலார் நிறுவனங்கள் புதுமையான தீர்வுகளை பயன்படுத்தி கிராமப்புற ஆபிரிக்காவிற்கு மின்சாரம் கொண்டு வருகின்றன சோலார் சக்தியால் இயங்கும் பேட்டரி

fi

மத்திய மலைநாட்டின் வனப்பகுதிக்கு தீவைப்பு : குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

March 3, 2026

மத்திய மலைநாட்டின் நுவரெலியா மாவட்டத்தில் தற்போது நிலவி வரும் கடும் வெப்பமான வானிலை காரணமாக பல்வேறு பகுதிகளில் வறட்சி நிலவுகிறது.

in wo

சர்வதேச மகளிர் தின ஒத்திவைப்பு வேளை விவாதம்

March 3, 2026

ராளுமன்றம் மார்ச் இன்று முதல் 06ஆம் திகதி வரை கூடவிருப்பதாகப் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார். கடந்த

nats

நட்சத்திர ஆமைகளை கடத்த முயன்ற இருவர் கைது

March 3, 2026

சுமார் ஒரு கோடியே 35 இலட்சம் ரூபாய் பெறுமதியான நட்சத்திர ஆமைகள் 25 ஐ, சட்டவிரோதமான முறையில் மலேசியாவிற்கு கடத்த

ev

ஏவுகணைத் துண்டுகள் விழுந்ததில் இலங்கைப் பெண் காயம்

March 3, 2026

இஸ்ரேலின் பீயேர்ஷெபா (Beersheba) குடியிருப்புப் பகுதி மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலின் பாகங்கள் வீட்டின் மீது விழுந்ததில் இலங்கை

har

ஹார்முஸ் ஜலசந்தியை மூடிவிடுவதாக ஈரான் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

March 3, 2026

மத்திய கிழக்கில் போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், உலகின் மிக முக்கியமான கடல்வழிப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை மூடிவிடுவதாக ஈரான்

soc

பிரித்தானியாவில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதற்கு கட்டுப்பாடு?

March 3, 2026

வரவிருக்கும் ஒக்டோபர் மாதம் முதல், 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதற்கு கட்டுப்பாடு விதிக்கத் திட்டமிட்டுள்ளதாக பிரித்தானிய அரசு

gl

ஜி.எல். பீரிஸ் ஜனாதிபதிக்கு அவசர கடிதம்

March 3, 2026

மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள போர் நிலைமையினால் இலங்கை எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் மற்றும் அதன் பாரதூரமான தன்மை குறித்து

tn

இலங்கை கடற்படையினர் தமிழக பக்தர்களை தாக்கியுள்ளதாக குற்றஞ்சாட்டல்!

March 3, 2026

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழாவின் போது, இலங்கை கடற்படையினர் தமிழக பக்தர்களை தாக்கியுள்ளதாக தமிழகக் கச்சதீவு பாரம்பரிய

de

கிளங்கன் ஆதார வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்த இளம் பெண்ணின் சடலத்திற்கு பாலியல் வல்லுறவு!

March 3, 2026

டிக்கோயா – கிளங்கன் ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்த இளம் பெண்ணின் சடலத்திற்கு, அங்கு பணிபுரியும் சிற்றூழியர்கள் மூவரால்

Arrest_1

ஐஸ் போதைப் பொருட்களுடன் இரு பெண்கள் கைது

March 3, 2026

ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன் இரண்டு பெண் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வெலிவேரிய, எம்பரலுவ வடக்கு பகுதியில் 25

1

சடலமொன்று கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் மீட்பு

March 3, 2026

கை,கால்கள் கட்டப்பட்ட நிலையில் படுகொலை செய்யப்பட்ட நபரொருவரின் சடலம் இன்று (03) காலை பாணந்துறை – கொழும்பு பழைய வீதியில்