யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமான முறையில் சொத்துக் குவித்தார் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் நபர் ஒருவரின் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது.
யாழ்ப்பாணம் – பண்ணைப் பகுதியில் உள்ள வீட்டிலேயே நேற்று பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப் படையினர் சுற்றிவளைப்பை மேற்கொண்டனர்.
யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் பொலிஸாரால் பெற்றுக்கொள்ளப்பட்ட தேடுதல் அனுமதிக்கமைய இந்தச் சோதனை நடத்தப்பட்டது.