யாழ்ப்பாணத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் யாழ் ஹாட்லிக் கல்லூரியின் தமிழ் ஆசிரியை உயிரிழந்துள்ளார்.
யாழ் போதனா வைத்தியசாலையின் அவசர பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.
43 வயதான நிஷாந்தினி நித்திலவர்ணன் என்ற இரண்டு பிள்ளைகளின் தாயே உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வீட்டில் நேற்று ஏற்பட்ட திடீர் தீ விபத்து காரணமாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில்அனுமதிக்கப்பட்டார். எனினும் மேலதிக யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.