இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர், ஆனந்தபுரத்தை சேர்ந்த 82 வயதுடைய சபாபதி என்பவர் என தெரியவந்துள்ளது.
விபத்து தொடர்பில், கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
குறித்த விபத்து இன்று(26.01.2026) இடம்பெற்றுள்ளது.
கிளிநொச்சி – பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உதய நகர் பகுதியில் துவிச்சக்கர வண்டியில் முதியவர் ஒருவர் வீதியை கடக்க முற்பட்டுள்ளார்.
இதன்போது, அனுராதபுரம் பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த யாழ். தொடருந்துடன் மோதுண்டு, முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.