வவுனியா வைரவபுளியங்குளம் பகுதியில் பொலிசாரின் கட்டளையை மீறி சென்ற மோட்டார் சைக்கிள் காருடன் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்துள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர்.
வவுனியா, வைரவபுளியங்குளம், வைரவர் கோயில் வீதி ஊடாக இளைஞர்கள் வேகமாக மோட்டார் சைக்கிளில் சென்றபோது அப் பகுதியில் வீதி சோதனை நடவடிக்கையில் ஈடுபட்ட போக்குவரத்து பொலிசார் அவர்களை நிறுத்த முற்பட்ட போது பொலிசாரின் கட்டளையை மீறி மோட்டார் சைக்கிள் வேகமாக பயணித்த நிலையில் புகையிரத நிலைய வீதியில் இருந்து வைரவர் கோவில் வீதி ஊடாக சென்று வைரவ கோயிலுக்கு முன்பாக உள்ள ஒழுங்கையில் திரும்ப முற்பட்ட கார் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானது.
குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்கள் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பாக வவுனியா போக்குவரத்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.