முகமது யூனுஸ் நடத்திய மோசடியான பங்களாதேஷ் பொதுத்தேர்தல் இரத்து செய்யப்பட வேண்டும் என அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தெரிவித்துள்ளார்.
பங்களாதேஷ் தேர்தல் வியாழக்கிழமை (12) நடைபெற்று முடிந்தது. இந்தத் தேர்தலில் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி போட்டியிட அனுமதிக்கப்படவில்லை.
இந்நிலையில் தேர்தல் முடிந்த பின்னர் ஷேக் ஹசீனா வெளியிட்ட அறிக்கையில்,
வாக்காளர்கள் இல்லாத, சட்டவிரோத மற்றும் அரசியலமைப்புக்கு எதிரான தேர்தலை இரத்து செய்ய வேண்டும். முகமது யூனுஸ் பதவி விலகுவதுடன், பொய்யான வழக்குகளை திரும்ப பெற்று, ஆசிரியர்கள், கல்வியாளர்கள் , ஊடகவியலாளர்கள் மற்றும் அரசியல் கைதிகளை உடனடியாக சிறையில் இருந்து விடுவிக்க வேண்டும்.
அவாமி லீக் கட்சியின் செயல்பாட்டுக்கான தடையை நீக்குவதுடன், நடுநிலையான அரசின் மேற்பார்வையின் கீழ், நேர்மையான, சுதந்திரமான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய பொதுத்தேர்தல் மூலம் மக்களின் ஓட்டுரிமையை உறுதி செய்ய வேண்டும்.
முகமது யூனுஸ் நடத்திய மோசடி நடவடிக்கையை புறக்கணித்த தாய்மார்கள், சகோதரிகள் மற்றும் சிறுபான்மையினருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.அரசியலமைப்பு மற்றும் சட்டவிரோதமாக அதிகாரத்தை கையில் எடுத்துக் கொண்ட முகமது யூனுஸ் நடத்திய தேர்தல் நடவடிக்கைகள் அனைத்தும் ஏற்கனவே திட்டமிடப்பட்டது.