மேய்ச்சல் தரைப் பிரச்சினை தொடர்பாகத் தீர்மானம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் 2026 ஆம் ஆண்டுக்கான அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் எதிர்கால அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான கூட்டம் நேற்று (29) மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும், கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி அமைச்சருமான சுனில் ஹந்துனெத்தி தலைமையில் கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர பங்குபற்றுதலுடன் மாவட்ட அரசாங்க அதிபரும், மாவட்டச் செயலாளருமான ஜே.எஸ். அருள்ராஜ் ஏற்பாட்டில் இக்கூட்டம் நடைபெற்றது.

பாராளுமன்ற உறுப்பினரும் பிரதேச அபிவிருத்திக் குழுத் தலைவருமான கந்தசாமி பிரபு, மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான இராசமாணிக்கம் சாணக்கியன், எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், ஞானமுத்து ஸ்ரீநேசன், இளையதம்பி ஸ்ரீநாத் மற்றும் ஹபீப் லெப்பை மெஹமட் ரிபான் ஆகியோரும் இதில் கலந்துகொண்டனர்.

2026 ஆம் ஆண்டில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மாவட்ட செயலகம், எணைய அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்கள், கிழக்கு மாகாண சபை மற்றும் வெளிநாட்டு நிதியுதவிகளின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றம் இதன்போது பரிசீலிக்கப்பட்டது.

மாவட்ட செயலகத்தின் கீழ் 1,031 திட்டங்களுக்கு 2,723.72 மில்லியன் ரூபாவும், எனைய அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களின் கீழ் 1,079 திட்டங்களுக்கு 4,672.39 மில்லியன் ரூபாவும், கிழக்கு மாகாண சபையின் கீழ் 627 திட்டங்களுக்கு 2,706.00 மில்லியன் ரூபாவும், வெளிநாட்டு நிதியுதவியின் கீழ் 15 திட்டங்களுக்கு 901.85 மில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதன்படி, மொத்தம் 2,752 திட்டங்களுக்கு 11,003.96 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் கூட்டங்களில் முன்வைக்கப்பட்ட விடயங்களின் முன்னேற்றம், குடிநீர் விநியோகம், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை அபிவிருத்தி, மட்டக்களப்பு வாவி பாதுகாப்பு, காலநிலை மாற்றம், கனிய வள அகழ்வு, காகித நகரை அபிவிருத்தி செய்தல், பாலங்கள் மற்றும் வீதி அபிவிருத்தி உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. மைலத்தமாடு பிரச்சனை தொடர்பிலும் அதிக கவனம் செலுத்தப்பட்டது.

2026 ஆம் ஆண்டுக்கான அபிவிருத்தித் திட்டங்களை உரிய காலத்திற்குள் நிறைவு செய்வதுடன், மாவட்ட மக்களின் தேவைகளுக்கு முன்னுரிமை அளித்து அபிவிருத்திப் பணிகளை முன்னெடுப்பது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.

மாவட்டத்தில் இடம்பெறும் யானை – மனித மோதலின் தாக்கங்களைக் குறைப்பதற்காக துரித நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன், தேவையான பிராந்திய நிலையங்களை அமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.

இதன்போது கருத்துத் தெரிவித்த அமைச்சர்,

மக்களுக்குத் தேவையான குடிநீர் விநியோகத்தை துரிதப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்ததுடன், சட்டவிரோத மணல் அகழ்வுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பொலிஸ் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண பிரதம செயலாளர் கே. குணநாதன், மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சனி ஸ்ரீகாந்த், கிழக்கு மாகாண உயர் அதிகாரிகள், மாவட்ட பிரதி திட்டமிடல் பணிப்பாளர் வீ. நவநீதன், உள்ளூராட்சி மன்றங்களின் ஆணையாளர்கள் மற்றும் செயலாளர்கள், முப்படை உயர் அதிகாரிகள், பொலிஸ் உயர் அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள், அரச திணைக்களங்களின் உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

pazha-nedumaran-son-manikam-passed-away-tamil-news-2026-10-01-18-49-23 - Copy

பழ. நெடுமாறனின் மகன் மெல்பேர்னில் காலமானார்! – “பாஸ்போர்ட் முடக்கப்பட்டதால் இறுதிச் சடங்கிற்குச் செல்ல முடியாத சோகம்!”

October 1, 2026

மெல்பேர்ன்: உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவரும், தமிழ்த் தேசிய இயக்கத் தலைவருமான பழ. நெடுமாறன் அவர்களின் மகன் மாணிக்கம் (வயது

6

“இடைத்தேர்தலில் திமுக டெபாசிட் இழந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை!” – உதயநிதியைக் கடுமையாகச் சாடி, தவெகவுக்கு ஆதரவாகத் துரை வைகோ அதிரடி!

October 1, 2026

தூத்துக்குடி: வரவிருக்கும் இடைத்தேர்தல்களில் ஆளுங்கட்சியான திமுக டெபாசிட் இழந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என மதிமுக முதன்மைச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான துரை

kajen

அடக்குமுறைகளுக்கு அஞ்சாது, எமது உரிமைகளை வென்றெடுக்க அனைவரும் ஒன்றாக அணிதிரள்வோம் – கஜேந்திரன் குற்றச்சாட்டு

October 1, 2026

​அரசினதும் பொலிஸாரினதும் அடக்குமுறைகளுக்கு அஞ்சாது, எமது உரிமைகளை வென்றெடுக்க அனைவரும் ஒன்றாக அணிதிரள்வோம் என்று தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்

HTeMCSka8AAALCZ

“தூய்மையான சக்தி எனச் சொல்லிக்கொண்டு ‘திருடும்’ சக்தியாக மாறிய தவெக!” – முதலமைச்சர் விஜய்யைக் கடுமையாகச் சாடிய கனிமொழி!

October 1, 2026

மதுராந்தகம்: தூய்மையான அரசியல் சக்தி என்று சொல்லிக்கொண்டு ஆட்சிக்கு வந்த தவெக, தற்போது மக்கள் பிரதிநிதிகளைத் திருடும் சக்தியாக மாறிவிட்டதாகத்

4

திலீபனின் சிலை அகற்றம்; நினைவேந்தலை தடுப்பது உயிரிகளின் மாண்புக்கு எதிரானது – சர்வமத பேரவை

October 1, 2026

ஆன்மிக அடிப்படையில் நினைவேந்தலை தடுப்பது, குழப்புவது, எடுப்பார் கைப்பிள்ளையாக்க முனைவது உயிரிகளின் மாண்புக்கு எதிரானதாகும் என யாழ். மாவட்ட சர்வமத

loa

உடனடி கடன் நிறுவனங்களின் அதிக வட்டி சுரண்டல்?

October 1, 2026

இணையத்தளம் மூலம் உடனடி கடன் பெறும் வாடிக்கையாளர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் வகையில், நிறுவனங்களால் அதிக வட்டி அறவிடப்படுவது தொடர்பில் குற்றப்

ma

மகாராஷ்டிராவிலிருந்து நயினாதீவுக்கு 86 யாத்திரிகர்கள் வருகை

October 1, 2026

இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலத்தில் அமைந்துள்ள மதீஸ்வரி அம்மன் ஆலயத்திலிருந்து நயினாதீவு அம்மன் ஆலயம் நோக்கி அதிகளவிலான யாத்திரிகர்கள் யாழ்ப்பாணத்துக்கு வருகை

chna

  அமைச்சர் சந்திரசேகரன் கலந்துகொண்ட போட்டியில் வெடித்த மோதல்!

October 1, 2026

கிளிநொச்சியில் நடைபெற்ற உதைபந்தாட்ட இறுதிப் போட்டியின்போது இரு அணிகளின் ரசிகர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலைக் கட்டுப்படுத்த பொலிஸார் துப்பாக்கிச் சூடு

images (76)

“தவெக அமைச்சரவையில் இடமா?” – பரவி வரும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த பாமக எம்.எல்.ஏ சௌமியா அன்புமணி!

October 1, 2026

விழுப்புரம்: தவெக அமைச்சரவையில் தான் இணையப் போவதாக வெளியாகும் செய்திகள் வெறும் வதந்திகளே எனப் பாமக எம்.எல்.ஏ சௌமியா அன்புமணி

dailythanthi_2026-09-30_5ocjc3jc_Untitled-3

“தாராபுரம் இனி விசில் சின்னத்தின் கோட்டை!” – தவெக பிரச்சார மேடையில் அமைச்சர் செங்கோட்டையன் அதிரடிப் பேச்சு!

October 1, 2026

தாராபுரம்: தாராபுரம் இடைத்தேர்தல் பிரச்சார மேடையில் உரையாற்றிய அமைச்சர் செங்கோட்டையன், தாராபுரம் தொகுதி இனி விசில் சின்னத்தின் கோட்டையாக மாறும்

ceb

வடக்கின் 4 மாவட்டங்களில் 2 நாட்களுக்கு மின்தடை!

October 1, 2026

வவுனியா–மன்னார் 220 கிலோவோல்ட் மின் பரிமாற்ற வடத்தினை மாற்றியமைக்கும் பணிகள் காரணமாக, வடக்கின் பல பகுதிகளில் மின்சார விநியோகம் தற்காலிகமாகத்

thyity

தையிட்டி விகாரைக்கு எதிராகப் போராடியவர்கள் மீதான வழக்கு விசாரணை ஜனவரி 07ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

October 1, 2026

யாழ்ப்பாணம், தையிட்டி பகுதியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட விகாரைக்கு எதிராகப் போராட்டம் முன்னெடுத்தமை தொடர்பில் தொடரப்பட்ட வழக்கு விசாரணைகள் எதிர்வரும் ஜனவரி