மூன்றாம் உலகப் போரை ரஷ்ய ஜனாதிபதி தொடங்கிவிட்டார்! – உக்ரைன் ஜனாதிபதி

மூன்றாம் உலகப் போரை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் ஏற்கெனவே தொடங்கிவிட்டதாக உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

கடந்த 2022 ஆம் ஆண்டு பெப்ரவரி 24 ஆம் திகதி உக்ரைனுக்கு எதிரான போரை ரஷ்யா தொடங்கியது. இன்றுடன் போர் நான்கு ஆண்டுகளை நிறைவு செய்கிறது. இதை முன்னிட்டு பி.பி.சி. செய்தி நிறுவனத்துக்கு தான் அளித்த பேட்டியின் சுருக்கத்தை, ஜெலன்ஸ்கி தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

வான் பாதுகாப்பு என்பது இன்று மிகவும் சவாலான பிரச்சினையாக உள்ளது. துரதிருஷ்டவசமாக, வான் பாதுகாப்பு அமைப்புகளை நாங்களே தயாரிக்க அனுமதிக்கும் உரிமங்களை எங்கள் நட்பு நாடுகள் எங்களுக்கு வழங்கவில்லை. குறைந்தபட்சம் ஏற்கெனவே உள்ள வான் பாதுகாப்பு அமைப்புகளுக்கான ஏவுகணைகளை தயாரிக்க வேண்டும். இதுவரை நாங்கள் அதில் வெற்றி பெறவில்லை.

இந்தப் போரில் உக்ரைனை வலிமையாக்க வேண்டும் என்றால், எங்கள் வான் பரப்பை மூட வேண்டும், பொதுமக்கள் பாதுகாக்கப்பட வேண்டும், குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல வேண்டும், பொருளாதாரம் செயல்பட வேண்டும், பணப்புழக்கம் இருக்க வேண்டும், வரிகள் மூலம் கிடைக்கும் பணம் இராணுவத்துக்குச் செலவிடப்பட வேண்டும். இந்த வழியில்தான் நாங்கள் எங்கள் இராணுவத்தை பலப்படுத்துகிறோம். துரதிருஷ்டவசமாக இது இன்னும் நடக்கவில்லை. ஏவுகணைகளுக்கான உரிமங்களாவது எங்களுக்குத் தேவை.

மூன்றாம் உலகப் போரைப் பற்றி பல்வேறு கருத்துகள் இருக்கின்றன. புடின் அதை ஏற்கெனவே தொடங்கிவிட்டார் என்றே நான் நம்புகிறேன். கேள்வி என்னவென்றால், அவர் எவ்வளவு நிலப்பரப்பை கைப்பற்ற முடியும் என்பதும் அவரை தடுப்பது எப்படி என்பதும்தான். ரஷ்யா வெற்றி பெறுவதை தடுக்க வேண்டும். ஏனெனில், ரஷ்யா தனது சொந்த உலகத்தை மற்றவர்கள் மீது திணிக்கிறது. மக்கள் தங்கள் வாழ்க்கையை தாங்களே தேர்வு செய்வதை மாற்றுகிறது. அதனால்தான், புடின் மூன்றாம் உலகப் போரை ஏற்கெனவே தொடங்கிவிட்டதாக நான் நம்புகிறேன்.

இது பரந்த, முழு அளவிலான மூன்றாம் உலகப் போராக மாறுவதை நாங்கள்தான் தடுத்துக் கொண்டிருக்கிறோம். புடினை தடுக்கும் புறக்காவல் நிலையமாக உக்ரைன் இன்று உள்ளது.

இன்று, ஐரோப்பா எங்களுக்கு நிதி உதவி அளிக்கிறது. அதற்காக நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். அமெரிக்காவிடம் இருந்து PURL என்ற வான் பாதுகாப்பு அமைப்பை வாங்கும் திட்டத்துக்கு ஐரோப்பா நிதி உதவி அளிக்கிறது. ஆனால், இது போதுமானதா என்றால், நான் மாறுபடுகிறேன்.

ஒரு நாட்டுக்கு கணிசமான நிதியை ஒதுக்குவதால், போதுமான அளவு நிதி உதவியை அளிப்பதாகக் கூறும் நாடுகள் உள்ளன. மிகக் குறைவாகனே நிதி ஒதுக்கும் நாடுகளும் உள்ளன. உதவியை தடுப்பவர்களும் இருக்கிறார்கள். எங்களுக்கு தீங்கு விளைப்பவர்களைவிட இவர்கள் மேலானவர்கள்.

ஒட்டுமொத்த அளவில், வழங்கப்படும் நிதி உதவி போதுமானதா என்றால் இல்லை என்பதுதான் எனது பதில், ஆனால், ஐரோப்பாவைப் பொறுத்தவரை அது உக்ரைனுக்கும் உக்ரைன் மக்களுக்கும் ஆதரவாக இருந்து உதவி வருகிறது. ஆனால், எங்களுக்கு இன்னும் அதிக தேவை உள்ளது. ஏனெனில், ரஷ்யா அளவுக்கு எங்களிடம் ஆயுதங்கள் இல்லை.

இராணுவ வீரர்கள் குறித்து நாம் பேசும்போது, ஆட்சேர்ப்புக்குப் பதிலாக ஒப்பந்தங்களுக்கு மாறும்போது ஐரோப்பா எங்களுக்கு உதவ முடியும். புடின் இதைத்தான் செய்கிறார். அவர் படையில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் ஒப்பந்த அடிப்படையில் பணம் செலுத்துகிறார். நாங்களும் இதைச் செய்ய விரும்புகிறோம். ஆனால், எங்களிடம் போதுமான அளவு நிதி இல்லை. இதற்கு ஐரோப்பியர்கள் உதவ முடியும். இதற்கு இன்னும் ஐரோப்பியர்கள் இன்னும் நிதி உதவி அளிக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.

saji

10 இலட்சம் இலங்கையர்களின் பாதுகாப்பு தொடர்பில் தீவிர ஆலோசனை

March 4, 2026

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தீவிரமடைந்துள்ள போர்ச் சூழல் காரணமாக இலங்கைக்கு ஏற்படவுள்ள சவால்கள் குறித்து ஆராயும் நோக்கில், எதிர்க்கட்சித் தலைவர்

arres

வெற்றிலைக்கேணி பகுதியில் இருவர் கைது

March 4, 2026

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் மாட்டுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது நடவடிக்கை நேற்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

tr

அமெரிக்க கடற்படை ஹார்முஸ் நீரிணை வழியாக செல்லும் – ட்ரம்ப்

March 4, 2026

“தேவைப்பட்டால், அமெரிக்க கடற்படை ஹார்முஸ் நீரிணை வழியாக டேங்கர்களை விரைவில் அழைத்துச் செல்லும்” என்று டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஈரானுடனான

kasa'

காசல்ரி நீர்ப்போசன பிரதேசத்தில் நீரூற்றுக்கள் அற்றுப்போகும் அபாயம்?

March 4, 2026

காசல்ரி நீர்போசன பிரதேசத்தில் நீரூற்றுக்கள் அற்றுப்போகும் அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். நீர் மின் உத்தி செய்யும்

20

இருபதுக்கு – 20 உலகக் கிண்ணம்: இன்று முதலாவது அரையிறுதிப் போட்டி

March 4, 2026

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டியானது கொல்கத்தாவில் இன்றிரவு 7

iraa

ஈரானில் உயிரிழந்த மாணவிகளின் இறுதிச்சடங்கை ஒளிபரப்பிய அரச தொலைக்காட்சி!

March 4, 2026

ஈரானின் தெற்கு பகுதியில் உள்ள ஒரு பாடசாலை மீது சனிக்கிழமை நடைபெற்ற தாக்குதலில் உயிரிழந்த மாணவிகளின் இறுதிச்சடங்கு ஈரானிய அரசுத்

vimal

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை தாக்குதலின் பிரதான சூத்திரதாரி சஹ்ரானின் சட்டத்தரணியே இன்று நாட்டின் நீதி அமைச்சர்

March 4, 2026

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாக கருதப்படும் சஹ்ரான் ஹாஷிமின் வழக்கில் முன்னிலையான சட்டத்தரணியே இன்று இந்த நாட்டின்

ku

கூர்மையான ஆயுதத்தால் மனைவியைக் கொலை செய்த கணவன்

March 4, 2026

கேகாலை, அரநாயக்க பிரதேச வைத்தியசாலையில் பணியாற்றி வந்த பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். 35 வயதுடைய ருவினி மதுஷிகா என்ற

Pee

மனிதக் கடத்தல்; பீல் பிராந்திய காவல்துறையினரால் விழிப்புணர்வுக் கருத்தரங்கு

March 4, 2026

கனடாவின் பீல் பிராந்திய காவல்துறையினரால் மனிதக் கடத்தல் தொடர்பான விழிப்புணர்வுக் கருத்தரங்கு நடைபெற்றுள்ளது. கடத்தலில் இருந்து உயிர் தப்பியவர்களுக்கு ஆதரவு,

h

மிசிசாகாவைச் சேர்ந்த பெண்ணொருவரின் கொலை தொடர்பாக பீல் பிராந்திய காவல் துறை முக்கிய அறிவிப்பு

March 4, 2026

கனடா மிசிசாகாவைச் சேர்ந்த பெண்ணொருவரின் கொலை தொடர்பாக பீல் பிராந்திய காவல் துறை கொலை மற்றும் காணாமல் போனோர் பிரிவு

leb

வான்வழித் தாக்குதல்கள் காரணமாக லெபனானிலிருந்து 58,000 பேர் வரை இடம்பெயர்வு

March 4, 2026

லெபனான் முழுவதும் இஸ்ரேலிய இராணுவம் முன்னெடுத்து வரும் வான்வழித் தாக்குதல்கள் காரணமாக அந்நாட்டின் மனிதாபிமான நிலைமை பாரிய சரிவைச் சந்தித்துள்ளது.

dro

அமெரிக்கத் தூதரகத்தின் மத்திய புலனாய்வு முகவரக மையம் ஒன்றின் மீது ட்ரோன் தாக்குதல்

March 4, 2026

சவுதி அரேபியாவிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் மத்திய புலனாய்வு முகவரக (CIA) மையம் ஒன்றின் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.