முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம்!

முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் 60 வரையான காணி உரிமையாளர்களுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளதாக தெரிவித்து காணி உரிமையாளர்கள் முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை இன்று (27) முன்னெடுத்தனர்.

புதுக்குடியிருப்பு, கோம்பாவில் கிராமசேவையாளர் பிரிவு மற்றும் தேவிபுரம், அ., ஆ.பகுதி மக்கள் இந்த கவனயீர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்தனர்.

புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் காணிப்பகுதி உத்தியோகத்தர்கள் கிராம அலுவலர் ஆகியோரால் முன்னெடுக்கப்பட்ட குறித்த நடவடிக்கைக்கு ஆட்சேபனை தெரிவித்து இந்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது

இதன்போது இது தொடர்பான மகஜரினை வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் து.ரவிகரனிடம், முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபரிடமும் கையளித்துள்ளார்கள்.

இந்த மக்கள் அரசாங்கத்தினால் அரை ஏக்கர் காணி கொடுத்தார்கள். அதற்குள் வீடும் தென்னப்பிள்ளையும் வைக்க காணி முடிந்துள்ளது. இந்த நிலையில் எங்களின் வாழ்வாதரத்திற்காக எங்கள் காணியுடன் அல்லது அருகில் உள்ள மந்துக்காடாக கிடந்த காணிகளை சீர்செய்து துப்பரவு செய்து எங்கள் வாழ்வாதாரத்தினை கொண்டு செல்வதற்காக சீர்செய்து பயிர் கொடிகளை நாட்டிவைத்துள்ளோம் வான்பயிர் செய்துள்ளோம் மரமுந்திரிகை செய்துள்ளோம்.

இந்நிலையில் இந்த காணிகளை விட்டு உடனடியாக வெளியேறுமாறு பிரதேச செயலகத்தினால் அ. படிவம் ஒட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில் எம்மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதில் சிலர் 15 ஏக்கர் வரையில் காணியினை பிடித்து ஆவணம் போட்டுள்ளார்கள் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. ஏழை மக்களை கருத்தில் எடுக்கவில்லை இது தொடர்பில் மாவட்ட அரசாங்க அதிபருடன் கதைத்துள்ளோம். காணி ஆணையாளரிடம் கதைத்துள்ளோம். இந்த அரசாங்கத்தின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கடிதம் கொடுத்துள்ளோம் ஜனாதிபதி செயலத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளோம் இதுவரையும் எந்த பதிலும் இல்லை.

இந்த நிலையில் இந்த கவனயீர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்துள்ளோம் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் இந்த காணிப்பிரச்சினை தொடர்பில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் இ.விஜயகுமார் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது,

புதுக்குடியிருப்பு பிரதேசசெயலத்திற்கு உட்பட்ட கோம்பாவில் தேவிபுரம்,சுதந்திரபுரம் போன்ற மூன்று கிராமசேவையாளர் பிரிவுகளில் மிக அதிகமாக அரச காடுகளை வெட்டி காணிகளை அடத்தாக பிடிக்கும் நடவடிக்கை தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது.

போர்காலத்திற்கு முதல் அல்லது கடந்தகாலத்தில் கொடுக்கப்பட்ட அரசாங்கத்தினால் சட்டரீதியாக கொடுக்கப்பட்ட காணிகளோ அல்லது அவர்கள் பூர்வீகமாக வாழ்ந்த காணிகளுக்கும் பிரதேச செயலகம் நடவடிக்கை எடுக்கவில்லை மக்களின் பளைய காணிகள் அவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்னர் மிகவும் அடாத்தான முறையில் காணியினை கையகப்படுத்தி பாவித்து வருகின்றார்கள் ஒரு ஏக்கர் தொடக்கம் 37 ஏக்கர் வரை தனிநபர்கள் இவ்வாறு கையகப்படுத்தி வைத்துள்ளார்கள்.

இதில் அரச உத்தியோகத்தர்கள் இருக்கின்றார்கள் வியாபாரிகள் இருக்கின்றார்கள் மணல் விற்பனை செய்பவர்கள் இருக்கின்றார்கள் சமூகமட்ட அமைப்புக்களில் உள்ளவர்கள்இருக்கின்றார்கள் சில ஏழைகளும் இருக்கின்றார்கள் அவர்களை நாங்கள் அழைத்து கதைத்தவேளை அனைவருக்கும் ஏற்கனவே வேறு காணிகளுக்கு போமிட் கொடுக்கப்பட்டுள்ளது

ஆகவே ஏற்கனவே காணிகள் வைத்திருக்கும் நபர்கள் மேலதிகமாக காணியினை பிடித்து வைத்திருக்கின்றார்கள் ஒரு நபர் ஏதும் காணியில்லாமல் நாங்கள் இதில் குடியிருக்கின்றோம் என்று சொல்லவில்லை இவ்வாறானவர்கள் அனைவருக்கும் நீதிமன்றில் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் 1,700 நபர்கள் இதுவரைக்கும் காணி இல்லாத மக்கள் இருக்கின்றார்கள் அத்துடன் நாங்கள் முதலீட்டினை ஊக்கிவிக்கின்றோம் பிரதேசத்தில் பலர் வேலை இல்லாத நிலை காணப்படுகின்றது.

கிளிநொச்சி, வவுனியா, யாழ்ப்பாணத்திற்கு வேலைக்கு செல்கின்றார்கள் நாங்கள் முதலீட்டிற்காக ஊக்கிவிக்கின்றோம். யாராவது முதலீடு செய்யுங்கள் என்று காணிகளை அடையாளப்படுத்தியுள்ளோம் அந்த காணிகளையும் பிடிக்கின்றார்கள்.

எல்லோருக்கும் வாழ்வாதாரம் என்று காணிகளை கொடுப்பதாக இருந்தால் மொத்த காட்டினை துப்பரவு செய்தாலும் காணாது தொழில் முயற்சியாளர்களுக்கும் காணி இல்லாமல் விண்ணப்பம் செய்த மக்களுக்கும் காணி கொடுக்கவேண்டிய தேவை உள்ளது.

இதுவரைக்கும் 66 வழக்குகள் போடப்பட்டுள்ளது நான்கு வழக்குகள் கடந்த வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்பட்டுள்ளது புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் இன்னும் அதிகளவான காணிகளை வெட்டிவைத்துள்ள நபர்கள் இன்னும் 100 வழக்குதாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எந்த ஒரு குடிமகனும் பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Pee

மனிதக் கடத்தல்; பீல் பிராந்திய காவல்துறையினரால் விழிப்புணர்வுக் கருத்தரங்கு

March 4, 2026

கனடாவின் பீல் பிராந்திய காவல்துறையினரால் மனிதக் கடத்தல் தொடர்பான விழிப்புணர்வுக் கருத்தரங்கு நடைபெற்றுள்ளது. கடத்தலில் இருந்து உயிர் தப்பியவர்களுக்கு ஆதரவு,

h

மிசிசாகாவைச் சேர்ந்த பெண்ணொருவரின் கொலை தொடர்பாக பீல் பிராந்திய காவல் துறை முக்கிய அறிவிப்பு

March 4, 2026

கனடா மிசிசாகாவைச் சேர்ந்த பெண்ணொருவரின் கொலை தொடர்பாக பீல் பிராந்திய காவல் துறை கொலை மற்றும் காணாமல் போனோர் பிரிவு

leb

வான்வழித் தாக்குதல்கள் காரணமாக லெபனானிலிருந்து 58,000 பேர் வரை இடம்பெயர்வு

March 4, 2026

லெபனான் முழுவதும் இஸ்ரேலிய இராணுவம் முன்னெடுத்து வரும் வான்வழித் தாக்குதல்கள் காரணமாக அந்நாட்டின் மனிதாபிமான நிலைமை பாரிய சரிவைச் சந்தித்துள்ளது.

dro

அமெரிக்கத் தூதரகத்தின் மத்திய புலனாய்வு முகவரக மையம் ஒன்றின் மீது ட்ரோன் தாக்குதல்

March 4, 2026

சவுதி அரேபியாவிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் மத்திய புலனாய்வு முகவரக (CIA) மையம் ஒன்றின் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

pla

நிறுத்தப்பட்டிருந்த மத்திய கிழக்கு விமான சேவைகள் மீண்டும் ஆரம்பம்

March 4, 2026

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்ட போர் மோதல்கள் காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த விமான சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதற்கமைய, நேற்று

ai

ஆந்திர மாநிலத்தில் AI வழங்கிய போலி தீர்ப்புகள்?

March 4, 2026

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் சொத்துத் தகராறு வழக்கு ஒன்று விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அந்தச் சொத்தை ஆய்வு செய்ய

d

மோசடி வேலைவாய்ப்பு முகவர் நிறுவனம் சுற்றிவளைப்பு

March 4, 2026

ஜப்பான் மொழிக் கற்கை நிலையமொன்றை நடத்துவதாகக் கூறி, ஜப்பானின் கட்டுமானத் துறை, ஹோட்டல் துறை மற்றும் சாரதிப் பணிகளுக்காக ஆட்களை

kottaga

8 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து தொழிலாளர்கள் போராட்டம்

March 4, 2026

யுலிபீல்ட் தோட்டத் தொகுதிக்குட்பட்ட யதன்பிரிவு தோட்ட மக்கள், 08 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து கொட்டகலை – நுவரெலியா பிரதான வீதியின்

zelen

மத்திய கிழக்குப் போர்; ஏவுகணைகளைப் பெற்றுக்கொள்வதில் சிக்கல் – உக்ரைன் ஜனாதிபதி

March 4, 2026

மத்திய கிழக்கு போர் காரணமாக உக்ரைனுக்கு வான் பாதுகாப்பு ஏவுகணைகளைக் கண்டறிவது கடினமாகலாம் என உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி எச்சரித்துள்ளார்.

Vasantha Athukorala

ஏற்றுமதி வருமானத்தில் 8 சதவீத அதிகரிப்பு – பேராசிரியர் வசந்த அத்துகோரள

March 4, 2026

2025 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஏற்றுமதி வருமானத்தில் 8 சதவீத அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. நாட்டின்

Nalin

ஊடக வல்லுநர் நிறுவனச் சட்ட வரைவு உருவாக்கம் – சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர்

March 4, 2026

பிராந்திய ஊடகவியலாளர்களுக்கு கொடுக்க வேண்டிய நிலுவை கொடுப்பனவுகளை விரைவாகச் செலுத்துமாறு , அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் அனைத்து ஊடக

Sl E

சர்வதேச மனித உரிமைகள் நியமங்களுக்கு ஏற்றவாறே எந்தவொரு சட்டமும் இலங்கையில் அமையவேண்டும் – ஐரோப்பிய ஒன்றியம்

March 4, 2026

பயங்கரவாதத்தடைச்சட்டத்தைப் பதிலீடு செய்யும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டுவரும் புதிய சட்ட முன்மொழிவின் தயாரிப்புப்பணிகளை உன்னிப்பாக அவதானித்துவருகிறோம். எனினும் புதிதாக உருவாக்கப்படும் எந்தவொரு