ஆசிய பிராந்தியத்தில் முதியோர்களின் தொகை விகிதம் அதிகமாக உள்ள நாடுகளில் ஒன்றாக இலங்கை அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
2012ஆம் ஆண்டில் நாட்டின் முதியோர் மக்கள் தொகை 12 சதவீதமாக இருந்தது என்றும், 2024 ஆம் ஆண்டில் அது 18 சதவீதமாக அதிகரித்துள்ளது என்றும் வைத்தியர் நிஷானி உபயசேகர தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், 2024இல் மக்கள் தொகை கணக்கெடுப்பில், முதியோர் மக்கள் தொகை 18% ஆக அதிகரித்துள்ளது. இது 2040 ஆம் ஆண்டுக்குள், இந்த மக்கள் தொகையில் 25%, அதாவது நான்கு பேரில் ஒருவர், முதியவர்களாக இருப்பார்கள் என்று நாங்கள் கணித்துள்ளோம்.
ஆசியாவில் இதே போன்ற நாடுகளை எடுத்துக் கொண்டால், அது அதிக முதியோர் மக்கள் தொகை வளர்ச்சி விகிதத்தைக் கொண்ட நாடாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
இதற்கு பல காரணங்கள் உள்ளன. பிறக்கும் போது ஆயுட்காலம் அதிகரித்ததாலும், புதிய பிறப்புகளின் எண்ணிக்கை குறைந்ததாலும் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது என்றார்.