சென்னை
தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் வரும்போது எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் எழுந்து நின்று மரியாதை அளிக்காதது குறித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் சரமாரியான கேள்விகளை எழுப்பியதால் அவையில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது.
“உதயநிதிக்குக் கண்ணியத்தைச் சொல்லிக்கொடுங்கள்”:
சட்டசபையில் பேசிய அமைச்சர் ரமேஷ், “அவையில் கண்ணியத்துடன் நடந்துகொள்வது குறித்து முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். அதே கண்ணியத்தை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினுக்கும் அவர் சொல்லிக்கொடுக்க வேண்டும். 8 கோடி மக்களின் பிரதிநிதியான முதலமைச்சர் விஜய் அவைக்கு வரும்போது நாங்கள் அனைவரும் எழுந்து நின்று மரியாதை கொடுக்கிறோம்; ஆனால், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மட்டும் எழுந்து நிற்காமல் அமர்ந்தபடியே இருக்கிறார். அவர் சட்டசபையில் கண்ணியத்துடன் நடந்துகொள்ள வேண்டும்,” என்று ஆவேசமாகக் கூறினார்.
கொதித்தெழுந்த திமுக… நேருவின் அதிரடிப் பதில்:
அமைச்சர் ரமேஷின் இந்தப் பேச்சிற்குத் திமுக உறுப்பினர்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியதால் அவையில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. இதுகுறித்து விளக்கமளித்த முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, “முதலமைச்சர் சட்டசபைக்குள் வரும்போது எழுந்து நிற்பது குற்றம் குறை அல்ல; அது அவரவர் தனிப்பட்ட நடைமுறை. திமுக ஆட்சியில் இருந்தபோது கூட, முதலமைச்சர் வரும்போது அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் எழுந்து நிற்பது கிடையாது. எதிர்க்கட்சித் தலைவர் கட்டாயம் எழுந்து நிற்க வேண்டும் என்ற எந்த விதியும் இல்லை,” என்று திட்டவட்டமாகப் பதிலளித்தார்.
#TNAssembly #UdhayanidhiStalin #MinisterRamesh #ChiefMinisterVijay #JosephVijay #ThalapathyVijay #TVKGovernment #DMK #KNNehru #OPanneerselvam #TNPolitics #TamilNaduNews #ChennaiNews #ViralNewsTN #TrendingTN #LatestNewsTN #TNNewsUpdates