யாழ்ப்பாண மாவட்டத்தில் முதல் உள்ளக விளையாட்டரங்கின் கட்டுமானப் பணிகள் இளைஞர் அலுவல்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே தலைமையில் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 23) ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் மற்றும் பாராளுமன்ற சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க, பாராளுமன்ற உறுப்பினர் கே. இளங்குமரன், விளையாட்டுத்துறை அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் வி.பிரேமச்சந்திரன், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் பிரதேசவாசிகள் கலந்துகொண்டனர்.