சென்னை:
காவிரி டெல்டாவின் உயிர்நாடிப் பிரச்சினையில் தவெக அரசின் அர்த்தமற்ற மவுனம் அதிர்ச்சியளிப்பதாகக் குறிப்பிட்டுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், முதலமைச்சர் விஜய்க்கு பல்வேறு கேள்விகளை எழுப்பி அறிக்கை வெளியிட்டுள்ளார். தமிழ்நாட்டின் கோரிக்கையைக் காவிரி மேலாண்மை ஆணையம் தொடர்ச்சியாக நிராகரித்து வரும் நிலையில், இதுகுறித்து பிரதமரிடம் பேசாதது ஏன் என்றும், மேகதாது அணைக்கு எதிரான சட்டமன்றத் தீர்மானத்தை அனைத்துக் கட்சிக் தலைவர்களையும் அழைத்துச் சென்று பிரதமரிடம் நேரில் வழங்காதது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், குறுவை மற்றும் சம்பா சாகுபடிகள் பாதிக்கப்பட்டு அவதிப்படும் டெல்டா விவசாயிகளுக்கு இதுவரை புதிய நிவாரணத் தொகுப்பு வழங்கப்படவில்லை என்பதைக் சுட்டிக்காட்டியுள்ளார்.
கர்நாடக அரசை எதிர்த்துப் பேசத் தயங்கும் தவெக அரசு, தனது அர்த்தமற்ற மவுனத்தைக் கலைத்து மாநில உரிமையை நிலைநாட்டப் போர்க்கால நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். மேலும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியகக் புதிய நிவாரணத் தொகுப்பினை அறிவித்திட வேண்டும் எனவும் மு.க.ஸ்டாலின் தனது அறிக்கையில் கோரிக்கை விடுத்துள்ளார்.
#MKStalinStatement #CMVijaySilence #CauveryWaterRights #MekedatuDamIssue #DeltaFarmersCrisis #CropDamageRelief #DMKLeader #TamilNaduPolitics #BreakingNews #BMNews #TamilNews #LatestUpdate #StatePolitics #AgriculturalPolicy #WaterDispute #PoliticalControversy #PublicInterest #CurrentAffairs #Governance #NewsUpdate