மீன் வளத்தைப் பாதுகாப்பதற்கான உச்சிமாநாட்டில் கலந்துகொள்ள பிரதிநிகள் இந்தோனேஷியா விஜயம்

இந்தோனேஷியாவின் பாலி (Bali) நகரில் நேற்று வெள்ளிக்கிழமை (30) ஆரம்பமான கரையோர நாடுகளின் கூட்டணியின் 30வது அமர்வில் (30th Session of the Coastal States Alliance – CSA 030) இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி கலந்துகொள்வதற்காக கடற்றொழில், நீரியல் மற்றும் சமுத்திர வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரும், அமைச்சின் செயலாளர் கலாநிதி பி. கே. கோலித கமல் ஜினதாசவும் விஜயம் செய்துள்ளனர்.

இந்து சமுத்திர வலயத்தைச் சேர்ந்த 12 கரையோர நாடுகளின் பிரதிநிதிகளின் பங்குபற்றலுடன் ஜனவரி 30 மற்றும் 31 ஆகிய தினங்களில் இந்த உச்சிமாநாடு நடைபெறுகிறது. இந்து சமுத்திர டூனா ஆணைக்குழுவின் (IOTC) கட்டமைப்பிற்குள், இடம்பெயரும் மீன் இனமான டூனா (சூரை) மீன் வளத்திற்காக நியாயமான, நிலைபேறான (Sustainable) மற்றும் விதிகள் சார்ந்த முகாமைத்துவத்தை ஊக்குவிப்பதே இச்சந்திப்பின் பிரதான நோக்கமாகும்.

இலங்கை, பங்களாதேஷ், இந்தியா, இந்தோனேஷியா, ஈரான், மலேசியா, மாலைத்தீவு, மடகஸ்கார், மொசாம்பிக், பாகிஸ்தான், சோமாலியா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகள் இக்கூட்டணியின் அங்கத்துவ நாடுகளாகச் செயற்படுகின்றன.

இம்மாநாட்டில் கலந்துகொண்டுள்ள இலங்கைப் பிரதிநிதிகள் குழு பின்வரும் விடயங்கள் தொடர்பில் விசேட அவதானம் செலுத்தியது:

* டூனா மீன் வளப் பாதுகாப்பு: சமுத்திரத்தில் சுதந்திரமாக இடம்பெயரும் மீன் இனமான டூனா மீன்களின் இருப்பைப் பாதுகாப்பதற்காக அங்கத்துவ நாடுகளுக்கிடையில் பொதுவான தூரநோக்கொன்றைக் கட்டியெழுப்பல்.

* கூட்டு இணக்கப்பாடு: எதிர்காலத்தில் நடைபெறவுள்ள இந்து சமுத்திர டூனா ஆணைக்குழுவின் (IOTC) கூட்டங்களில், பிராந்திய கரையோர நாடுகளின் தேசிய நலன்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக, மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடும் தொலைதூர நாடுகளுடன் (Distant Water Fishing Nations – DWFN) பேச்சுவார்த்தை நடத்துவதற்கு வலுவான அடித்தளமொன்றை அமைத்துக்கொள்ளல்.

* ஒத்துழைப்பை விருத்தி செய்தல்: சமுத்திர வளங்களைப் பகிர்ந்தளித்தல் மற்றும் முகாமைத்துவம் செய்தல் தொடர்பில் நாடுகளுக்கிடையில் பரஸ்பர புரிந்துணர்வை வலுப்படுத்தல்.

இம்மாநாட்டின் பயனாக கரையோர நாடுகளின் கூட்டணியை (CSA) ஸ்தாபிப்பது தொடர்பான கூட்டுப் பிரகடனமொன்று வெளியிடப்படவுள்ளதுடன், 2026 ஜூன் மாதம் பாலி நகரிலேயே நடைபெறவுள்ள “Ocean Impact Summit 2026” உச்சிமாநாட்டில் இது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கைச்சாத்திடவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.

நிலைபேறான கடற்றொழில் கைத்தொழிலைப் பேணுவதற்கு சர்வதேச ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை அமைச்சர் கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர் இதன்போது வலியுறுத்தினார்.

ku

கிரிக்கெட் ஜாம்பவான் குமார் சங்கக்கரவின் தந்தை காலமானார்

March 3, 2026

இலங்கை கிரிக்கெட் ஜாம்பவான் குமார் சங்கக்கரவின் தந்தையும் கண்டியைச் சேர்ந்த சிரேஷ்ட சட்டத்தரணியுமான எஸ்.கே. சங்கக்கார காலமானதாக குடும்பத்தினர் தெரிவித்தனர்.

man

கடன் சேவை வழங்கும் பெண்களுக்கு ஏற்படவுள்ள பாதிப்பு குறித்து கவனயீர்ப்பு

March 3, 2026

நிதி அமைச்சினால் முன்மொழியப்பட்ட நுண் நிதி மற்றும் கடன் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபைச் சட்டத்திற்கு அமைவாக உள்ளூரில் சுய தொழிலில் ஈடுபடும்

shabana

சட்டவிரோதமாகப் பிரித்தானியாவுக்கு வருகின்றவர்களுக்கு புகலிடம் இல்லை!

March 3, 2026

சட்டவிரோதமாகப் பிரித்தானியாவுக்கு சென்றவர்கள் புகலிடம் கோருவோருக்கு இனி நிரந்தரப் பாதுகாப்பு வழங்கப்பட மாட்டாது என பிரித்தானியாவின் உள்துறைச் செயலாளர் ஷபானா

nec

ஈரான் அணு ஆயுதங்களை உற்பத்தி செய்யவில்லை – ரஷ்யா

March 3, 2026

ஈரான் அணு ஆயுதங்களை உற்பத்தி செய்து வருவதற்கான எந்தவொரு ஆதாரத்தையும் மாஸ்கோ நிர்வாகம் இதுவரை காணவில்லை என ரஷ்ய வெளியுறவு

tea

கல்வி நிர்வாக சேவையை சேர்ந்தவர்களுக்கான அதிபர் பதவிகளைப் பொறுப்பேற்க தயங்கும் கல்வி நிர்வாக சேவை அதிகாரிகள்?

March 3, 2026

கல்வி நிர்வாக சேவையை சேர்ந்தவர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள அதிபர் பதவிகளுக்கு, அச்சேவையைச் சேர்ந்த பெரும்பாலான அதிகாரிகள் விண்ணப்பிக்க முன்வரவில்லை என்று ஆசிரியர்

d

நாட்டின் பிரதம நீதியரசர் மன்னாருக்கு விஜயம்

March 3, 2026

ட்டின் பிரதம நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேன உத்தியோகபூர்வ பயணமாக இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (3) காலை மன்னாருக்கு விஜயம்

nan

‘சாகர’, ‘நந்திமித்திர’ கப்பல்கள் இலங்கையை வந்தடைந்தன!

March 3, 2026

இந்தியாவின் விசாகப்பட்டினம் துறைமுகத்திற்கு அருகிலுள்ள கிழக்கு இந்தியப் பெருங்கடல் கடற்கரையை மையமாக கொண்டு பெப்ரவரி 18 முதல் 26 வரை

iran

ஈரானில் இதுவரை 787 பேர் உயிரிழப்பு – செஞ்சிலுவைச் சங்கம்

March 3, 2026

ஈரான் மீது இடம்பெற்ற அமெரிக்க – இஸ்ரேல் தாக்குதல்களின் விளைவாக இதுவரை 787 பேர் உயிரிழந்துள்ளதாக செஞ்சிலுவை சங்கம் தகவல்

cham

பாராளுமன்றத்தின் முன்னாள் பிரதிச் செயலாளர் நாயகத்தின் பணி இடைநிறுத்த விவகாரம்: ரிட் மனு மார்ச் 18 இல் விசாரணைக்கு!

March 3, 2026

எவ்வித நியாயமான விசாரணையுமின்றி தனது பணி இடைநிறுத்தப்பட்ட தீர்மானத்தை வலுவிழக்கச் செய்யும் ரிட் உத்தரவு ஒன்றைப் பிறப்பிக்குமாறு கோரி பாராளுமன்றத்தின்

amazo

அமேசான் நிறுவனத்தின் பல தரவு மையங்கள் மீது ட்ரோன் தாக்குதல்

March 3, 2026

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தீவிரமடைந்துள்ள போர்ச் சூழலுக்கு மத்தியில், உலகின் முன்னணி கிளவுட் சேவை வழங்குநரான அமேசான் நிறுவனத்தின் பல

masoo

அரசாங்கத்தின் அனைத்துச் செயல்பாடுகளும் வழமை போன்று இடம்பெறுகின்றன – ஈரான் ஜனாதிபதி

March 3, 2026

தனது நாட்டுக்கு எதிரான போர் தீவிரமடைந்து வருகின்ற போதிலும், அரசாங்கத்தின் அனைத்துச் செயல்பாடுகளும் வழமை போன்று இடம்பெற்று வருவதாக ஈரான்

Ruvan Ranasinga

சுற்றுலாப் பயணிகளின் வருகை சரிவு?

March 3, 2026

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழல் காரணமாக, மார்ச் மாதத்தில் எதிர்பார்க்கப்பட்ட சுற்றுலாப் பயணிகளின் வருகை இலக்குகளை அடைய முடியவில்லை