மீண்டும் புயல் வர வாய்ப்பா – வளிமண்டலவியல் திணைக்களம்

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலையால் பாரிய பாதிப்பை எதிர்கொண்டு வரும் நிலையில், எதிர்வரும் நாட்களில் மற்றுமொரு புயல் தாக்குமென பரவும் வதந்திகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் பதிலளித்துள்ளது.

எதிர்வரும் 4ஆம் மற்றும் 5ஆம் திகதிகளில் மழை எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், இதுபோன்ற பாதிப்புகள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் எதுவும் இல்லையென வளிமண்டல ஆய்வாளர் மலித் பெர்னான்டோ தெரிவித்துள்ளார்.

மேலும், வெள்ளம் காணப்படும் பகுதிகளை பார்வையிடுவதற்கு சிறுவர்களை அழைத்துச் செல்ல வேண்டாமென சுகாதார அதிகாரிகள் பெற்றோர்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

இரண்டு மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழை வடக்கு மற்றும் தென் மாகாணங்களில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கிழக்கு, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களின் சில இடங்களில் பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

மத்திய, சப்ரகமுவ, மேல், வடமேல், தென் மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் அம்பாறை மாவட்டத்திலும் அதிகாலை வேளையில் பனி மூட்டம் காணப்படும்.

பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொது மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

திருகோணமலை தொடக்கம் காங்கேசன்துறை ஊடாக மன்னார் வரையான அத்துடன் களுத்துறை தொடக்கம் காலி, மாத்தறை ஊடாக பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களின் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 25 – 35 km வேகத்தில் தென்மேற்குத் திசையில் இருந்து காற்று வீசும்.நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்கள் மிதமான அலையுடன் காணப்படும்.

இடியுடன் கூடிய மழை பெய்கின்ற சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசுவதுடன் அவ்வேளைகளில் கடல் பிராந்தியங்கள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என்று எதிர்வுகூறப்பட்டுள்ளது.

po

உதவித் தொகையை அதிகரித்த பிரித்தானியா

December 6, 2025

சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக, வழங்கும் மனிதாபிமான உதவித் தொகையை ஒரு மில்லியன் ஸ்டெர்லிங் பவுண்டுகள்

veh

வாகன பாவனை தொடர்பில் எச்சரிக்கை

December 6, 2025

டிட்வா சூறாவளியால் ஏற்பட்ட வெள்ளத்தில் மூழ்கிய அல்லது அடித்துச் செல்லப்பட்ட வாகனங்களை முழு ஆய்வு இல்லாமல் பயன்படுத்த வேண்டாம் என

thera

ஜனாதிபதி – தேரர் சந்திப்பு!

December 6, 2025

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று சனிக்கிழமை (06) முற்பகல் மல்வத்து மகா விகாரைக்கு விஜயம் செய்து, மல்வத்து மகாநாட்டில், அதி

pra

நிவாரணக் கொடுப்பனவில் எந்தவித ஊழலுக்கும் இடமில்லை

December 6, 2025

வெள்ள நிவாரணக் கொடுப்பனவில் எந்தவித ஊழலுக்கும் இடமில்லை வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கம் வழங்குகின்ற 25,000 ரூபா கொடுப்பனவில்

dssdvds

எலான் மஸ்க்கிற்கு சொந்தமான ‘எக்ஸ்’ சமூக ஊடக நிறுவனத்துக்கு அபராதம்

December 6, 2025

பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க்கிற்கு சொந்தமான, ‘எக்ஸ்’ சமூக ஊடக நிறுவனத்துக்கு ஐரோப்பிய ஒன்றிய ஒழுங்குமுறை ஆணையம், 1,259 கோடி

pa hi

இந்து மத மாணவியர் பாகிஸ்தான் அரச பள்ளியில் கட்டாய மத மாற்றம்?

December 6, 2025

பாகிஸ்தானில், அரசு பள்ளியில் படிக்கும் இந்து மாணவியர், வலுக்கட்டாயமாக முஸ்லிம் மதத்துக்கு மத மாற்றம் செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நம்

sa

சிங்கப்பூர் பள்ளிகளில் ‘ஸ்மார்ட் போன், வாட்ச்’ பயன்படுத்த கட்டுப்பாடு?

December 6, 2025

சிங்கப்பூரில், பள்ளி நேரங்களில், ‘ஸ்மார்ட் போன், ஸ்மார்ட் வாட்ச்’ பயன்படுத்த மாணவர் களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது. சமூக வலைதளங்களில்

hea

வரலாறு காணாத வகையில் வெளிநாட்டவர் பிரிட்டனிலிருந்து வெளியேற்றம்!

December 6, 2025

ஐரோப்பிய நாடான பிரிட்டனில் தங்கியிருந்த வெளிநாட்டினர், வரலாறு காணாத வகையில் வெளியேறி வருகின்றனர். அதில், இந்தியர்களே முதலிடத்தில் உள்ளனர். வேலைக்காகவும்,

fr

பிரான்சில் கிறிஸ்துமஸ் கொண்டாட்ட நிகழ்வுக்குள் புகுந்த காரால் 10 பேர் பலி

December 6, 2025

பாரிஸ்: பிரான்சில் கிறிஸ்துமஸ் கொண்டாட்ட கூட்டத்திற்குள் அதிவேகமாக கார் புகுந்ததில் 10 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

dol

‘FIFA சமாதான விருது’டொனால்ட் டிரம்பிற்கு…

December 6, 2025

டொனால்ட் டிரம்பிற்கு ‘FIFA சமாதான விருது’ வழங்கப்பட்டது சர்வதேச கால்பந்து சம்மேளனத்தினால் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கு ‘FIFA சமாதான

mod

இறையாண்மையுடன் கூடிய சுதந்திரமான கொள்கையை இந்தியா பின்பற்றுகிறது!

December 6, 2025

இறையாண்மையுடன் கூடிய சுதந்திரமான கொள்கையை பிரதமர் மோடி தலைமையிலான இந்திய அரசு பின்பற்றி வருவதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின்

vija

உலகின் பலம் பொருந்திய நாடுகள் இலங்கையை மிகவும் இழிவாக கருதுவதாகவே தென்படுகின்றது

December 6, 2025

உலகின் பலம் பொருந்திய நாடுகள் இலங்கையை மிகவும் இழிவாக கருதுவதாகவே தென்படுகின்றது என முன்னாள் நீதி அமைச்சர் கலாநிதி விஜயதாச