இரத்தினபுரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக இம்மாவட்டத்தில் ஆங்காங்கே மண்சரிவு ஏற்பட்டு வருகிறது.
இதனால், மண்சரிவு அபாயமுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு இரத்தினபுரி மாவட்ட செயலகம் அறிவித்துள்ளது .
இம்மாவட்டத்தில் 500 க்கு மேற்பட்ட மண்சரிவு அபாயமுள்ள பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இரத்தினபுரி கொழும்பு பிரதான பாதையில் புதிய நகரப்பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது இதனால் ஒருவழி பாதை மட்டுமே போக்குவரத்துக்காக திறக்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது.