மலையக புகையிரத பாதை; பேராதனை பால புனரமைப்புப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு?

மலையக புகையிரத பாதையின் பேராதனை புகையிரத பாலத்தின் புனரமைப்புப் பணிகள் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், ரம்புக்கனை மற்றும் கடுகண்ணாவை இடையிலான புகையிரத பாதையை சீரமைக்கும் பணிகளை ஆரம்பிப்பதற்கு இதுவரை எவ்வித திட்டமும் இல்லை எனவும் இலங்கை புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அச்சங்கம், மண்சரிவினால் சேதமடைந்த மலையக புகையிரத பாதையின் பேராதனை புகையிரத பாலத்தை புனரமைக்க அரசாங்கம் தலையிட்டு புதிய இரட்டைப் பாலமொன்றை அமைக்க முதலில் முன்மொழிந்த போதிலும், பின்னர் பழைய பாலத்தையே மீண்டும் புனரமைப்பதற்கான திட்டங்கள் தயாரிக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளது.

அத்துடன், 2026 ஏப்ரல் மாதத்தில் கண்டி வரையான புகையிரத சேவைகள் மீள ஆரம்பிக்கப்படும் என அரசாங்கம் அறிவித்திருந்தது.

எனினும், மத்திய பொறியியல் ஆலோசனைப் பணியகம் (CECB) அரசாங்கத்தின் தலையீட்டின் பேரில் புனரமைப்புப் பணிகளில் இணைந்திருந்தாலும், அவர்களால் இதுவரை முன்னெடுக்கப்பட்ட பணிகள் புகையிரத பொறியியல் தொழில்நுட்பக் குழுவினால் எதிர்பார்க்கப்பட்ட தரத்தில் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, பேராதனை புகையிரத பாலத்தின் புனரமைப்புப் பணிகள் தற்போது நிறுத்தப்பட்டுள்ளதாக அச்சங்கம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

இதன் காரணமாக, இப்பாலத்தின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து மீண்டும் ஒரு அறிக்கையைக் கோருவதற்கு புகையிரத திணைக்களம் தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், தற்போதைய புகையிரத பொது முகாமையாளரின் சில செயற்பாடுகளே இவ்வாறான சிக்கல்கள் ஏற்படக் காரணம் என அச்சங்கம் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

புகையிரத பொது முகாமையாளர் பதவிக்கு இலங்கை நிர்வாக சேவையைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளமையால் இவ்வாறான தொழில்நுட்ப ரீதியான சிக்கல் நிலை தோன்றியுள்ளதாக அவர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

புகையிரத திணைக்களம் இலாபமடைவதாகக் காட்டுவதற்காக, புகையிரத சேவைகளைக் குறைப்பதன் மூலம் செலவுகளைக் குறைக்க தற்போதைய பொது முகாமையாளர் நடவடிக்கை எடுத்து வருவதாக இலங்கை புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

திணைக்கள அதிகாரிகள் தமது கருத்துக்களை முன்வைக்க முடியாமை மற்றும் ஏனைய அதிகாரிகளின் ஆலோசனைகளை பொது முகாமையாளர் செவிமடுக்காமை காரணமாக, தற்போதைய அரசாங்கம் அபகீர்த்திக்கு உள்ளாவதுடன் புகையிரதப் பயணிகள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளதாக அச்சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

பாதைகளை மீண்டும் புனரமைப்பதில் இவ்வாறான நிர்வாகச் சிக்கல்கள் பாரிய தாக்கத்தை செலுத்துவதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

எனவே, புகையிரத சேவையை விரைவாக வழமைக்குக் கொண்டுவருவதற்கு, புகையிரத திணைக்களத்தில் பணியாற்றி தற்போது ஓய்வுபெற்றுள்ள பொறியியலாளர்களான முன்னாள் பொது முகாமையாளரைக் கொண்ட குழுவொன்றை நியமித்து நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு அச்சங்கம் பொறுப்புவாய்ந்த அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

arr

ஏழாலையில் 800 லிட்டர் டீசலுடன் இருவர் கைது!

March 4, 2026

800 லிட்டர் டீசலை பதுக்கி வைத்திருந்த இருவர் இன்று (04) அதிகாலை சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏழாலையைச் சேர்ந்த

fi

களுத்துறை மாவட்ட செயலகத்திற்கு முன்னால் உள்ள மின்மாற்றி ஒன்றில் தீ விபத்து

March 4, 2026

களுத்துறை மாவட்ட செயலகத்திற்கு முன்னால் உள்ள மின்மாற்றி ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இத்தீ சுமார் 20 நிமிடங்கள் நீடித்ததுடன்,

nurai

நிலக்கரி இறக்குமதி தொடர்பான விசாரணை அறிக்கை கையளிப்பு

March 4, 2026

நுரைச்சோலை லக்விஜய நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்திற்காக ஒன்பது நிலக்கரி கப்பல்கள் இறக்குமதி செய்யப்பட்டது தொடர்பான விசாரணைகள் குறித்த தனது

gol

தங்கத்தின் விலை சடுதியாக வீழ்ச்சி

March 4, 2026

உலக சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்ததை அடுத்து, இலங்கையில் தங்கத்தின் விலை 13,000 ரூபாவால் குறைந்துள்ளதாக தங்க சந்தை தரவுகள்

Galle

காலி கடற்பரப்பில் விபத்துக்குள்ளான ஈரானிய கப்பல்!

March 4, 2026

ரானிய கடற்படை கப்பலில் இருந்து மீட்கப்பட்ட 32 பேர் காலி கராபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. காலி

saji

10 இலட்சம் இலங்கையர்களின் பாதுகாப்பு தொடர்பில் தீவிர ஆலோசனை

March 4, 2026

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தீவிரமடைந்துள்ள போர்ச் சூழல் காரணமாக இலங்கைக்கு ஏற்படவுள்ள சவால்கள் குறித்து ஆராயும் நோக்கில், எதிர்க்கட்சித் தலைவர்

arres

வெற்றிலைக்கேணி பகுதியில் இருவர் கைது

March 4, 2026

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் மாட்டுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது நடவடிக்கை நேற்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

tr

அமெரிக்க கடற்படை ஹார்முஸ் நீரிணை வழியாக செல்லும் – ட்ரம்ப்

March 4, 2026

“தேவைப்பட்டால், அமெரிக்க கடற்படை ஹார்முஸ் நீரிணை வழியாக டேங்கர்களை விரைவில் அழைத்துச் செல்லும்” என்று டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஈரானுடனான

kasa'

காசல்ரி நீர்ப்போசன பிரதேசத்தில் நீரூற்றுக்கள் அற்றுப்போகும் அபாயம்?

March 4, 2026

காசல்ரி நீர்போசன பிரதேசத்தில் நீரூற்றுக்கள் அற்றுப்போகும் அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். நீர் மின் உத்தி செய்யும்

20

இருபதுக்கு – 20 உலகக் கிண்ணம்: இன்று முதலாவது அரையிறுதிப் போட்டி

March 4, 2026

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டியானது கொல்கத்தாவில் இன்றிரவு 7

iraa

ஈரானில் உயிரிழந்த மாணவிகளின் இறுதிச்சடங்கை ஒளிபரப்பிய அரச தொலைக்காட்சி!

March 4, 2026

ஈரானின் தெற்கு பகுதியில் உள்ள ஒரு பாடசாலை மீது சனிக்கிழமை நடைபெற்ற தாக்குதலில் உயிரிழந்த மாணவிகளின் இறுதிச்சடங்கு ஈரானிய அரசுத்

vimal

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை தாக்குதலின் பிரதான சூத்திரதாரி சஹ்ரானின் சட்டத்தரணியே இன்று நாட்டின் நீதி அமைச்சர்

March 4, 2026

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாக கருதப்படும் சஹ்ரான் ஹாஷிமின் வழக்கில் முன்னிலையான சட்டத்தரணியே இன்று இந்த நாட்டின்