மயக்க மருந்து கொடுத்து வங்கி ஊழியரிடம் கொள்ளையிட்ட நபர் கைது

மனநல நோயாளிகளுக்கு வழங்கப்படும் மருந்து மாத்திரைகளை அதிகளவில் கொடுத்து, நபர்களைப் போதையேற்றி, அவர்கள் நினைவிழந்த பின்னர் அவர்களிடமிருந்த பணம் மற்றும் தங்க நகைகளைக் கொள்ளையிட்ட நபரொருவரைப் பொரலஸ்கமுவ பொலிஸார் கைது செய்துள்ளனர்.

டிக்டொக் சமூக ஊடகத்தின் ஊடாக நண்பரான தனியார் வங்கி உதவியாளர் ஒருவரை, கடந்த 19 ஆம் திகதி சந்தேகநபர் சந்திக்கச் சென்றுள்ளார்.

அவர்கள் இருவரும் கொழும்பில் உள்ள முன்னணி வர்த்தகத் தொகுதியொன்றில் அமைந்துள்ள உணவகத்தில் இவ்வாறு சந்தித்துள்ளதுடன், பின்னர் சந்தேகநபர் குறித்த நபருக்கு இரகசியமாக மருந்து மாத்திரைகளை அருந்தச் செய்து, அவர் நினைவிழந்த பின்னர் பொரலஸ்கமுவ பிரதேசத்தில் உள்ள விடுதி ஒன்றுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு அவர் அணிந்திருந்த தங்க நகைகள் மற்றும் அவரது வங்கிக் அட்டையிலிருந்து 258,000 ரூபா பணத்தைத் திருடிக்கொண்டு தப்பிச் சென்றுள்ளார்.

பின்னர் இது தொடர்பில் குறித்த தனியார் வங்கி உதவியாளர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். அதற்கமைய மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், 28 வயதுடைய இந்தச் சந்தேகநபர் பன்னிப்பிட்டிய பிரதேசத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளார்.

அந்தச் சந்தர்ப்பத்தில் சந்தேகநபரிடமிருந்து பணத்தை அறவிடும் இயந்திரம் ஒன்று, 05 போதை மாத்திரைகள் மற்றும் சில பணத்தாள்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், இதே பாணியில் மற்றொரு தனியார் நிறுவன அதிகாரி ஒருவரையும் போதையேற்றி, அவரது தங்க நகைகள் மற்றும் பணத்தைக் கொள்ளையிட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

இவ்வாறு சந்தேகநபர் குறித்த இரண்டு நபர்களிடமிருந்தும் 20 இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான பணம் மற்றும் தங்க நகைகளைத் திருடியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சந்தேகநபர் திருடிய சில தங்க நகைகளை நீர்கொழும்பு பிரதேசம் மற்றும் கொழும்பு செட்டித் தெருவில் உள்ள நகைக்கடைகளில் விற்றுப் பணம் பெற்றுக்கொண்டுள்ளமை தெரியவந்துள்ளது.

தங்க நகைகளை அடகு வைத்துப் பெற்ற பணம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், தன்னிடம் கோபித்துக்கொண்டு சென்ற நெருங்கிய நண்பர் ஒருவரை மீண்டும் இணைத்துக்கொள்வதற்காக, வத்தளை – மோதரை பிரதேசத்தைச் சேர்ந்த சாமியார் ஒருவருக்கு அப்பணத்தில் 10 இலட்சம் ரூபாவை வழங்கியதாகச் சந்தேகநபர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், சந்தேகநபர் இவ்வாறு கொள்ளையிட்ட பணத்தில் பெரும்பகுதியைச் செலவு செய்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்துள்ளமை தெரியவந்துள்ளது.

சந்தேகநபர் இவ்வாறாகப் பல்வேறு நபர்களுடன் நெருங்கிய தொடர்பைப் பேணி, அவர்களைப் போதையேற்றிப் பணம் மற்றும் தங்க நகைகளைத் திருடி, சுமார் 30 இலட்சம் ரூபா பணத்தை இதுவரை குறித்த சாமியாருக்கு வழங்கியுள்ளமையும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேகநபர் அடையாள அணிவகுப்பிற்காக நுகேகொடை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதுடன், பொரலஸ்கமுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

iraa

ஈரானில் உயிரிழந்த மாணவிகளின் இறுதிச்சடங்கை ஒளிபரப்பிய அரச தொலைக்காட்சி!

March 4, 2026

ஈரானின் தெற்கு பகுதியில் உள்ள ஒரு பாடசாலை மீது சனிக்கிழமை நடைபெற்ற தாக்குதலில் உயிரிழந்த மாணவிகளின் இறுதிச்சடங்கு ஈரானிய அரசுத்

vimal

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை தாக்குதலின் பிரதான சூத்திரதாரி சஹ்ரானின் சட்டத்தரணியே இன்று நாட்டின் நீதி அமைச்சர்

March 4, 2026

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாக கருதப்படும் சஹ்ரான் ஹாஷிமின் வழக்கில் முன்னிலையான சட்டத்தரணியே இன்று இந்த நாட்டின்

ku

கூர்மையான ஆயுதத்தால் மனைவியைக் கொலை செய்த கணவன்

March 4, 2026

கேகாலை, அரநாயக்க பிரதேச வைத்தியசாலையில் பணியாற்றி வந்த பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். 35 வயதுடைய ருவினி மதுஷிகா என்ற

Pee

மனிதக் கடத்தல்; பீல் பிராந்திய காவல்துறையினரால் விழிப்புணர்வுக் கருத்தரங்கு

March 4, 2026

கனடாவின் பீல் பிராந்திய காவல்துறையினரால் மனிதக் கடத்தல் தொடர்பான விழிப்புணர்வுக் கருத்தரங்கு நடைபெற்றுள்ளது. கடத்தலில் இருந்து உயிர் தப்பியவர்களுக்கு ஆதரவு,

h

மிசிசாகாவைச் சேர்ந்த பெண்ணொருவரின் கொலை தொடர்பாக பீல் பிராந்திய காவல் துறை முக்கிய அறிவிப்பு

March 4, 2026

கனடா மிசிசாகாவைச் சேர்ந்த பெண்ணொருவரின் கொலை தொடர்பாக பீல் பிராந்திய காவல் துறை கொலை மற்றும் காணாமல் போனோர் பிரிவு

leb

வான்வழித் தாக்குதல்கள் காரணமாக லெபனானிலிருந்து 58,000 பேர் வரை இடம்பெயர்வு

March 4, 2026

லெபனான் முழுவதும் இஸ்ரேலிய இராணுவம் முன்னெடுத்து வரும் வான்வழித் தாக்குதல்கள் காரணமாக அந்நாட்டின் மனிதாபிமான நிலைமை பாரிய சரிவைச் சந்தித்துள்ளது.

dro

அமெரிக்கத் தூதரகத்தின் மத்திய புலனாய்வு முகவரக மையம் ஒன்றின் மீது ட்ரோன் தாக்குதல்

March 4, 2026

சவுதி அரேபியாவிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் மத்திய புலனாய்வு முகவரக (CIA) மையம் ஒன்றின் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

pla

நிறுத்தப்பட்டிருந்த மத்திய கிழக்கு விமான சேவைகள் மீண்டும் ஆரம்பம்

March 4, 2026

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்ட போர் மோதல்கள் காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த விமான சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதற்கமைய, நேற்று

ai

ஆந்திர மாநிலத்தில் AI வழங்கிய போலி தீர்ப்புகள்?

March 4, 2026

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் சொத்துத் தகராறு வழக்கு ஒன்று விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அந்தச் சொத்தை ஆய்வு செய்ய

d

மோசடி வேலைவாய்ப்பு முகவர் நிறுவனம் சுற்றிவளைப்பு

March 4, 2026

ஜப்பான் மொழிக் கற்கை நிலையமொன்றை நடத்துவதாகக் கூறி, ஜப்பானின் கட்டுமானத் துறை, ஹோட்டல் துறை மற்றும் சாரதிப் பணிகளுக்காக ஆட்களை

kottaga

8 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து தொழிலாளர்கள் போராட்டம்

March 4, 2026

யுலிபீல்ட் தோட்டத் தொகுதிக்குட்பட்ட யதன்பிரிவு தோட்ட மக்கள், 08 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து கொட்டகலை – நுவரெலியா பிரதான வீதியின்

zelen

மத்திய கிழக்குப் போர்; ஏவுகணைகளைப் பெற்றுக்கொள்வதில் சிக்கல் – உக்ரைன் ஜனாதிபதி

March 4, 2026

மத்திய கிழக்கு போர் காரணமாக உக்ரைனுக்கு வான் பாதுகாப்பு ஏவுகணைகளைக் கண்டறிவது கடினமாகலாம் என உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி எச்சரித்துள்ளார்.