அவுஸ்திரேலிய ஃபெடரல் பொலிஸாரினால் (AFP) ஏற்பாடு செய்யப்பட்ட “மனிதக் கடத்தல் மற்றும் ஆள் கடத்தல் புலனாய்வு” (People Smuggling and Human Trafficking Investigations) தொடர்பான சிறப்பு பயிற்சிப் பட்டறை இன்று (09) காலை 9.00 மணிக்கு கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் ஆரம்பமானது.
இதன் ஆரம்ப நிகழ்வு சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தலைமையில் நடைபெற்றது.
குறித்த பயிற்சி பட்டறையானது இன்று (09) முதல் எதிர்வரும் 20ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது.
இதில் இலங்கை பொலிஸ் திணைக்களம், இலங்கை கடற்படை, குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம், இலங்கை சுங்கம் மற்றும் கடலோர பாதுகாப்பு படை உள்ளிட்ட நிறுவனங்கள் பங்கேற்கவுள்ளன.