சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் புதன்கிழமைகளில் மேற்கொள்ளப்படும் வழக்கமான உணவு நிலை குறித்து புதன்கிழமை (03) அன்று இடம்பெற்ற சோதனையின் போது, மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற, காலாவதியான மற்றும் பழுதடைந்து காணப்பட்ட பெருமளவு உணவுப் பொருட்கள் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டன. சுகாதார விதிமுறைகளை மீறிய வர்த்தகர்களுக்கு எதிராக நீதிமன்றில் பி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இப்பரிசோதனை நடவடிக்கையில் சம்மாந்துறை பிரதேச சபை, கள உத்தியோகத்தர்கள் இணைந்து கொண்டதுடன், பிரதேசத்தில் உள்ள உணவகங்கள் மற்றும் பல்பொருள் அங்காடிகள் இதன்போது விசேட கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டன.
தற்போதைய காலப்பகுதியில் மின்சார விநியோகத்தில் அடிக்கடி தடங்கல் ஏற்படுவதால், குளிரூட்டியில் வைத்து விற்பனை செய்யப்படும் உணவுப் பொருட்களை கொள்வனவு செய்யும்போது, அதிக விழிப்புடன் இருக்குமாறு சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் மக்களை கேட்டுக் கொண்டுள்ளது.