மத்திய கிழக்கு பதற்றம்: இலங்கையர்களின் பாதுகாப்பு குறித்து அரசாங்கம் விசேட அறிவிப்பு

கிழக்கில் மோசமடைந்து வரும் பாதுகாப்பு நிலைமையை இலங்கை அரசாங்கம் உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

இப்பிராந்தியத்தில் வசிக்கும் மற்றும் பணிபுரியும் சுமார் ஒரு மில்லியன் இலங்கையர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்கே அரசாங்கம் மிக உயர்ந்த முன்னுரிமை அளிப்பதாக அமைச்சின் ஊடக வெளியீட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிராந்தியத்தில் நிலவும் ஸ்திரமற்ற தன்மையைக் கருத்தில் கொண்டு, அங்குள்ள இலங்கை குடிமக்கள் விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

இலங்கையர்களுக்கான முக்கிய அறிவுறுத்தல்கள்

மத்திய கிழக்கில் உள்ள இலங்கையர்கள் பின்வரும் நடைமுறைகளைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்

நம்பகமான உள்ளூர் ஊடகங்கள் மற்றும் அந்தந்த நாடுகளின் உத்தியோகபூர்வ அறிவிப்புகளைத் தொடர்ந்து அவதானிக்க வேண்டும்.

அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்க்குமாறும், பாரிய அளவிலான பொதுக் கூட்டங்களில் கலந்துகொள்ள வேண்டாம் எனவும் கோரப்பட்டுள்ளனர்.

அருகாமையிலுள்ள இலங்கை இராஜதந்திர தூதரகங்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்க வேண்டும்.

கைபேசிகளை எப்போதும் முழுமையாக வலுவூட்டி (Charge) வைத்திருப்பதுடன், செல்லுபடியாகும் அடையாள ஆவணங்களை எப்போதும் கைவசம் வைத்திருக்க வேண்டும்.

உதவி தேவைப்படும் இலங்கையர்களுக்காகப் பிராந்தியத்தில் உள்ள அனைத்து இலங்கை இராஜதந்திர தூதரகங்களும் 24 மணிநேர அவசரத் தொடர்பிலக்கங்களைச் செயற்படுத்தியுள்ளன.

இலங்கையில் உள்ள குடும்பங்கள், மத்திய கிழக்கில் உள்ள தங்கள் உறவினர்கள் குறித்து விசாரிப்பதற்காக அமைச்சினால் பின்வரும் பிரத்தியேக 24 மணிநேர அவசர இலக்கங்கள் நிறுவப்பட்டுள்ளன

கொன்சியூலர் பிரிவு, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு: +94742595546

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLBFE): +94719802822

முழுநேர சேவைத் தொடர்பிலக்கம்: 1989

நிலைமைகளைத் தொடர்ந்து கண்காணித்து வரும் அமைச்சு, தேவைக்கேற்ப மேலதிக தகவல்களை வெளியிடும் என அறிவித்துள்ளது.

gol

தங்கத்தின் விலையில் பாரிய ஏற்றம்

March 3, 2026

சர்வதேச சந்தையில் நிலவி வரும் போர் பதற்றங்கள் மற்றும் பொருளாதார மாற்றங்கள் காரணமாக, உள்நாட்டிலும் தங்கத்தின் விலையில் ஏற்றம் ஏற்பட்டுள்ளதாக

jail

பெட்ரோல் பதுக்கிய தொழிலதிபர் கைது

March 3, 2026

பெட்ரோல் சேமித்து வைத்திருந்த பேருவளை, வலத்தர பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் திங்கட்கிழமை (02) அன்று பேருவளை பொலிஸாரால் கைது

mark

13ஆம் திகதி விசாரணைக்கு வருகிறது கனேடிய பிரதமரை சமூக வலைத்தளத்தில் மிரட்டியவர் மீதான வழக்கு

March 3, 2026

வின்னிபெக்கைச் சேர்ந்த ஒரு நபர், பிரதமர் கனேடிய பிரதமர் மார்க் கேர்னிக்கு எதிராக மிரட்டல்கள் வெளியிட்டதாகவும், யூதர்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு

sol

கனேடிய சோலார் நிறுவனங்களால் கிராமப்புற ஆபிரிக்காவுக்கு மின்சாரம்

March 3, 2026

கனேடிய சோலார் நிறுவனங்கள் புதுமையான தீர்வுகளை பயன்படுத்தி கிராமப்புற ஆபிரிக்காவிற்கு மின்சாரம் கொண்டு வருகின்றன சோலார் சக்தியால் இயங்கும் பேட்டரி

fi

மத்திய மலைநாட்டின் வனப்பகுதிக்கு தீவைப்பு : குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

March 3, 2026

மத்திய மலைநாட்டின் நுவரெலியா மாவட்டத்தில் தற்போது நிலவி வரும் கடும் வெப்பமான வானிலை காரணமாக பல்வேறு பகுதிகளில் வறட்சி நிலவுகிறது.

in wo

சர்வதேச மகளிர் தின ஒத்திவைப்பு வேளை விவாதம்

March 3, 2026

ராளுமன்றம் மார்ச் இன்று முதல் 06ஆம் திகதி வரை கூடவிருப்பதாகப் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார். கடந்த

nats

நட்சத்திர ஆமைகளை கடத்த முயன்ற இருவர் கைது

March 3, 2026

சுமார் ஒரு கோடியே 35 இலட்சம் ரூபாய் பெறுமதியான நட்சத்திர ஆமைகள் 25 ஐ, சட்டவிரோதமான முறையில் மலேசியாவிற்கு கடத்த

ev

ஏவுகணைத் துண்டுகள் விழுந்ததில் இலங்கைப் பெண் காயம்

March 3, 2026

இஸ்ரேலின் பீயேர்ஷெபா (Beersheba) குடியிருப்புப் பகுதி மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலின் பாகங்கள் வீட்டின் மீது விழுந்ததில் இலங்கை

har

ஹார்முஸ் ஜலசந்தியை மூடிவிடுவதாக ஈரான் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

March 3, 2026

மத்திய கிழக்கில் போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், உலகின் மிக முக்கியமான கடல்வழிப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை மூடிவிடுவதாக ஈரான்

soc

பிரித்தானியாவில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதற்கு கட்டுப்பாடு?

March 3, 2026

வரவிருக்கும் ஒக்டோபர் மாதம் முதல், 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதற்கு கட்டுப்பாடு விதிக்கத் திட்டமிட்டுள்ளதாக பிரித்தானிய அரசு

gl

ஜி.எல். பீரிஸ் ஜனாதிபதிக்கு அவசர கடிதம்

March 3, 2026

மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள போர் நிலைமையினால் இலங்கை எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் மற்றும் அதன் பாரதூரமான தன்மை குறித்து

tn

இலங்கை கடற்படையினர் தமிழக பக்தர்களை தாக்கியுள்ளதாக குற்றஞ்சாட்டல்!

March 3, 2026

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழாவின் போது, இலங்கை கடற்படையினர் தமிழக பக்தர்களை தாக்கியுள்ளதாக தமிழகக் கச்சதீவு பாரம்பரிய